Daily Archive: June 14, 2017

விருது,எதிர்ப்பு,வெளியீடு
ஜூன் பத்தாம்தேதி குமரகுருபரன் பிறந்தநாள். குமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருது சபரிநாதனுக்கு வழங்கும் விழா. காலை ஏழுமணிக்கு சென்னை சென்றுசேர்ந்தேன். கவிஞர் தேவதேவன் எட்டு மணிக்கு வந்துசேர்ந்தார். இருவரையும் கே.பி.வினோத் அழைத்துவந்து அறைசேர்த்தார். தேவதேவனிடம் கே.பி.வினோத் “சார் எங்கே இருக்கீங்க?” என்று தொலைபேசியில் கேட்க “வினோத் நீங்க சொன்னதுபோல நான் விழுப்புரத்திலே எறங்கிடறேன்” வினோத் அலறலாக “சார் அது எக்மூர்” என்றார். “அப்டியா?”   காலைமுதலே அறையில் நண்பர்கள் வரத்தொடங்கிவிட்டனர். காளீப்பிரசாத் குண்டாகிவிட்டிருந்தார். “என்ன செய்ய? குருஜிகிட்டே யோகா …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99295

சீ. முத்துசாமியின் ‘இருளில் அலையும் குரல்கள்’ – ஓர் அறிமுகம்
  மலேசிய தமிழ் புனைவுலகில் தனி அடையாளத்தோடு மிக நிதானமாக இயங்குபவர் கெடா மாநில எழுத்தாளர் சீ.முத்துசாமி (சீ.மு). நீண்ட காலமாக படைப்பாளராகச் செயல்படும் இவரின் ‘மண்புழுக்கள்’ நாவல் இவரை நன்கு அடையாளம் காட்டியது. அதோடு மலேசிய எழுத்துலகில் தனித்துவம் பெற்ற நாவலாகவும் அது விளங்குகிறது . சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சீ.முவின் குறுநாவல் தொகுப்பு ‘இருளில் அலையும் குரல்கள்’ என்ற பெயரில் வெளிவர காத்து நிற்கின்றது. 2009 ஆண்டில் வல்லினம் அச்சு இதழில் தொடராக …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99254

வெற்றி -முடிவாக
ஜெ அவர்களுக்கு, வணக்கம். வெற்றி சிறுகதை குறித்து மிகப் பெரிய அளவில் விவாதங்கள் நடைபெற்று வருவதைப் பார்த்தேன். என்னைப் பொருத்தவரையில், உங்களுடைய வெற்றி தான் அது. உயிரோட்டமான பாத்திரப்படைப்பு, மனித மனத்தின் விகாரங்களை நேர்மையாக, அப்பட்டமாக காட்டியிருக்கிறீர்கள். அது கண்கூசும் ஒளியுடன் திகழ்கிறது. அது தான் நிறைய விவாதங்களுக்கு வழி வகுக்கிறது. வாசிப்பவர் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கும் நுண்ணிய வக்கிர எண்ணம் அல்லது தடைமீறும் எண்ணத்தினை உங்கள் வார்த்தைகள் அசைத்துள்ளன. அந்த அசைவு ஏற்படுத்திய உள்ளார்ந்த வலி, …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99116

வெற்றி கடிதங்கள் 13
அன்பு ஜெமோ சார், வெற்றி சிறுகதைக்கான, என்னுடைய கருத்துகளை பகிர விரும்புகிறேன். கதையின் வரிகள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, ஒரு ஆணோட சிந்தனைகள் எந்த அளவுக்கு சமரசமின்றி எழுதமுடியுமோ, அவ்வளவு நுணுக்கமாக பதிவு செய்யப்பட்டிக்கிறது. ஒவ்வொருத்தருடைய மனிதருடைய சுபாவங்களும் ரொம்ப நன்றாக சொல்லப்பட்டிருக்கிறது. நமச்சிவாயம் தன் மனைவியிடம் சவாலை தெரிவிக்ககூடாதென ரங்கப்பரும், நமச்சிவாயமும் எந்தவித ஒப்பந்தமும் போடவில்லை, நமச்சிவாயம் புத்திசாலியாகதான் கதையில் வருகிறார், அதனால் அவர் மனைவியிடம் சவாலை பற்றி சொல்லி பெண்ணுடைய கற்பை காப்பாற்றிக்கலாம் அல்லது …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99284

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 21
20. பொய்ப்புரவி சகதேவனுக்குப்பின் ஏழு நாட்கள் கடந்து நகுலன் விராடநகரியை சென்றடைந்தான். அரண்மனையின் குதிரைக்கொட்டிலில் தோலாடையும் கையில் சவுக்குமாக வந்து அவன் பணிந்து நின்றபோது தொலைவிலிருந்து அவனைக் கண்ட புரவிகள் திரும்பி நோக்கின. இரு வெண்புரவிகள் கொட்டில் அழியினூடாக தலைநீட்டி பெருமூச்சுவிட்டு மெல்ல கனைத்தன. ஒரு குட்டி வாயில் கவ்விய புல் தொங்கியாட அவனை நோக்கி துள்ளி வந்து தயங்கி நின்று பிடரிமயிர் சிலிர்த்து ‘ம்ரெ?’ என்றது. இன்னொரு பெரிய பெண்குட்டி அதற்குப் பின்னால் வந்து நின்று …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99290