Daily Archive: July 6, 2017

ஆத்மாநாம் விருதுகள்
கவிஞர் ஆத்மாநாம் பெயரில் வழங்கப்படும் கவிதைவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கவிதைக்கான விருது பெருங்கடல் போடுகிறேன்’ தொகுப்புக்காகக் கவிஞர் அனார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது மொழியாக்கத்திற்கான விருது தாகங்கொண்ட மீனொன்று தொகுப்புக்காக என்.சத்யமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்படுகிறது ஈழப் பெண்கவிஞர்களில் ஆழியாள், அனார், பஹீமா ஜகான் ஆகிய மூவரும் முக்கியமானவர்கள் என்பது என் எண்ணம். அவர்களில் அனார் மிகுந்த தீவிரத்துடன் தொடர்ந்து எழுதிவருகிறார். அனார் குறித்து முன்னரும் எழுதியிருக்கிறேன் என்.சத்யமூர்த்தி ஜவகர்லால்நேரு பல்கலை மாணவராக இருக்கையிலேயே எனக்கு அறிமுகமாகி இன்றும் நீடிக்கும் நண்பர். …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100165

வேதா நாயக் – இலக்கிய ஓவியங்கள்
ஜெ இணையத்தில் வேதா நாயக் என்பவர் இலக்கியநூல்களின் தலைப்புக்களை ஒட்டி வரைந்து, புகைப்படக்கலவை செய்து உருவாக்கியிருக்கும் ஓவியங்கள் சிலவற்றை அனுப்பியிருக்கிறேன். முகநூல் ஒரு வெட்டி அரட்டைக்கூடம் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறது. ஆனால் இதைப்போன்ற தீவிரமான முயற்சிகளும் நிகழ்கின்றன. இவை மிகப்பெரிய அளவிலே படைப்புக்களை மக்களிடம் கொண்டுசென்று சேர்க்கின்றன. குறிப்பாக இளம் வாசகர்களிடம் தயா முகநூல் இணைப்பு https://www.facebook.com/vedha.nayak.5?hc_ref=SEARCH&fref=nf பத்மவியூகம்  ரப்பர் நீலம்கொற்றவைடார்த்தீனியம்பின்தொடரும் நிழலின் குரல் லங்காதகனம்மேற்குச்சாளரம் அன்புள்ள தயா, அற்புதமான கற்பனைகள். இலக்கியமறிந்த ஓவியக்கலைதெளிந்த கலைஞன். …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99562

வெற்றி தெலுங்கில்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம், ‘வெற்றி’ சிறுகதையை ‘கெலுபு‌'(gelupu) என்று தெலுங்கில் மொழிபெயர்த்தேன். இந்த மாத ‘ஈமாட்ட’ (eemaata.com) இலக்கிய இதழில் வெளிவந்தது. ஆசிரியர் குழுவிற்கு கதை மிகவும் பிடித்தது என்று தெரிவித்தனர். கதையின் மொழிபெயர்ப்பு லிங்க்கை தங்களின் வலைப்பூவில் பதிவிடும்படி வேண்டுகிறேன். தமிழ் வாசகர்களின் வழியாக அவர்களின் தெலுங்கு நண்பர்களுக்கு இந்தக் கதை சென்றடையும் வாய்ப்புள்ளது. http://eemaata.com/em/issues/201707/12369.html?allinonepage=1 தெலுங்கு வாசகர்களிடமிருந்து வரும் கருத்துக்களை இந்த மாத இறுதியில் தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். கதையை மொழிபெயர்க்க அனுமதியளித்தமைக்கு மீண்டுமொருமுறை  …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100123

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 43
42. சூரணங்கு முக்தன் அரண்மனை வாயிலை அடைந்ததும் அங்கே அவனுக்காகக் காத்திருந்த உத்தரனின் அகத்தளக் காவலன் கஜன் ஓடி அருகே வந்து “மூத்தவரே, உங்களை உடனே அழைத்து வரும்படி இளவரசரின் ஆணை” என்றான். “என்னையா?” என்று திகைப்புடன் கேட்டபடி புரவியிலிருந்து இறங்கினான் முக்தன். “உங்களைத்தான்” என்றான். “ஆனால் உங்கள் இல்லம் எனக்கு தெரியவில்லை. அதை எளியவனாகிய நான் தேடிக் கண்டுபிடிப்பதும் இயல்வதல்ல. எப்படியும் தாங்கள் இங்கு வருவீர்கள் என்று காத்திருக்கிறேன். நல்லவேளை வந்துவிட்டீர்கள்” என்றான். “ஏன் ஒற்றர்களை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99908