Daily Archive: July 17, 2017

அஞ்சலி. ஆர்.பி.சாரதி
  தமிழில் பொதுவாக மொழியாக்கங்கள் சகிக்கமுடியாமலிருப்பதே வழக்கம். என் வீட்டில் அப்படி ஆசைப்பட்டு வாங்கி வாசிக்கமுடியாமல் வைத்திருக்கும் பல நூல்கள் உள்ளன. ஆங்கிலம் நம்மவருக்கு ஓரளவேனும் தெரிகிறது, தமிழ்தான் தெரியவில்லை. ஆங்கிலத்தின் கூட்டுச்சொற்றொடர்களை எழுவாய்- பயனிலையுடன் தமிழில் எழுத முடிவதில்லை. மூலத்தைப்புரிந்துகொள்ளாமல் மொழியாக்கம் செய்வது இன்னொரு காரணம். தமிழில் பொதுவாக முந்தையதலைமுறையினரே நன்றாக மொழியாக்கம் செய்கிறார்கள். வயது குறையக்குறைய மொழியாக்கத்தின் தரம் வீழ்ச்சி அடைகிறது. இது நம் கல்வியில் வந்த வீழ்ச்சியினால் என நினைக்கிறேன். தமிழில் மிகநல்ல …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100623

புழங்குதல்
கடந்த ஏழுநாட்களாக அருண்மொழி டெல்லியில் இருக்கிறாள். சைதன்யாவும் உண்டு. அவள் தோழி இன்னொரு சைதன்யாவும் அவள் அம்மாவும் என மொத்தம் நான்குபேர். நான்கு பெண்கள் மட்டும் என்பதற்கான அனைத்துக்கொண்டாட்டங்களும். சின்னப்பதற்றங்களுடன் நான் ஃபோனில் அழைத்தால் “என்னை தொந்தரவு செய்யாதே…நான் சுதந்திரப்பறவை” என்கிறாள். ஆகவே நான் அவ்வப்போது குறுஞ்செய்தி அனுப்புவதுடன் சரி அருண்மொழிக்கு கொஞ்சம் பெரிய கண். அந்தக்காலத்தில் நான் கண்ணாத்தா என்றெல்லாம் அழைப்பதுண்டு. புதியவிஷயங்களைக் கண்டால் இன்னும் கொஞ்சம் பெரிதாகும். அயல்நிலங்களில் திருதிருவென்றே விழிப்பாள். ஆனால் எப்படியோ …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100560

கோவை புத்தகக் கண்காட்சி,விருது,சொற்பொழிவு
கோவையில் 21-7-2017 முதல் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. சிறப்பு விருந்தினராக நான் கலந்துகொள்கிறேன். 21 ஜூலை மாலை ஆறுமணிக்கு  நிகழும் விழாவில் விழாவில் கொடீஷியா வழங்கும் வாழ்நாள்சாதனைக்கான இலக்கிய விருது எனக்கு அளிக்கப்படுகிறது. இவ்விருது எனக்கு ஒருவகையில் முக்கியமானது. சென்ற சிலநாட்களாக நான் இரண்டு விஷயங்களுக்காக நண்பர்களிடம் நிதிகோரியிருந்தேன். ஊட்டி நித்யா குருகுலத்தில் சுற்றுச்சுவர் அமைப்பதற்காக. இன்னொன்று சிறுநீரகக் கோளாறால் அவதிப்படும் இலக்கிய நண்பருக்காக. நண்பர்களின் உதவிகள் போதிய அளவில் இல்லை என்பதை வருத்தத்துடன் சொல்லவேண்டியிருக்கிறது. என் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100523

பனிமனிதன் -கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். இந்த வாரம், அமெரிக்காவின் சுதந்திர தினத்தைமுன்னிட்டு (ஜூலை 4), தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை. இப்படிப்பட்ட நாட்களில்தான் உங்களின் நாவலில் ஒன்றைப் படித்துவிடுவேன். நேற்று ‘பனி மனிதன்’ படித்தேன். “ஒளியைக் குறைத்துக்காட்டும் கறுப்புக் கண்ணாடிகள் போட்டிருந்தார்கள்” என்று அழகு தமிழில் கதையோடு கதையாக அறிவியலைக் கற்பிக்கும் நாவல். குழந்தைகளுக்கான நாவல் என்றாலும், நீங்கள் முன்னுரையில் கூறியிருப்பதுபோல, பெரியவர்களும் அறிந்துகொள்ளும் அளவு நிறைய விஷயங்கள் பொதிந்துள்ள நாவல். தமிழில் இருக்கும் ஆளுமை அல்லாமல், …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100184

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 54
53. உடனுறை நஞ்சு மீண்டும் ஒரு தோல்வி. ஆனால் விராடருக்கு அது உவகையளிப்பதாகவே இருந்தது. மீசையை நீவியபடி “தோல்வியை நான் முன்னரே உணர்ந்திருந்தேன், குங்கரே. ஆனால் இவ்வண்ணம் தோற்பேன் என நினைக்கவில்லை. இது ஒரு கல்வியே” என்றார். குங்கன் சிரித்து “தோல்விகளை அவ்வாறு எண்ணிக்கொண்டால் துயரில்லை” என்றான். “நான் இந்த நாட்டில் எவரிடமும் சூதில் இனி தோற்கப்போவதில்லை. அது என் வெற்றி. நான் எத்தனை முயன்றாலும் உங்களை வெல்லப்போவதில்லை, ஆகவே அது தோல்வியும் அல்ல” என்றார் விராடர். …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100510