Daily Archive: June 11, 2017

இரு காந்திகள்.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழகத்தில் இறால்மீன்பண்ணைகளுக்கு எதிரான போராட்டம் ஒரு முக்கியமான சமூக நிகழவாக இருந்தது. வளமான தஞ்சை நிலப்பகுதியில் கடலோரமாக அரசு இறால் பண்ணைகளை உருவாக்க அனுமதி கொடுத்தது. உண்மையில் அது நல்லெண்ணத்துடன் மயிலாடுதுறையைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மணிசங்கர் அய்யரால் கொண்டுவரப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் திட்டம் என்று அது சொல்லப்பட்டது. மனிசங்கர் அய்யர் பழைய மஹாலானோபிஸ் காலகட்டத்து தொழில்மயமாக்க நினைவுகளில் வாழ்பவர். அவருக்கு அத்திட்டத்தின் சூழியல் சிக்கல்கள் சொல்லபப்டவில்லை. அல்லது சொன்னாலும் உறைக்கவில்லை. கீழத்தஞ்சைப்பகுதியின் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/722

தாயார்பாதம்- கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, கடிதங்களின் பயனாக அறம் தொகுதியில் ஏழு கதைகள் வாசித்தேன். தெளிவான சித்தரிப்பு, சிந்தனைக்கு விருந்து. 1967-70இல் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் என் அலுவலக பணியறையை பகிர்ந்துகொண்டவர் D G R செல்வநாயகம். என் தந்தை வயது. நாகர்கோவில்காரர். முதல் முறையாக வீட்டை விட்டு வெளியே பணிக்கு வந்த எனக்கு அவர் நட்பு , வழிநடத்துதல் பெரிய பேறு. தொடர்ந்த ஆண்டுகளில் குமரி மாவட்ட இனிய நண்பர்கள் பலர். அவர்கள் சொல்லத்தயங்கிய, சொல்லாமல் விட்ட …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98797

வெற்றி -கடிதங்கள் 9
ஜெ, படுப்பாளா?, எவ்ளளவு பணம் கொடுத்தால் படுப்பாள்?,  பணக்காரனின் பண திமிரா? ஏழையின் தன்மானமா? ஆண்மகனின் ஆணவமா, பெண்ணின் கற்பா? வெற்றி பெறுவது எது? போன்ற அற்ப கேள்விகளுக்கு பதில் அல்ல “வெற்றி”. முக்கிய கதாபாத்திரம் போல் தோன்றும் ரங்கப்பர் உண்மையில் போட்டியில் இல்லை. அவரை பயன்படுத்தி நமச்சிவாயமும், அவர் மனைவியும்  தான் போட்டியிடுகிறார்கள்.  வெற்றி பெறுவது யார் என்பதுதான் கதை. எந்த சூழ்நிலையிலும் பெண் கற்பு தவற கூடாது என்று ஆண் விரும்புகிறான். அதை நிலைநாட்டும் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99072

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18
17. முகமுன்முகம் மறுநாள் காலையில் முதலிருள் பொழுதிலேயே அர்ஜுனனும் தருமனும் பிறரிடம் விடைபெற்றுக் கிளம்பி காட்டுக்குள் சென்று மறைந்தனர். பீமன் அப்பால் துணைநிற்க திரௌபதி கண்ணீர் என ஊறி வழிந்த மலையிடுக்கு ஒன்றில் இலைகோட்டி நீர் அள்ளி உடலில் ஊற்றி நீராடினாள். குழல்கற்றைகளை ஐந்தாகப் பகுத்து தோளில் விரித்திட்டு அவள் மீண்டு வந்தபோது நகுலனும் சகதேவனும் விடைபெறும்பொருட்டு காத்து நின்றிருந்தனர். திரௌபதியின் பின்னால் வந்த பீமன் இளையவரைக் கண்டதும் “கிளம்பிவிட்டீர்களா?” என்றான். “ஆம், மூத்தவரே” என்றான் நகுலன். …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99174