Daily Archive: June 12, 2017

சீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது
இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதை சற்று முன்னரே அறிவிக்கவேண்டிய சூழல் அமைந்தது. ஈராண்டுகளுக்கு முன்னரே மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்களுக்கு விருது அளிப்பது என முடிவுசெய்திருந்தோம். இவ்வருடம் மலேசியாவில் கூலிம் நகரில் சுவாமி பிரம்மானந்தா அவர்களின் குருகுலத்தில் நிகழ்ந்த இலக்கியக் கருத்தரங்குக்கு சீ.முத்துசாமி வந்திருந்தார். கருத்தரங்கின் முடிவில் மலேசிய இலக்கியத்தின் தேக்கநிலை, சாத்தியங்கள் குறித்த கொஞ்சம் கறாரான விவாதம் நிகழ்ந்தது. நான் மலேசிய நவீன இலக்கியத்தின் தொடக்கப்புள்ளியாக சீ.முத்துசாமியை காண்கிறேன். கூடவே அவரது ஆக்கங்கள் பற்றிய, பங்களிப்பின் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99181

குமரகுருபரன்-விஷ்ணுபுரம் கவிதைவிருது- காணொளிகள்
சென்ற 10-6-2017 அன்று சென்னை பீமாஸ் ஓட்டல் வளாகத்தில் நிகழ்ந்த குமரகுருபரன் – விஷ்ணுபுரம் கவிதை விருது விழாவின் காணொளிகள். மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவாக இவ்விருது விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தால் அளிக்கப்பட்டது. ஒளிப்பதிவு செய்த வெளியிட்ட ஸ்ருதி டிவி கபிலன் அவர்களுக்கு நன்றி கவிஞர் தேவதேவன் உரை கவிஞர் மனுஷ்யபுத்திரன் உரை எழுத்தாளர் ஜெயமோகன் உரை எழுத்தாளர் நா. அசோகன் உரை Andhimazhai Asokan speech கவிஞர் சபரிநாதன் ஏற்புரை Poet Sabarinathan speech
Permanent link to this article: https://www.jeyamohan.in/99190

லங்காதகனம் – கடிதம்
இணையத்தில் சிறுகதைகளை பற்றிய ஏதோ ஒரு கட்டுரையில் ஜெயமோகனின் லங்கா தகனம் மிக சிறந்த சிறுகதை என்று படித்தேன். ஜெயமோகனின் வலைத்தளத்திலும் சரி இணையம் முழுதும் சல்லடை போட்டு தேடியும் அந்த சிறுகதை கிடைக்கவில்லை. எந்த சிறுகதை தொகுப்பில் கிடைக்கும் என்பதும் தெரியவில்லை. அதை படிக்க வேண்டும் என்ற ஆவல் மட்டும் அதிகரித்துக் கொண்டே போனது. இணையத்தில் இன்னுமொரு கட்டுரையில் அது கதகளி ஆட்டத்தை பற்றியது என்று குறிப்பு வேறு. ஏற்கனவே கதகளி நாடகம் ஒன்றில் கர்ணன்-குந்தி …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99184

வெற்றி கடிதங்கள் 10
அன்புடன் ஆசிரியருக்கு வாசிப்பின் வெற்றி பதிவினை படித்துவிட்டு கடுமையான ஏமாற்ற உணர்வு எழுந்தது. ஏனெனில் அது வேறொரு வகையில் நான் சொல்ல நினைத்தது. பெரும்பாலும் இது அடிக்கடி எனக்கு நடக்கும். தாமதப்படுத்துவதால் எழும் ஏமாற்றம். ரங்கப்பரின் பாத்திர உருவகம் ஒரு வகையில் டால்ஸ்டாயின் பீயர் தான். டால்ஸ்டாய் உயர்குடிகளின் மீது வெறுப்பும் தானும் அதைச் சேர்ந்தவன் என்பதால் மெல்லிய குற்றவுணர்வும் கொண்டவர். பீயர் நெஹ்லூதவ் என அவரை பிரதிநிதித்துவம் செய்யும் பாத்திரங்களில் அந்த குற்றவுணர்வையும் ஏளனத்தையும் காண …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99119

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 19
18. அரவுக்குறை புரந்தர முனிவரின் குருநிலையிலிருந்து பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியும் தனித்தனியாக கிளம்பி நிஷத நாட்டிற்குள் செல்வது நன்று என்று தருமன் சொன்னபோது பீமன் உரத்த குரலில் “நானும் தேவியும் இணைந்தே செல்கிறோம். அல்லது நம்மில் ஒருவர் தேவியுடன் இருக்கட்டும். இதுவரை நாம் அவளை தனியாக விட்டதில்லை” என்றான். தருமன் முகம் சுருங்க “நானும் அதை எண்ணினேன். அவள் இதுவரை மாற்றுரு கொண்டதே இல்லை. தன் புதிய உருவுடன் விழிகளுக்குமுன் அவள் இறங்கிச் செல்லட்டும். இங்கிருந்து நிஷத …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99196