Daily Archive: June 22, 2017

கூடங்குளம், உதயகுமார், ரிபப்ளிக் தொலைக்காட்சி
அன்பான ஜெயமோகன், இன்று Republic TV கூடன்களம் உதயகுமார் பற்றின sting feature ஒளிபரப்பியதை அறிந்திருப்பீர்கள். அந்த வீடியோவும், அர்னப் கோஸ்வாமி உதயகுமாருடன் நடத்திய தொலைபேசி உரையாடலையும் இரண்டு முறைக்கு மேல் பார்த்தாயிற்று. இரண்டாவது வீடியோவில் உதயகுமார் வெகுவாகவே நிதானம் இழக்கிறார். உதயகுமாரை சந்தேகிக்கவா அல்லது இது ஒரு Media Hype என்று விட்டு விடலாமா.? அன்புடன் குமார் SR http://www.republicworld.com/s/1705/number-activismforaprice-foreign-funds-used-during-kudankulam-anti-nuke-protests https://www.facebook.com/RepublicWorld/videos/1338562252924318/ *** அன்புள்ள ஆசிரியருக்கு, இன்று ஐயா உதயகுமார் பற்றி அர்னாப் டிவி பரப்பிய …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99547

வம்பும் விமர்சனமும்
இனிய ஜெயம், ஒப்பீடுகளின் அழகியல் பதிவில்,  நீங்கள் என்னை எரிச்சல் பட்டு கடிந்து கொண்டதற்காக [அப்படி எண்ணிக்கொண்டு] , ஒய் , வாட் ஹேப்பண் , என்றெல்லாம் கேட்டு உள்வட்ட நண்பர்கள் அனுப்பிய  குறுஞ்செய்தி தாங்கி காலையில் நிரம்பி வழிந்தது எனது மொபைல்.  நண்பர்களுக்கு என் அன்பு. கிராமங்களில் இருந்து கிளம்பி வாசிப்பிற்குள் வந்த பல நண்பர்கள் எனக்குண்டு. வாசிப்பு செத்த கடலூர் எல்லையில் வாசிக்கும் மனநிலை கொண்ட எவரையும் எனது உரையாடலில் இருந்து விலகுவதில்லை . …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99582

ஒரு பதிவு
அன்புள்ள ஜெ, உங்களைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். http://itzmeakhil.blogspot.in/2017/06/blog-post.html?m=1 அன்புடன், அகில் குமார்.
Permanent link to this article: https://www.jeyamohan.in/99505

இயல் விருதுகள்
  இவ்வருடத்திற்கான இயல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது கவிஞர் சுகுமாரனுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது. [சுகுமாரனுக்கு இயல் விருது – 2016 ]தமிழிலக்கியத்தின் ஒரு காலகட்டத்தின் குரல். கவிதையில் ஒரு புதியபோக்கின் ஊற்றுக்கண். சுகுமாரனுக்கு அளிக்கப்படும் இவ்விருது தமிழ்ச்சூழல் பெருமைப்படவேண்டிய ஒரு நிகழ்வு புனைவிலக்கியத்திற்கான தமிழ்த்தோட்ட விருது சயந்தனின் ஆதிரை நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்திய இளைய படைப்பாளிகளில் அழுத்தமான இலக்கியப்படைப்புடன் தன் தனித்தன்மையை நிரூபித்தவர் சயந்தன். ஆதிரை குறித்து முன்பு சில குறிப்புகள் எழுதியிருக்கிறேன். …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99590

அம்மையப்பம், பிழை -கடிதங்கள்
வணக்கம், நான் அவ்வப்போது உங்கள் சிறுகதைகளை படிப்பதுண்டு. அப்படி படித்த ஒரு கதை – அம்மையப்பம். அதில் இட்டிலியை அம்மா எடுத்து வைப்பதாக கதை ஆரம்பித்தது. அப்போது அவள் மீன் குழம்பு ஊற்றும்பொது, ‘குழிலே குழிலே’ என்று எழுதியிருந்தீர்கள். ஜென் கதைகள் ஒன்றில்…ஜென் ஞானி ஒருவர் மாணவர்களிடையே பேச ஆரம்பிக்கலாம் என்று துவங்கும்போது, ஒரு குயில் கூவும்… அப்போது, அவர் இன்றைக்கு உங்களுக்கான பாடம் முடிந்தது என்று கூறிவிட்டு கிளம்புவார்…. அதுபோல இருந்தது அந்த ‘குழிலே … …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99488

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு– ‘நீர்க்கோலம்’ – 29
28. அன்னநிறைவு அடுமனை வாயிலில் பீமன் சென்று நின்றதுமே அடையாளம் கண்டுகொண்டனர். மடைப்பள்ளியர் இருவர் அவனை நோக்க ஒருவன் “உணவா?” என்றான். பீமன் “ஆம்” என்றான். “வருக!” என்று அவன் அழைத்துச்சென்று அடுமனை முற்றத்தில் அமரச்செய்தான். அரிசியும் காயும் அரிந்திட விரிக்கப்பட்ட பழைய ஈச்சம்பாயை எடுத்துவந்து அவன் முன் விரித்ததும் மேலும் இருவர் புன்னகையுடன் அவனை நோக்கினர். பீமன் கால்மடித்து அமர்ந்து அவர்கள் கலங்களில் அன்னமும் அப்பமும் சுட்ட கிழங்குகளும் கொண்டுவருவதை நோக்கினான். அவர்கள் உணவை கொண்டுவந்து …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99418