Daily Archive: June 19, 2017

வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல்
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், இந்த மாத  வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல் வருகிற ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது.  இதில் மாமலர் நாவல் குறித்து கலந்துரையாடல் நடைபெறும். வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம். நேரம்:- வரும் ஞாயிறு (25/6/2017) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை தொடர்புக்கு:-  9043195217 / 9952965505 Satyananda Yoga -Chennai 11/15, outh perumal Koil …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99502

இலக்கியவாதி வளர்கிறானா?
அன்புள்ள ஜெ, வளரும் படைப்பாளி என்பது தவறு என்ற கான்செப்ட் பலருக்கு புரியவில்லை. போதுமான அளவு வளர்ந்து விட்டார் என்பது பாராட்டுதான் என்றாலும்வளர்ச்சிக்கு வழி இல்லை என்பது குழப்பமாகவே இருக்கிறது.. சற்று இந்த கருதுகோளை விளக்கவும் அன்புடன் பிச்சை   அன்புள்ள பிச்சை, சரி இந்தக் கருத்தை இப்படி மாற்றிச் சொல்கிறேன். ஓர் எழுத்தாளன் தான் எதை எழுதவேண்டும், எப்படி எழுதவேண்டும் என்று கண்டுகொண்டபின் வளர்வதில்லை. வளர்வது என்றால் என்ன? மாறுவது அல்ல. கூர்மைப்படுவது அல்ல. தெளிவடைவது …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99430

ஒரு கதைக்கருவி
அன்புள்ள ஜெ.. அவ்வப்பொழுது கண்டு பிடிக்கும் தொழில் நுட்பத்தின் பிரயோகம் (?), ஊக்குவிக்கும் கட்டில்லா கருவியாக… http://jamesharris.design/periodic/ கதைகளுக்காக ஒரு அட்டவணை. மெண்டலீவின் பீரியாடிக் அட்டவணையை கருத்தில் கொண்டு அமைத்தது. கதைகளின் மூலக்கூறுகளை இப்படியும் புரிந்தது கொள்ளலாமே என்று தோன்றியது. மிக எளிய தளத்தில், கதை எழுதுபவர்களுக்கு உபயோகமாக இருக்கலாம் என்று தோன்றியது. அன்புடன். முரளி *** அன்புள்ள முரளி இந்தக்கருவியை பயன்படுத்தி கதை எழுத முயல்வதைப்பற்றி ஒரு சோக கதை எழுதலாம். காமெடியாக வரும் என்ன …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99425

கலையும் அல்லதும் -கடிதங்கள்
கலையும் அல்லதும்- ஒருகடிதம் கலையும் அல்லதும் –ஒரு பதில் ஜெ, உங்கள் விரிவான பதில் கண்டதில் மகிழ்ச்சி. நான் அதனை எழுதும் போது நாவல்களையும் திரைப்படங்களையும் மையப்படுத்தியே எழுத ஆரம்பித்தேன். நாவல்களைப் பற்றி எழுதும் போது, அது நான் நினைத்திராத தளங்களுக்குச் சென்று வேறு சில புதிய சாத்தியங்களைக் காட்டியது. அதனை விரிவாக எழுத வேண்டுமென்று தோன்றியமையால், நண்பர்களுடனான அப்போதைய உரையாடலுக்காக திரைப்படத்தினை உதாரணம் கொள்ளும்படியாயிற்று. ஆமாம், நீங்கள் சொல்வது போல் நான் முதன்மையாக திரைப்பட ரசிகன் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99422

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 26
25. அழியாநாகம் முக்தன் பகல் முழுக்க அந்தக் காவல்மேடையில் அமர்ந்து வெயில் பரவிய காட்டின் இலைப்பரப்பின் அலைகளை பார்த்துக்கொண்டிருந்தான். எப்போதாவதுதான் புல்லிடைவெளிகளிலும் திறந்த பாறைகள் மீதும் இளவரசியின் சேடிகளிலொருத்தி வண்ணச் சிறுபூச்சியெனத் தோன்றி சிறகு என ஆடை பறக்க சுழன்று மீண்டும் மறைந்தாள். அவர்கள் அக்காட்டுக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் பல்லாயிரம் உயிர்ச்செயல்பாடுகளில் ஒன்றெனக் கலந்துவிட்டது போலவே மேலிருந்து நோக்கியபோது தோன்றியது. வண்ணத்துப்பூச்சிகளைப்போல, பொன்வண்டுகளைப்போல, புள்ளிமான்களையும் குழிமுயல்களையும் துள்ளும் வெள்ளிமீன்களையும் போல. ஒவ்வொரு நாளும் காவல்மாடத்தின் உச்சியில் அமர்ந்து காட்டின் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99398