Daily Archive: July 2, 2017

பார்ப்பனன் என்னும் சொல்
அன்புள்ள ஜெயமோகன், ‘பிராமணர்களின் சாதிவெறி’ என்ற உங்கள் பதிவில் உள்ள இந்த வரி முக்கியமானது, “ஆனால் பெரியாரிய மூர்க்கம் என்ன செய்கிறது? அவர்கள் அத்தனைபேரையும் அப்படியே பழைமைவாதத் தரப்பாக பார்த்து கண்மூடித்தனமாக வசைபாடுகிறது. அவர்களில் ஆக நவீனமானவர்களைக்கூட அது ‘பார்ப்பனர்கள்’ என இழிவுசெய்கிறது.” சுபவீ ‘பார்ப்பான்’ என்பது வசைச் சொல் அல்ல என்கிறார். உங்கள் கட்டுரையில் நீங்கள் ‘பிராமணர்கள்’ என்றே எழுதியுள்ளீர்கள். மேலும், திராவிட இயக்கத்தினரின்  பார்வையில் வந்து விழும் வசைகளைச் சொல்லும் போது ‘பார்ப்பான்’ என்று …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99998

அமுதம் – கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, “அமுதமாகும் சொல்“ சமீபத்தில் படித்தேன். அது தந்த ஆச்சரியங்களில், அதிசயங்களில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கிறேன். ஒரு சொல் திறந்து ஒரு பிரபஞ்சமாக விரியும் என்றால், நீங்கள் இதுவரை எழுதிய, பேசிய சொற்கள் எத்தனை எத்தனை பிரபஞ்சங்களை வாசகர்களுக்கு திறந்து காண்பித்திருக்கும் என்பதை நினைத்தாலே பிரமிக்கிறது. இது போன்ற எழுத்துக்களை ஒருஇருபது வருடம் முன்பே படித்திருக்க வேண்டும் என்ற ஆதங்கம் முதலில் எழ, பிறகு இப்போதாவது படிக்க முகூர்த்தம் வாய்த்ததே என்று மகிழ்ச்சியடைந்தேன். …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99730

இசையும் மொழி
அன்பு ஜெ., ”நான் எண்ணும் பொழுது…” – எனக்கும் மிகவும் பிடித்தமான பாடல். குறிப்பாக, பயணங்களில் கேட்பேன். அப்பாடலின் மூலப் பிரதியாக ஹிந்தியில் வந்த “நா ஜியா லாகே நா”-வைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால அதற்குமான மூலப் பிரதி ’சலீல்தா’வின் தாய்மொழியான வங்காளத்தில் (அதே லதா பாடியது) “நா மொனோ லாகே நா” என்பதாகும். சலீல்தா அமைத்த மெட்டுக்களில் மிக ஆத்மார்த்தமான ஒன்றாக இப்பாடலை, அதிலும் அதன் பல்லவியை உணர்கிறேன். இத்தகவலைச் சுட்டிக்காட்டுவதன் பின்னணி, என்னதான் இசைக்கலைஞன் மொழிகளைக் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99882

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 39
38. முகில்பகடை அரசவைக்கு அருகே இருந்த சிற்றறையில் விராடரும் அவருடைய அகம்படியினரும் அரசிக்காக காத்துநின்றிருந்தனர். பேரரசி வருவதைப் பார்த்து விராடரின் கோல்காரன் கையசைத்தான். அப்பால் பேரவையில் மங்கலஇசையும் வாழ்த்தொலிகளும் முழங்கின. அங்கிருந்த அமைச்சர் அழைக்க கோல்காரன் சீரடி வைத்து முன்னே சென்று அவைக்குள் புகுந்து அறிவிப்புமேடைமேல் வெள்ளிக்கோலைச் சுழற்றி “நிஷாதகுடிகளின் விராடக்கூட்டமைப்பின் தலைவர், நிஷதப் பேரரசர் மாமன்னர் மகாகீசகரின் வழித்தோன்றல், தீர்க்கபாகு அவை புகுகிறார்” என்று அறிவித்தான். வாழ்த்தொலிகளின் நடுவே இரு கைகளைக் கூப்பியபடி விராடர் நடந்து …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99819