Monthly Archive: July 2017

தேவதச்சனுக்கு விருது
கவிஞர் தேவதச்சன் அவர்களுக்கு தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக்குழுமத்தின் இந்த ஆண்டின் சிறந்த கவிதை நூலிற்கான விருது வழங்கப்படுகிறது.   அவருடைய மர்மநபர்[உயிர்மை] நூலுக்கு இந்தப்பரிசு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டைஒய் எம் சி. ஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் இன்று [ 31- 7-2017] மாலை விருது விழா   தேவதச்சனுக்கு வாழ்த்துக்கள்
Permanent link to this article: https://www.jeyamohan.in/101000

மலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…
தமிழின் முக்கியமான கவிஞரான ‘பிரமிள்’ எழுதிய புகழ்பெற்ற கவிதை இது காவியம். சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது இதை நான் கேரளத்தில் ஓர் இலக்கியக்கூட்டத்தில் சொன்னேன். கீழே இறங்கியதும் ஒரு வாசகர் அருகே வந்தார். ”நல்ல கவிதை சார் இது. ரொம்ப அருமையான கவிதை. ஆனா நீங்க முழுசா சொல்லியிருக்கலாம்” ”நான் முழுக்கவிதையையும் சொன்னேனே…” ”அப்படியா? நாலுவரிதானே இருந்தது?” ”ஆமாம்.அந்தக் கவிதையே அவ்வளவுதான்” அவர் நம்பாமல் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/344

’ஆனடோக்டர்’
அட்டைகள் அன்புள்ள ஜெ, ஆன டோக்டர் நூலின் இரண்டு பதிப்புக்களை இன்று பார்த்தேன். இதில் அந்த இரண்டாவது அட்டை மிகமிக அழகானது. இப்படி கிரியேட்டிவாக அட்டையை யோசிப்பவர்கள் இங்கே மிகக்குறைவானவர்கள்தான். நிற்க, இந்த நூல்களின் ராயல்டியை நீங்கள் ஏன் துறக்கவேண்டும்? இதை ஏன் சூழியல் அமைப்புகளுக்கு அளிக்கக்கூடாது? ஸ்ரீதர் அன்புள்ள ஸ்ரீதர், பதிப்புரிமைத்தொகையை நான் துறந்தமையால்தான் இதற்கு இத்தனை பதிப்புகள். இவற்றின் விலையைப்பார்த்தால் பெரும்பாலும் நான் துறந்த பணம் விலையில் குறைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மேலும் அதிகவாசகர்களிடம் நூல் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100935

கோவைப் புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்
இனிய ஜெயம்,   புத்தக சந்தையில் கையில் கிடைத்த தொகுப்பை புரட்டி கிடைத்த பக்கத்தை வாசித்தேன்.  கவிதை.   = உன் பார்வை=   நீ விரும்பிக்கூட பார்க்க வேண்டாம்; ஒரு முறை திரும்பப் பார். போதும். உன் பார்வை என் மேல் பட்டால் போதும். அவ்வளவுதான்.   கவிக்கு 70 வயது. சிவகங்கை காரர். தொகுப்பு முழுதும் காதல் தாண்டவம். சாம்பிள் கவிதை மேலே. அகரம் வெளியீடு. கவிஞர் பெயர் மீ. சுகுமாரன். தொகுப்பின் தலைப்பு …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100980

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 68
67. வாழும்நஞ்சு தமயந்தியின் உடலிலிருந்து நாகநஞ்சு முற்றிலும் அகல பதினான்கு நாட்களாயின. பாஸ்கரரின் தவச்சாலையின் பின்பக்கம் சிறிய தனிக்குடிலில் மரப்பட்டைப் பலகையில் விரிக்கப்பட்ட கமுகுப்பாளைப் பாயில் அவள் கிடந்தாள். பாஸ்கரரின் மாணவர் பரர் அருகிருந்த சிற்றூருக்குச் சென்று அழைத்து வந்த நச்சுமுறி மருத்துவர் மூர்த்தர் காட்டிலிருந்து பறித்து வந்த நாகஹஸ்தி, விரலிமஞ்சள், காசித்தும்பை, அருகந்தளிர், சிரியாநங்கை ஆகிய பச்சிலைகளை கட்டிச் செந்நாரம், துரிசம் ஆகியவற்றுடன் கலந்து வாழைப்பட்டை பிழிந்து எடுத்த சாற்றில் கலந்து அவள் வாயிலும் மூக்கிலும் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100984

மெய்யான பெருமிதங்கள் எவை?
தாழ்வுணர்ச்சியின் வரலாற்றுச்சித்திரம் ஜெமோ, நீ ஒரு மலையாளி. மலையாளிக்குத் தமிழ் வரலாற்றுப்பெருமிதம் தெரியாது. ஆகவேதான் மட்டம் தட்டுகிறாய். உன் வரலாற்றை இப்படி மட்டம்தட்டுவாயா? வந்தேறிய நாடு பிடிக்கவில்லை என்றால் உன் மண்ணுக்கு ஓடவேண்டியதுதானே? மருது *** அன்புள்ள மருது ஒரே ஒரு சின்ன விளக்கம். மலையாளமும், கேரளமும் உருவானது பதினேழாம் நூற்றாண்டில்தான். அதற்கு முன் கேரளமும் தமிழ்நாடே. சேரநாடு என்பார்கள். நான் பேசும் தொல்வரலாறு என்னுடைய தொல்வரலாறுதான். சரியா? நான் வாழ்வது என் பூர்வீக நிலத்தில்தான். என் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100901

கோவை புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்
பெரு மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு, கோவையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் இன்று தங்களைக் கண்டு ஐந்து நிமிடங்கள் உரையாடியாதை எண்ணி சொல்லிவிட முடியாத மகிழ்ச்சியில் எழுதுவதே இந்தக் கடிதம். இன்று காலையில் எப்போதும்போல் தங்களின் இணையதளத்தை நீர்க்கோலத்திற்காக வாசிக்கும்பொழுது தாங்கள் இன்று கண்காட்சிக்கு வரவிருப்பது குறித்து வெளியிட்டிருந்த அறிவிப்பை நான் அப்போது படித்திருக்கவில்லை. எனவே திடீரென்று தங்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்த பொழுது நான் முற்றிலும் சமநிலை இழந்துவிட்டிருந்தேன். உரையாடல் முடிந்து அந்த …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100916

பசுமைப்புரட்சியும் பூசல்களும்
அன்புள்ள ஜெ, வணக்கம். பசுமை புரட்சி பற்றி எம்.எஸ்.சுவாமினாதனின் இந்த முக்கிய பேட்டியை பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்: கே.ஆர்.அதியமான் எம்.எஸ். சுவாமிநாதன் பேட்டி *** அன்புள்ள அதியமான், ஆம், முக்கியமான பேட்டி. ஆனால் இதில் சொல்வதையெல்லாம் பலகாலமாக சொல்லிவருகிறார். ஒப்புநோக்க வரலாற்றுணர்வுடனும் நடுநிலையுடனும் பேசியிருக்கிறார். எந்த ஒரு செயல்பாட்டுக்கும் வெற்றியும் இழப்புகளும் உண்டு. அத்தனை கருத்துக்களுக்கும் மறுதரப்பு உண்டு. ஆனால் நம்மால் எதையும் வசைகளாக ஆக்கிக்கொள்ளவும் நக்கலும் நையாண்டியுமாக விவாதிக்கவும் மட்டுமே முடிகிறது. எதிர்தரப்பை மறுப்பதற்கல்ல இழிவுசெய்வதற்கும் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100921

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 67
66. அரவுக்காடு திரும்பிப் பார்க்கவேண்டுமென்ற விழைவு உள்ளிருந்து ஊறி எழுந்து உடலெங்கும் மெல்லிய அதிர்வாக, விரல்களில் துடிப்பாக, கால்களில் எடையாக நளனை ஆட்கொண்டது. ஒவ்வொரு அடிக்கும் தன்னைப் பற்றி பின்னிழுக்கும் கண் அறியாத பலநூறு கைகளை பிடுங்கிப் பிடுங்கி விலக்கி முன்னகர்ந்தான். ஏன் திரும்பி நோக்கினால் என்ன என்றது ஓர் அகம். அவள் கிடக்கும் கோலத்தைப் பார்த்தபின் செல்ல முடியாது போகலாம். சென்றாலும் அக்காட்சியாகவே அவள் நினைவில் எஞ்சலாம். திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட முடியுமா? யோகிகள் அவ்வாறு சென்றவர்களே. எய்திய …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100945

பெயர்கள்
  தெரிந்த பெண் கைக்குழந்தையுடன் அருகே வந்தபோது ”ஜூஜூஜூ ….”என்று அதன் கன்னத்தைத் தட்டி குட்டிக்கன்னம் உப்ப முறைக்கபப்ட்ட பின் அவளிடம் ”பிள்ளை பேரென்ன?” என்றேன். ”பாகுலேயன் பிள்ளை” என்றாள். ஒருகணம் முதுகெலும்பில் ஒரு தொடுகை. அப்பாவை நான் அந்நிலையில் எதிர்பார்க்கவில்லை. கன்னத்தைவேறு தட்டிவிட்டேன். ”…போய் சோலிமயிரைப் பாருடா…நாயுடே மோனே” என்று கனத்த குரலில் எக்கணமும் அது சொல்லக்கூடும் என்று தோன்றியது. ”என்னத்துக்கு இந்த மாதிரி பேரெல்லாம்?”என்றேன். ”என்ன செய்ய? இது அவருக்க அப்பா பேரு. கேக்க …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/307

Older posts «