Daily Archive: July 9, 2017

இடங்கை இலக்கியம்

tho mu si
  முப்பதாண்டுகளுக்கு முன் ஆவேசமாக இலக்கியம் பேசி விடியவைத்த நாட்களில் ஒரு முறை ஒரு நண்பர் பூமணி ஒரு இடதுசாரி எழுத்தாளர் என்றார். அறையில் அமர்ந்திருந்த பிறிதொரு நண்பர் மெல்லிய மதுமயக்குடன் எழுந்து ஆவேசமாகக் கூச்சலிடத்தொடங்கினார். “எந்த அடிப்படையில் அவரை இடதுசாரி என்று சொல்கிறீர்கள்? அவர் என்ன வேலை செய்கிறார் தெரியுமா? அவர் கூட்டுறவுத்துறையில் அதிகாரி” என்றார். நான் “ஏன், அதிகாரிகள் இடதுசாரிகளாக முடியாதா?” என்றேன். அவர் என்னை நோக்கி மேலும் ஆவேசமாக அணுகி “இருக்கலாம். ஆனால் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99655

குமரகுருபரன் -சில குறிப்புகள்
குமரகுருபரனின் இந்த தனிப்பட்ட குறிப்புகளை ஒருவர் எனக்கு அனுப்பியிருந்தார். வாசிக்கையில் ஒரு பெரிய தனிமையை அடைந்தேன். முப்பதாண்டுகளுக்கு முன் ஆற்றூர் சொன்னார். ‘உன்னைவிட இளையவர்கள் சென்று கொண்டிருப்பதை காண ஆரம்பிப்பாய் என்றால் முதுமை அறிவிக்கப்பட்டுவிட்டது என்று பொருள்’ அந்த துயரை இப்போது மிக அறிகிறேன். ஒருவகையான குற்றவுணர்ச்சியும் கசப்பும் சூழ்கிறது இக்குறிப்புகளில் தெரியும் குமரகுருபரனை நான் சந்தித்ததே இல்லை. பிரியமோ மரியாதையோ கொண்ட ஓரு விலக்கம். ஓரிரு சொற்கள், புன்னகைகள். நான் அவரை இனி எங்கேனும் சந்திக்க …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100220

பச்சைக்கனவு –கடிதங்கள் 3
திரு. ஜெயமோகன் அவர்களுக்கு அன்புடன் நான்… பச்சைக்கனவு என்று தலைப்பைப் பார்த்ததுமே லா.ச.ராவின் கதையில் சென்றது என் எண்ணம். திருக்குறள் உரையில் “விசும்பின் துளி’ என்ற குறளை விளக்கும்போது வாகமனைப்பற்றியும் உங்கள் மழைப்பயணம் பற்றியும் கூறியிருப்பீர்கள். அப்போதிருந்தே அதன் பசுமை மனதில் குடிகொள்ளத்தொடங்கியது. உங்களின் பயணக்கட்டுரை என் இந்த நாளை பலமணி நேரம் பசுமையோடு தேக்கி என்னைத் தன்னுள் வைத்துக்கொண்டிருக்கிறது. அந்த மகத்தான அனுபவம் தந்தமைக்கு நன்றி. அன்புடன் நா. சந்திரசேகரன் *** அன்புள்ள சந்திரசேகரன் பச்சைக்கனவு …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100276

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 46
45. நீர்ப் பசுஞ்சோலை சோலைத்தழைப்புக்கு மேல் எழுந்துநின்ற தேவதாருவின் உச்சிக்கவட்டில் கட்டப்பட்டிருந்த காவல்மாடத்தில் மடியில் வில்லையும் இடக்கையருகே அம்புத்தூளியையும் வைத்துக்கொண்டு கஜன் பின்உச்சிவெயில் நிறம் மாறுவதை பார்த்துக்கொண்டிருந்தான். காற்றில் அக்காவல்மாடம் மெல்ல ஆடியது. அவன் அங்கு அமர்ந்த முதல் நாள் காடு கோதையில் செல்லும் பெருங்கலம்போல் மெல்ல அசைவதாகத் தோன்றி உளநடுக்கு கொண்டான். எழுந்து நின்று கண்கள் சுழல தலை நிலையழிய இருமுறை குமட்டினான். அவன் அருகே நின்றிருந்த தீர்க்கன் தன் பெரிய கைகளால் அவன் புயங்களைப்பற்றி …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100228