Daily Archive: July 14, 2017

எங்கெங்கு காணினும் சக்தியடா..
அன்பின் ஜெ, மழைப்பயணம் சென்று இன்று மீள்வீர்கள் எனச் சொன்னார்கள். நாளை அழைக்கிறேன். கடந்த சில வருடங்களாக, மரபு சாரா எரிசக்தித் துறையின் பாய்ச்சல்களை படித்து வருகிறேன். அதன் சாத்தியக் கூறுகள் எனக்குள் பெரும் கனவுகளை உருவாக்குகின்றன. அந்தத் தொழிலின் பாய்ச்சல், பெரும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. நான் தொழில் நுட்பன் அல்லன். ஒரு வியாபார நோக்கில், இதை அணுகுகிறேன். சூழியல் நோக்கிலும். இது போன்ற வாய்ப்பு, மனித குலத்துக்கு பல காலத்துக்கு ஒரு முறைதான் கிடைக்கும் எனத் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100239

அட்டைகள்
மலையாளத்தில் பாஷாபோஷினி ஆண்டுமலரில் வெளிவந்த யானைடாக்டர் குறுநாவலை பத்து பதிப்பகங்கள் வெளியிடவிருக்கின்றன. மாத்ருபூமி பதிப்பு வெளிவந்துவிட்டது. மதிப்புரைகளும் பாராட்டுரைகளும் கொட்டிக் கொண்டிருக்கின்றன. ஒரு சேவை நிறுவனமான சைக்கிள் புக்ஸ் வெளியிட்டுள்ள எளிமையான முகப்பு ஓவியம் என்னை மிகவும் கவர்ந்தது. நூறுநாற்காலிகள் இருபதுக்கும் மேற்பட்ட பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் அட்டைகளை பார்க்கையில் அதிலிருக்கும் வேறுபட்ட வாசிப்புகள் ஆச்சரியமூட்டுகின்றன. தொடக்கத்தில் அந்நாவல் நாற்காலிகளின் கதையாக வாசிக்கப்பட்டு மெல்ல அன்னையின் கதையாக ஆகிவிட்டதைக் காணமுடிகிறது. யானை டாக்டர் எடுத்த எடுப்பிலேயே யானைக்கும் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99831

மேற்கோள் திரிபு, அம்பேத்கர்…
அன்புள்ள ஜெ, உங்கள் பதில் பார்த்தேன். [மேற்கோள்திரிபு,அம்பேத்கர், அரவிந்தன் நீலகண்டன் ] // அந்த அம்சத்தை அவர் இந்துத்துவ அரசியலுக்கும் சாதகமானவர் என நீட்டிக்கொள்வதற்கான மேற்கோள்பயிற்சியே அரவிந்தனின் முதற்கட்டுரை. அதை மேற்கோள்களால் குகா மறுக்கையில் மேலும் மேற்கோள்களால் அதை நிறுவ மீண்டும் முயல்கிறது மேலதிகக் கட்டுரை. // என்பது சரியல்ல. உண்மையில் அம்பேத்கர் இந்துத்துவ இணைப்பு என்பது வெறும் மேற்கோள்களுடன் நின்றுவிடுவதல்ல. அதற்கு விரிவான பின்னணி உண்டு. அதையும்  அ.நீ தனது கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார். ஆரிய சமாஜம், …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100464

உலகவானொலி
ஜெ   இந்த இணைப்பை உங்கள் பார்வைக்குக் கொண்டுவருகிறேன். உலக வரைபடத்தில் உள்ள எந்த ஒரு புள்ளியை தொட்டாலும் அந்த இடத்திலுள்ள ரேடியோ ஒலிக்கிறது. இந்தியாவில் மிகப்பெரும்பாலானவை இஸ்லாமிய கிறித்தவ வானொலிகள் எனத் தெரிகிறது   ஜெயக்குமார் http://radio.garden/live/
Permanent link to this article: https://www.jeyamohan.in/100422

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 51
50. பொன்னும் இரும்பும் நிலையழிந்து கிளையிலிருந்து விழப்போய் அள்ளிப்பற்றிக்கொண்டு விழித்தெழுந்தபோதுதான் தான் துயின்றுவிட்டிருந்ததை கஜன் உணர்ந்தான். எப்படி துயின்றோம் என்றே அவனுக்குத் தெரியவில்லை. அத்தனை அச்சமூட்டும் காட்சிகளைக் கண்டு நடுங்கி உடலொடுக்கி ஒளிந்திருந்தபோதும் துயில் வந்து சூழ்ந்துகொண்டிருக்கிறது. காலைமுதல் கடுமையான உடற்பணி. முந்தைய நாள் இரவுக்காவல். ஆனாலும் துயின்றதில் ஏதோ ஒரு விந்தை இருக்கிறதென்றே தோன்றியது. உண்மையில் துயின்றானா? வேறெங்கோ இருந்தான். அங்கே இருண்ட வானில் மின்னல்கள் இடியோசையுடன் வெட்டி வெட்டி அதிர காகங்கள் ஓசையற்ற சிறகுகளுடன் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100450