Daily Archive: July 15, 2017

வசந்தபாலனின் வெற்றி
  தமிழக அரசின் திரைவிருதுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அரசுத்துறைகள் ஒவ்வொன்றும் மையத்தை நம்பியிராமல் உரியமுறையில் சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கியிருக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. கல்வித்துறைச் செயல்பாடுகளைப்பற்றி மிகவும் பாராட்டுக்கள் எளிய மக்களிடமிருந்தே வரத்தொடங்கியிருக்கின்றன.   2009க்கான திரைவிருதுகளில் சிறந்த நடிகை, இயக்குநர் ஆகிய பிரிவுகளில் அங்காடித்தெரு விருதுபெற்றுள்ளது. 2104க்கான விருதுகளில் காவியத்தலைவன் 9 விருதுகளைப் பெற்றுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது சித்தார்த்துக்கும், வில்லன்நடிகருக்கான விருது பிருதிவிராஜுக்கும். சிறந்த குணச்சித்திரநடிகருக்கான விருது நாசருக்கும் குணச்சித்திரநடிகைக்கான விருது குயிலிக்கும் காவியத்தலைவனுக்காக …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100487

கலைப் பயிற்சிவகுப்பு: ஏ.வி மணிகண்டன்
  பெங்களூரை சேர்ந்த மணிகண்டன் ஒரு புகைப்படக் கலைஞர், இவர் ஜெயமோகன் தளத்தில் எழுதிய புகைப்படம் கலையா ?, இசையின் கவிதைத் தொகுப்பிற்கான மதிப்புரை , சபரிநாதனின் கவிதைகளின் மீதான மதிப்புரை ஆகியவை ஆழ்ந்து வாசிக்கத்  தக்கது.   இவர் 16-7-2017 அன்று ஈரோடு ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளியில் காலை 10 முதல் மாலை 5 வரை சுமார் 25 ஆர்வலர்களுக்கு ஒரு நாள் கலை அறிமுகப் பட்டறையை நடத்த இருக்கிறார். ஒரு lcd உதவியுடன் இதை செய்கிறார்.   கலையின் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100501

மலேசியா -சிங்கப்பூர் குடியேற்றம்
அன்புள்ள ஜெ, சிங்கை நூலகத்தில் இந்த ‘கேரளாவிலிருந்து சிங்கப்பூருக்கு’ என்ற வரலாற்றுப்பதிவு நூலை பார்த்துக்கொண்டிருந்தபோது, காசர்கோட்டிலிருந்தும் இடுக்கியிலிருந்தும் யாரும் சிங்க்கப்பூருக்கு புலம்பெயராததைப்போல ஒரு தோற்றம் கிடைத்தது. மற்ற மாவட்டங்கள் அனைத்திலிருந்தும் இங்கு வந்துள்ளார்கள். இது தற்செயலா அல்லது நீங்கள் அறிந்த சிறப்புக்காரணங்கள் ஏதும் உண்டா? நன்றி, சிவானந்தம் நீலகண்டன் அன்புள்ள சிவானந்தம் நீலகண்டன், சிங்கப்பூர் குடியேற்றம் என்றால் அது 1950 க்குப்பின்னர். அதற்கு முன்னர் 1900 முதல் மலாயா குடியேற்றம். அதை இரண்டாகப்பிரித்துப்பார்க்கலாம். மலாயாக் குடியேற்றம் நிகழ்ந்த …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100344

அட்டை -கடிதம்
  அன்புள்ள ஜெ   அட்டைகள் நூறுநாற்காலிகளுக்கு மலையாளத்தில் வரையப்பட்டவற்றில் மிகச்சிறந்த ஓவியம் இது. ஒரு நிகழ்ச்சியில் காட்சிக்கு வைத்திருந்தார்கள். ஒரு பதிப்பகம் இதை அட்டையாகவும் போட்டிருந்தது என நினைக்கிறேன். என்ன ஒரு அற்புதமான வாசிப்பு என நினைத்துக்கொண்டேன்   அருண் உங்களது அட்டைகள் பதிவை வாசித்ததும் யானை டாக்டர் கதையையும் நூறு நாற்கலிகள் கதையையும் ஒருமுறை கூட வாசித்தேன்.உடம்பு அதிர்ந்து கொண்டே இருக்கிறது.சக உயிர்கள் குறித்த இளக்காரம் மனிதனை போல் வேறு உயிர்களுக்கி இருக்குமோ என்னவோ?யானை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100479

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 52
51. குருதிக்கடல் சம்பவன் விழித்தெழுந்தபோது எங்கிருக்கிறான் என்பதை அறியாது ஒருகணம் திகைத்தான். புரண்டு கையூன்றியதும் அருகே ஒழிந்த ஈச்சம்பாயைக் கண்டு அனைத்தையும் உணர்ந்து எழுந்து நின்றான். “மேகரே… மேகரே” என்று அழைத்தான். மேகன் அஸ்வகனுடன் அப்பால் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். அவன் எழுந்து அருகே வந்து “அதற்குள் விழித்துக்கொண்டுவிட்டீர்களா?” என்றான். “ஆசிரியர் எங்கே?” என்றான் சம்பவன். “இங்கே…” என்றபின் நோக்கிய மேகன் “இல்லை… சென்றுவிட்டார்… நாங்கள் வெளியேதான் பேசிக்கொண்டிருந்தோம்” என்றான். சம்பவன் ஒழிந்த பாயை சிலகணங்கள் பார்த்துவிட்டு “அவர் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100462