Daily Archive: June 20, 2017

நத்தையின் பாதை 1
உணர்கொம்புகள் உயிர்களின் வளர்மாற்றத்தில் உருவாகிவந்த மிகநுணுக்கமான உறுப்பு உணர்கொம்புதான். கண்களும்தான். ஆனால் பார்வையின் எல்லை குறுகியது. ஒளியை மட்டும் அறிபவை விழிகள்.  உணர்கொம்புகளைப்பற்றி வாசிக்கையில் நெஞ்சைப்பிடிதுக்கொண்டு  “கடவுளே!” என்று கூவிவிடுவோம். சில பூச்சிகளின் தலைமயிர் அளவே உள்ள உணர்கொம்புகள் கண்ணுக்கேத்தெரியாத பல்லாயிரம் நுண்ணிய சிற்றுப்புகளின் தொகைகள். பல கிலோமீட்டர் தொலைவுக்கு அவற்றால் மணங்களையும் ஒலிகளையும் அதிர்வுகளையும் நீர்ப்பதத்தையும் அறியமுடியும். புலியின் உணர்கொம்புகள் அதன் பாதையை வகுக்கின்றன. அதன் உடல்மொழியில் மீசை முக்கியமான கருவி. இம்மண்ணில் உயிர்கள் வளர்மாற்றம் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99392

மலேசியா கடிதங்கள்
அன்புள்ள ஜெமோ, தங்களை சந்தித்து விடை பெறும்போது நிறைய நல்விதைகளைப் பெற்றுக்கொண்டு செல்வேன். அவ்விதைகள் அறிவுப்பரப்பில் தூவுவதற்காக மட்டும் அல்லாமல், பெற்றுக்கொள்பவரின் குறிப்பிட்ட பண்பு நலன்களின் மேம்பாட்டுக்கும் பெரிதும் தூண்டு கோலாக அமையும். ஏறத்தாழ தங்களை விரும்பி அணுகும் அனைவருக்குமே இப்படி ஒரு அனுபவம் இருக்கும். சிவப்புக்கண் தந்த தொடர் வேதனைகளை அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத்தான் நன்கு தெரியும், எந்த வலி வேதனையிலும் – அய்யா அப்துல் ரகுமானுக்கு அஞ்சலி குறிப்பு அனுப்ப தாமதமாகி விடக்கூடாது என்ற …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99435

யானைகளின் மரணமும் ரிஷான் ஷெரிஃபும்
யானைகளின் மரணங்கள்- – எம்.ரிஷான் ஷெரீஃப் அன்புள்ள ஜெ ரிஷான் ஷெரீஃப் எழுதிய யானைகளின் மரணம் ஓரு தீவிரமான கட்டுரை போலிருந்தது. ஒரு கடிதத்துக்காகவே இத்தனை தரவுகளையும் படங்களையும் சேகரிக்கிறார். இந்த அளவுக்கான உழைப்பை இங்கே முகநூல் குறிப்பில் நிறைவடைந்துவிடும் கும்பல் செய்வதில்லை. ரிஷான் ஷெரீஃப் தொடர்ந்து எழுதவேண்டும் என விரும்புகிறேன். அவரை தமிழ் செய்தித்தாள்களும் இதழாளர்களும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். செல்வக்குமார் *** அன்புள்ள செல்வக்குமார் ரிஷான் ஷெரீஃப் இலங்கையின் முக்கியமான இளம்படைப்பாளிகளில் ஒருவர்.  முக்கியமான கவிதைகள் எழுதியிருக்கிறார். அவற்றை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99476

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 27
26. நிலைக்கோள் புலரிக்கு முன்னர் முக்தன் சென்றபோதே பிருகந்நளை அணிபுனைந்து முடித்திருந்தாள். அவள் தங்கியிருந்த மூன்று அறைகள் கொண்ட சிறிய இல்லத்தின் முகப்பு வாயில் மூடப்பட்டிருந்தது. முக்தன் மூன்று முறை “தேவி” என்றழைத்தான். வாயில் உள்ளிருந்து திறக்கப்படும் ஓசையே அவளென்று அவனுக்கு காட்டியது. அவ்வோசையிலேயே அவள் முழுஉருவத்தைப் பார்த்து அதிர்வுகொண்ட அவன் உள்ளம் படபடக்கலாயிற்று. இளஞ்செந்நிறப் பட்டாடையும் ஆரங்களும் குழைகளும் கொண்டைச்சரங்களுமாக முழுதணிக்கோலத்தில் தோன்றிய பிருகந்நளை “வருக, வீரரே!” என்றாள். முந்தைய நாள் இரவே அணிபுனைந்து அவனுக்காகக் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99479