Daily Archive: June 26, 2017

இனங்களும் மரபணுவும்
அன்பின் ஜெமோ, வணக்கம்.நான் தங்களின் படைப்புகளை கடந்த எட்டு வருடங்களாக படித்து வருகிறேன்.விஷ்ணுபுரத்தில் உள்ள தத்துவ உரையாடல்கள்தான் என்னை தூய கணிதத்தில் உள்ள dialectic ஐ அனுபவமாக உள்வாங்கி கொள்ள உதவின. நேற்றைய The hindu வில் இந்தியாவில் ஆரியர் குடியேற்றம் என்பது கருதுகோள் அல்ல, உண்மை என்பதற்கான genome தரவுகள் கண்டறியப்பட்டுள்ளது என்றும் மேலும் இந்தியா என்பது குடியேற்றங்களின் நிலபரப்பாக இருந்து வந்திருக்கிறது. மேலும்,திராவிடம் என்பது கற்பனையான கருதுகோள் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். தங்கள் கருத்தை அறிய.விழைகிறேன். …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99577

அந்திமம் -கடலூர் சீனு
இனிய ஜெயம், நேற்று இரவு வழமை போல மொட்டைமாடியில் அமர்ந்து வெண்முரசு அப்டேட் ஆகும் தருணத்துக்காக்க காத்திருந்தேன். மின்சாரம் வெட்டு. நிலவுண்டு ஒளிரும் மேகம் போர்த்திய இரவு வானம். மிக மிக மெல்லிய, இளம்பெண்களின் மேலுதட்டு வியர்வைப்பொடிப்பு மழைத்துளிகள். காற்றின்றி உறைந்த தென்னைகளின், நிழல்வெட்டு தெரு வீட்டு வடிவங்களின் உறக்கம். தெரு முனையில் நாயின் ஊளை. உள்ளே ஒரு புலன் அதன் அபயம் அபயம் என்ற விளியை உணர சென்று பார்த்தேன். எங்கள் வீட்டு வாசலில்,முதுமை எய்தி, …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99527

சிறுகதைப் போட்டி
சென்னை தினத்தை முன்னிட்டு கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டி வணக்கம். சென்னை தினம் (மெட்ராஸ் டே) சென்னையால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த கூட்டு நிகழ்வாகும். இந்நிகழ்வை முன்னிட்டு ஒரு சிறுகதைப் போட்டியை நடத்த கிழக்கு பதிப்பகம் முடிவெடுத்துள்ளது. அனைவரும் இந்த சிறுகதைப் போட்டியில் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். * சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். * சிறுகதைப் போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜூலை 20, 2017. * வெற்றி பெற்ற …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99733

தேவதேவனின் அருகே…
வணக்கம். மே 29ஆம் தேதி திருவண்ணாமலையில் நடந்த தேவதேவன் கவிதைகள் குறித்த கூட்டம். நான் பங்கேற்வில்லை. மனுஷி எழுதிய குறிப்பு மட்டுமே அந்நிகழ்வு பற்றி வாசிக்கக்கிடைத்தது. பவா செல்லத்துரை புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். கலந்துரையாடல் நிகழ்வை ஏற்பாடு செய்த தளம் அமைப்புக்கு என் அன்பும் நன்றியும். ஸ்ருதி டிவி ஏமாற்றிவிட்டது. எதிர்பார்த்ததுதான். மே 29 மதியம்தான் எனக்கு இந்நிகழ்வு பற்றித் தெரிந்தது. கொஞ்சூண்டு வருத்தம் பங்கேற்க முடியாமையால். ஆனால், மகிழ்ச்சிக்கு முன் அது தெரியாது. படங்களில் தேவதேவன் கவிதைகள் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99507

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 33
32. மின்னலும் காகமும் காகக்கொடியை அதுவரை புஷ்கரன் தேர்முனையில் சூடியிருக்கவில்லை. இந்திரபுரியின் மின்கதிர்கொடியே அவன் தேரிலும் முகப்பு வீரனின் கையிலிருந்த வெள்ளிக்கோலிலும் பறந்தது. விஜயபுரியிலிருந்து கிளம்பும்போது அவனுடன் குடித்தலைவர் சீர்ஷரும் மூத்தோர் எழுபதுபேரும் அகம்படியினரும் அணிப்படையினரும் வந்தனர். கிளம்பும்போதே எவரெவர் வரவேண்டும் என்று அங்கே சிறிய பூசல்கள் நிகழ்ந்தன. “இது ஒரு அரசச் சடங்கு. இதை நாம் மறுக்க இயலாது. ஆனால் இதை நாம் பெரிதாக எண்ணவில்லை என்றும் அவர்களுக்கு தெரிந்தாகவேண்டும். எண்ணி அழைக்கப்பட்ட எழுவர் மட்டிலும் பங்கெடுத்தால் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99622

நற்றிணை நூல்கள் ஆயுள் சந்தா திட்டம்
  நற்றிணை நூல்கள் ஆயுள் சந்தா திட்டத்தில் ரூ. 5000 செலுத்தி உறுப்பினர் ஆகுங்கள். இலக்கியவாசகரான உங்களுக்கு இதில் பல சலுகைகள் உள்ளன. உறுப்பினர்கள் நற்றிணை பதிப்பக நூல்களை 30% சலுகையில் சென்னை, மதுரை நற்றிணை அலுவலகங்களிலும் அனைத்துப் புத்தகக்கண்காட்சிகளிலும்பெற்றுக்கொள்ளலாம். ரூ.500க்கு மேல் நூல்கள் வாங்கினால் தபால் கட்டணம் இலவசம் (இந்தியாவுக்குள் மட்டும்). உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை உண்டு. உறுப்பினராகச்சேர்ந்தவுடனேயே ரூ.1000 மதிப்புள்ள நற்றிணை நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்படும். பின்னர் ஆண்டுதோறும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ரூ.1000க்கான நற்றிணை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99681