Daily Archive: June 15, 2017

கோவையில் ஒரு சந்திப்பு
வெற்றி சிறுகதை பல்வேறு வாசிப்புகளுக்குப்பின்னும் இன்னும் தீர்ந்துபோகவில்லை. இது அடிப்படையில் ஒரு சீண்டலைக் கொண்டுள்ளது. இதன் பொருள்மயக்கமும், பன்முக வாசிப்பிற்கான சாத்தியமும்  இதற்கான காரணம். இந்த பன்முக வாசிப்பு குறித்து நாம் பேசியாகவேண்டியிருக்கிறது. இதன் மீதான உரையாடலை நாம் கோவையில் நிகழ்த்தலாம் என முடிவு செய்தோம். இது வெற்றி கதை மீது மட்டுமல்ல, அதன் பின் வந்த கடிதங்களுக்கும்  சேர்த்து தான். அப்படியே நின்று போன கோவை வெண்முரசு கூடுகையை  மீண்டும் தொடர்வது  குறித்தும் பேச இருக்கிறோம். ஆர்வமுடைய …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99345

கலையும் அல்லதும் –ஒரு பதில்
அன்புள்ள ரியாஸ்a ஒரு கலைப்படைப்பை வகுத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் சென்ற ஐம்பதாண்டு காலத்தில் நவீன இலக்கியத்தில் மிக விரிவாகவே பேசப்பட்டுள்ளன. ஒவ்வொரு விமர்சகரும் அதற்கான தனி அளவுகோல்களை உருவாக்கி வைத்திருப்பதைப் பார்க்கலாம். டி. எஸ். எலியட் காலம் முதல் ஹெரால்டு ப்ளூம் காலம் வரைக்கும் நான்கு தலைமுறை விமர்சகர்களின் அளவுகோல்கள் நம்முன் உள்ளன. இவற்றைக் கற்பது ஓரளவுக்கு நமது மதிப்பீடுகளைச் சொற்களாக மாற்றிக் கொள்வதற்கு உதவும். திட்டவட்டமாக சில வரையறைகளை நம்மால் சொல்ல முடியும். நாம் உணர்வதை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99132

கலையும் அல்லதும்- ஒருகடிதம்
 ஜெ, சமீபமாக ஒரு கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கிறது. எது ஒரு படைப்பை கலையாக மாற்றுகிறது? அந்த ‘எது’வை வரையறைக்கு உட்படுத்த முடியுமா? இலக்கியம், திரைப்படங்களைக் கூட ஒரு வரையறைக்கு உட்படுத்த முடியும். அதையும் கூட திட்டவட்டமாக வரையறுக்க முடியாது என்று தோன்றுகிறது. ஆனால் இசை போன்ற அரூபமா கலைகளில் அதன் கலைத்தன்மையை எவ்வாறு வரையறை செய்வது. நுண்ணுணர்வால் மட்டுமே அணுகக்கூடிய கலை தானே அது. அவற்றை எவ்வாறு தர்க்கப்படுத்த முடியும்? சிற்பக்கலைக்கு வந்தால், எது ஒரு …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99129

வெற்றி- என் சொற்கள்
வெற்றி கதைகுறித்து பல கடிதங்கள், கேள்விகள் வந்தன. அனைத்துக்கும் விரிவான பதிலை எழுதமுடியவில்லை. மொத்தமகா இங்கே சொல்லிவிடுகிறேன் கதைக்கு வெளியே நின்றுகொண்டு ஆசிரியன் அக்கதையைப்பற்றி பேசுவது ஒரு பிழை. அது ஒரு குறிப்பிட்ட வகையான வாசிப்பை நோக்கி வாசகனை தள்ளுவதாகும். ஆனால் தமிழில் புதுமைப்பித்தனிலிருந்து அனைவருமே அதைச் செய்யும் ஒரு கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். ஏனெனில் இங்கு முதிர்ச்சியான ஒரு வாசிப்புச் சூழல் குறைவு. இருவகையான வாசிப்புகள் இங்குள்ளன. ஒன்று பெருவாரியான மக்களின் வாசிப்பு. அவர்கள் கதையை வாசிக்கிறார்கள். …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99156

சீ முத்துசாமியின் மண்புழுக்கள் –ரெ.கார்த்திகேசு
மலேசியத் தமிழரின் வரலாற்றுக்கு அடையாளம் கூறுவது அவர்களின் தோட்டப்புற வாழ்க்கைதான். இந்த வாழ்க்கை முறை இப்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது. விரைவில் தோட்டப்புற வாழ்க்கையை விட்டு அவர்கள் முற்றாக வெளி வரவும் கூடும். ஆனால் இந்த நாட்டில் நம்முடைய கலாசாரமும் மொழியும் சமயமும் ஜனனம் கொண்ட தோட்டப்புறம் தமிழர்களின் நிரந்தரமான வரலாற்று அடையாளமாக இருக்கும். சீ.முத்துசாமியின் “மண்புழுக்கள்” நாவல் : செம்மண் புழுதியில் தோய்த்தெடுத்த வாழ்க்கை  
Permanent link to this article: https://www.jeyamohan.in/99259

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 22
21. புரவியின் இரவு இரவில் துயில்விழித்துக்கொள்வது முதலில் தன் வலக்கைதான் என்பதை நகுலன் உணர்ந்திருந்தான். அது சென்று இன்மையை உணர்ந்து திடுக்கிட்டு அவனை எழுப்பியது. அந்த விதிர்ப்புடன் தன்னை உணர்ந்து நெஞ்சின் ஓசையை கேட்டபடி அத்துடிப்பு இருளை அதிரவைப்பதை திறந்த விழிகளால் நோக்கியபடி சற்று நேரம் படுத்திருந்தான். பின்பு பெருமூச்சுடன் எழுந்து அமர்ந்து இரவின் நீளிசை ஒலியை, தொலைவுக்காற்றின் அணுகலோசையை கேட்டான். எழுந்து எலும்புகள் ஒடியும் சுள்ளிபோல் ஒலிக்க உடலை நெளித்து மெல்ல காலடி வைத்து வெளியே …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99326