Daily Archive: July 3, 2017

மு.வ
அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு, டாக்டர் மு.வா பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? (புனைவுகளை தவிர்த்துவிடுங்கள்) அவரது மொழி ஆராய்ச்சி, கல்வித்துறை பணிகள் குறிப்பிட தகுந்ததுதானா? தங்கள் உளமறிந்த வாசகன், கு.மாரிமுத்து அன்புள்ள மாரிமுத்து மு வரதராசன் அவர்களின் பங்களிப்பு மூன்றுதளத்தில். அவர் ஒரு கல்வியாளர். இலக்கிய ஆராய்ச்சியாளார். நாவலாசிரியர். இந்த மூன்று கோணங்களிலும் அவரைப்பற்றி விவாதிக்கலாம். மு.வவின் முதன்மையான பணி என்பது கல்வியாளர் என்ற அளவிலேயே. பிற பணிகளை அவரது கல்விப்பணியின் ஒரு பகுதியாகக் காண்பதே பொருத்தமானது. …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/8739

இலக்கியநட்பு, புகைப்படங்கள்…
அன்பின் ஜெ.மோ. அவர்களுக்கு “எந்த ஒரு படைப்பிலும் ஈடுபடாமல், எந்த ஒரு படைப்பாளியிடமும் ஆத்மார்த்தமான உறவு இல்லாமல், எக்கருத்தையும் எதிர்கொள்ளாமல், வம்புகளை மட்டுமே பேசி புழங்கி வம்புகளின் பெருந்தொகுதியாக இருக்கும் சிற்றிதழாளர்கள் பலர் உள்ளனர். அது ஒரு வகையான மாபெரும் பிறவி வீணடிப்பு என்றே கருதுகிறேன்.” [ஒப்பீடுகளின் அழகியல் -தி. ஜானகிராமன் ] மேற்படியான தங்களின் வரி இந்த ரம்ழான் மாத நோன்பு பிடிக்க எழுந்திருக்கும் இந்த அதிகாலைப் பொழுதில் என் 25 / 30 ஆண்டுகால …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99891

அபிப்பிராய சிந்தாமணி -கடிதங்கள்
அன்புள்ள  ஜெயமோகன், பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புத்தகத்தைப் படித்து ரசித்து ரசித்து சிரித்து மகிழ்ந்து இன்னும் சிரித்துக்கொண்டேஇருக்கின்றேன். அடேங்கப்பா! என்ன ஒரு கிண்டல்,நக்கல்,பகடி,எதார்த்தம். தென்குமரித் தமிழ் விளையாட்டு.அற்புதம்.கெட்ட வார்த்தைகள் வெகுஇயல்பு.எங்க ஊர் மக்கள் மாதிரியே சில குணாதிசயங்கள். இரண்டு மூன்று நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த இரவில் உங்கள்  எழுத்து  உந்திய சிரிப்பு சத்தம் கேட்டு என் தம்பி ஓடிவந்து  என்ன ஆயிற்று என்று கேட்டு அவனுக்கும் சிலவற்றைப்படித்துக்காட்ட ஒரே கலாட்டா. அதுவும் அந்த ஏரிக்கரையின்மேலே …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100002

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 40
39. நிலைக்கல் “ஒவ்வொரு தருணத்திலும் வாள்முனையில் குருதித்துளி என வரலாறு ததும்பி திரண்டு காத்திருக்கிறது. ஓர் அசைவு, ஒரு காற்று போதும்” என்று விறலி சொன்னாள். “அவ்வாறு நிகழ்ந்தது அந்த ஊண்மனைக் கொலை. நளன் வாள்தாழ்த்திய பின்னரே என்ன நிகழ்ந்தது என உணர்ந்துகொண்டார். மேலும் முன்னகர்வதே வழி என அவர் வாள் அவரிடம் சொன்னது. அவர் ஆணைக்கேற்ப காளகக்குடியினர் உணவை அள்ளி வாயிலிட்டு உண்ணத் தொடங்கினர். பெரும்பாலானவர்களுக்கு அன்னம் இறங்கவில்லை. மூச்சு திணறினர், இருமினர். நீரை எடுத்துக் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99793