Daily Archive: June 18, 2017

வெண்முரசு புதுவை கூடுகை – 5
அன்புள்ள நண்பர்களுக்கு. வணக்கம். நிகழ்காவியமான “வெண்முரசு கலந்துரையாடல்” புதுவையில் சென்ற பிப்ரவரி 2017 முதல், மாதந்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதுவை கூடுகை மூன்றாம் வியாழக்கிழமைகளில் நிகழ்வது வழமை. இம்முறை திரு. பாவண்ணன் அவர்கள் புதுவைக்கு வருகைதரும் சந்தர்ப்பத்தை நழுவவிடாது, வெண்முரசு கலந்துரையாடலை 26 ஜூன் 2017 திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு தொடங்கவிருப்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக்கொள்கின்றோம். 26 ஜூன் மாதத்தில் கூடவிருக்கிற ஐந்தாவது கூடுகை, ஒரு சிறப்புமிக்க கூடுகையாக நிகழவிருக்கின்றது. இலக்கிய உலகின் ஆளுமைகளில் ஒருவரான …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99455

வாஞ்சியும் தலித்துக்களும்
அன்புள்ள ஜெ, வாஞ்சிநாதன் ஆஷ் துரையைக் கொன்றது ஆஷ் துரை தலித்துக்களுக்கு ஆதரவாக நடந்துகொண்டமையால்தான் என்று ஒரு வாட்ஸப் செய்தி நேற்றும் இன்றும் சுற்றிவருகிறது. அதில் உண்மை என்ன? முருகேஷ் *** அன்புள்ள முருகேஷ், தமிழ் அறிவுத்துறையில் இதைப்பற்றி விரிவாக எழுதி விளக்கி கடந்துசென்று நெடுநாட்களாகிறது. இதற்குமேல் இதைப்பேசுகிறார்கள் என்றால் அவர்கள் எழுத்து -வாசிப்பு தளத்தில் எந்த அறிமுகமும் இல்லாதவர்கள். செவிவழிச்செய்திகள் , வாட்ஸப் உதிரிச்செய்திகளில் உழல்பவர்கள். அவர்களை எந்த நூலும், எந்த வரலாற்று விளக்கமும் மாற்றாது. …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99441

எனது கணவனும் ஏனைய விலங்குகளும்
இனிய ஜெயம், வீ எஸ் ராமச்சந்திரன் அவர்களின் வழிகூறும் மூளை, தியடோர் பாஸ்கரன் அவர்களின் கல்மேல் நடந்த காலம் நூல்களைத் தொடர்ந்து, இவ்வாண்டின் தமிழின் சிறந்த வரவுகளில் ஒன்று பாரதி புத்தகாலய வெளியீட்டில் ஜானகி லெனின் எழுதிய எனது கணவனும் ஏனைய விலங்குகளும் எனும் நூல்.[படிங்க நல்லாருக்கு என்று சொல்லி அதை எனக்கு த ந்தவர் காந்தி டுடே சுனில்]. ராமும் அவரது மனைவி ஜானகியும் கோஸ்டாரிகாவில் தேடல் பணியில் இருக்கிறார்கள். யாரும் புகுந்து தேடும் பல …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99383

பெண்களின் எழுத்துக்கள்
அன்புள்ள ஜெமோ சற்றுமுன்புதான் உங்கள் தளத்தில் கங்கா ஈஸ்வர் எழுதிய சிலநேரங்களில் சில மனிதர்கள் பற்றிய ஆழமான ஆய்வை [கங்கை எப்படிப் போகிறாள்? — கங்கா ஈஸ்வர் ] வாசித்தேன். உண்மையிலேயே ஜேகே பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரை இதுதான். ஆசிரியரின் நோக்கம் என்ன என்பதை பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல் எழுதப்பட்ட கட்டுரை என்பதுதான் அதன் மிகச்சிறந்த அம்சம் என நினைக்கிறேன். அதை ஒரு வாழ்க்கை மட்டுமே என்றுதான் கங்கா ஈஸ்வர் நினைக்கிறார். ஆகவே உண்மையான …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99387

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 25
24. கரவுக்கானகம் விராடபுரிக்கு வடக்கே மலைச்சரிவில் கோதையை நோக்கி இறங்கும் தப்தை, ஊர்ணை என்னும் இரு காட்டாறுகளுக்கு நடுவே இருந்த செழித்த சிறுகாடு அரசகுடிகளின் வேட்டைக்கும் களியாட்டுக்குமென ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு வேடர்களோ வேட்டையர்களோ நுழைவது தடுக்கப்பட்டிருந்தது. மாமன்னர் நளனின் ஆட்சிக்காலத்தில் இரு ஆறுகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான சிற்றோடைகளை வெட்டி ஒன்றுடன் ஒன்று பின்னிக் கலந்து உருவாக்கப்பட்ட அந்த ஈரநிலத்தில் மலர்மரங்களும் கனிமரங்களும் கொண்டு ஒரு அணிக்காடு அமைக்கப்பட்டது. பின்னர் காலத்தால் மறக்கப்பட்டு விராடபுரி உருவானபோது சுவடிகளிலிருந்து கண்டடையப்பட்டு மீட்டெடுக்கப்பட்டது …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99355