2017 July

மாதாந்திர தொகுப்புகள்: July 2017

தேவதச்சனுக்கு விருது

கவிஞர் தேவதச்சன் அவர்களுக்கு தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக்குழுமத்தின் இந்த ஆண்டின் சிறந்த கவிதை நூலிற்கான விருது வழங்கப்படுகிறது.   அவருடைய மர்மநபர் நூலுக்கு இந்தப்பரிசு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டைஒய் எம்...

மலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…

தமிழின் முக்கியமான கவிஞரான 'பிரமிள்' எழுதிய புகழ்பெற்ற கவிதை இது காவியம். சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது இதை நான் கேரளத்தில் ஓர் இலக்கியக்கூட்டத்தில் சொன்னேன். கீழே இறங்கியதும் ஒரு வாசகர் அருகே...

’ஆனடோக்டர்’

அட்டைகள் அன்புள்ள ஜெ, ஆன டோக்டர் நூலின் இரண்டு பதிப்புக்களை இன்று பார்த்தேன். இதில் அந்த இரண்டாவது அட்டை மிகமிக அழகானது. இப்படி கிரியேட்டிவாக அட்டையை யோசிப்பவர்கள் இங்கே மிகக்குறைவானவர்கள்தான். நிற்க, இந்த நூல்களின் ராயல்டியை நீங்கள்...

கோவைப் புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்

இனிய ஜெயம்,   புத்தக சந்தையில் கையில் கிடைத்த தொகுப்பை புரட்டி கிடைத்த பக்கத்தை வாசித்தேன்.  கவிதை.   = உன் பார்வை=   நீ விரும்பிக்கூட பார்க்க வேண்டாம்; ஒரு முறை திரும்பப் பார். போதும். உன் பார்வை என் மேல் பட்டால் போதும்....

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 68

67. வாழும்நஞ்சு தமயந்தியின் உடலிலிருந்து நாகநஞ்சு முற்றிலும் அகல பதினான்கு நாட்களாயின. பாஸ்கரரின் தவச்சாலையின் பின்பக்கம் சிறிய தனிக்குடிலில் மரப்பட்டைப் பலகையில் விரிக்கப்பட்ட கமுகுப்பாளைப் பாயில் அவள் கிடந்தாள். பாஸ்கரரின் மாணவர் பரர் அருகிருந்த...

மெய்யான பெருமிதங்கள் எவை?

தாழ்வுணர்ச்சியின் வரலாற்றுச்சித்திரம் ஜெமோ, நீ ஒரு மலையாளி. மலையாளிக்குத் தமிழ் வரலாற்றுப்பெருமிதம் தெரியாது. ஆகவேதான் மட்டம் தட்டுகிறாய். உன் வரலாற்றை இப்படி மட்டம் தட்டுவாயா? வந்தேறிய நாடு பிடிக்கவில்லை என்றால் உன் மண்ணுக்கு ஓடவேண்டியதுதானே? மருது *** அன்புள்ள மருது ஒரே...

கோவை புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்

பெரு மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு, கோவையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் இன்று தங்களைக் கண்டு ஐந்து நிமிடங்கள் உரையாடியாதை எண்ணி சொல்லிவிட முடியாத மகிழ்ச்சியில் எழுதுவதே இந்தக் கடிதம். இன்று காலையில்...

பசுமைப்புரட்சியும் பூசல்களும்

அன்புள்ள ஜெ, வணக்கம். பசுமை புரட்சி பற்றி எம்.எஸ்.சுவாமினாதனின் இந்த முக்கிய பேட்டியை பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்: கே.ஆர்.அதியமான் எம்.எஸ். சுவாமிநாதன் பேட்டி *** அன்புள்ள அதியமான், ஆம், முக்கியமான பேட்டி. ஆனால் இதில் சொல்வதையெல்லாம் பலகாலமாக சொல்லிவருகிறார். ஒப்புநோக்க வரலாற்றுணர்வுடனும் நடுநிலையுடனும்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 67

66. அரவுக்காடு திரும்பிப் பார்க்கவேண்டுமென்ற விழைவு உள்ளிருந்து ஊறி எழுந்து உடலெங்கும் மெல்லிய அதிர்வாக, விரல்களில் துடிப்பாக, கால்களில் எடையாக நளனை ஆட்கொண்டது. ஒவ்வொரு அடிக்கும் தன்னைப் பற்றி பின்னிழுக்கும் கண் அறியாத பலநூறு கைகளை பிடுங்கிப்...

பெயர்கள்

  தெரிந்த பெண் கைக்குழந்தையுடன் அருகே வந்தபோது ''ஜூஜூஜூ ....''என்று அதன் கன்னத்தைத் தட்டி குட்டிக்கன்னம் உப்ப முறைக்கபப்ட்ட பின் அவளிடம் ''பிள்ளை பேரென்ன?'' என்றேன். ''பாகுலேயன் பிள்ளை'' என்றாள். ஒருகணம் முதுகெலும்பில் ஒரு...