Daily Archive: June 9, 2017

சபரிநாதன் நேர்காணல்
”தனது காலத்தின் அகச்சமநிலையை மீட்க முயல்வதுதான் கலையின் நோக்கம்.”  நேர்கண்டவர் : பிரவீண் பஃறுளி சபரிநாதன் தமிழ் நவீன கவிதையில் அண்மையில் வெளிப்பட்டுள்ள ஒரு சுதந்திரமான குரல். இவரது கவிதைகள் தொண்ணூறுகளின் மாற்றங்களை ஒட்டி தமிழ்க்கவிதையில் நிகழ்ந்த புனைவுத்தன்மை, புறவயமான விரிவு, உரைநடைமொழிபு போன்ற இயல்புகளின் நீட்சியில் ஒருபுறமும் மறுபக்கம் செவ்வியல் ஒழுங்கு, உணர்வெழுச்சி, பாடல்தன்மை, கட்டிறுக்கம், மொழிச்செறிவு, ஒருமெய்யறிதலாகக் கவிதையின் ரகசியபாதைகள் என தனித்த ஒரு உணர்திறனிலும் இயங்குகின்றன. நமது காலத்தின் ஒரு உள்ளீடற்ற தன்மை, …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99058

வாசிப்பின் வெற்றி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களின் வெற்றி சிறுகதையை படித்து முடித்ததும் புதுமைப்பித்தனின் பொன்னகரம் நினைவுக்கு வந்தது. பொன்னகரம் கதை ஒரு பெண்ணின் கற்பு பற்றிய கதை மட்டும் அல்ல என்றே நினைக்கிறேன். புதுமைப்பித்தன் முதலில் பொன்னகரம் பற்றிய பகீர் வர்ணனை தந்துவிட்டு, அம்மாளு என்கிற ஒரு பெண்ணின் (Instance) கதைக்குள் செல்கிறார். அவர் ஒட்டுமொத்த பெண்குலத்தை பற்றியோ (Generalisation) அல்லது பெரும்பாலான பெண்கள் இப்படி அப்படி என்று புள்ளிவிவரங்கள் (Statistics ) எதனுள்ளும் செல்லவில்லை. ஆனால், கடைசி …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99041

ஜெயகாந்தன் , கங்கா ஈஸ்வர்- கடிதங்கள் -
ஜெயகாந்தனைப்பற்றிய ஆகச்சிறந்த கட்டுரை கங்கை எப்படிப் போகிறாள்? — கங்கா ஈஸ்வர் அன்புள்ள ஜெமோ உங்கள் தளத்தில் வெளிவந்த கங்கா ஈஸ்வர் எழுதிய கட்டுரையை இரண்டுமுறை வாசித்தேன். முதலில் அந்தக்கட்டுரையின் நீளமும் செறிவான மொழியும் நீங்களே எழுதியதோ என்று எண்ணவைத்தன. ஆனால் இன்னொரு முறை வாசித்தபோது அதில் பெண் என்னும் தன்னிலை இருந்தது. அது ஒரு பெண் எழுதியது என்பதை உறுதியாக உணர்ந்தபோதுதான் அக்கட்டுரை தமிழுக்கு எவ்வளவு முக்கியமானது என்று தெரிந்தது. இப்படி ஒரு அழுத்தமான மொழியில் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99123

சபரிநாதன் கவிதைகள் – காளி பிரசாத்
அன்புள்ள சார், சென்ற மே மாத இறுதியில் அதுவும் இருநாட்களில், மூன்று வெவ்வேறு திசைகளிலிருந்து சபரிநாதன் கவிதைகளைப் பற்றி கவனிக்கத்தக்க குறிப்புகள் கிடைக்கப்பெற்றேன். முதலில் குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது, மறுநாள் கவிஞர்.யுமாவாசுகி தன் உரையாடலில் கூறியது அடுத்து இம்மாத தடம் இதழில் கவிஞர். விக்ரமாதித்தன் பேட்டியில் தனக்கு பிடித்த கவிதைகளில் ”சனீஸ்வரனிடம் பயிற்சி பெற்ற அம்மாச்சி” யை குறிப்பிட்டிருந்தது.. அன்றுதான் இவரின் இரு கவிதை தொகுதிகளையும் வாங்கி படிக்கத்துவங்கினேன். இதுவரையில் சமூக வலைதளத்திலோ, வெகுஜன, இடைநிலை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99074

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 16
15. கைக்கொளல் ஆணும் பெண்ணும் கொள்ளும் உறவு நூற்றுக்கணக்கான சிறு பிணக்குகளினூடாக நாளும் நாளுமென துளித்துளியாக வரையறுக்கப்படுகிறது. முதல்நாள் பின்னிரவில் கைபிணைத்து உடலொட்டிக் கிடக்கையில் தமயந்தி நளனிடம் “நமது அரசில் சுங்கம் எப்படி கணக்கிடப்படுகிறது?” என்று கேட்டாள். அவன் அவள் தோளில் முகம்புதைத்து உடலோய்ந்து கிடந்தான். உதடுகள் அழுந்தியிருந்தமையால் “ம்?” என்று குழறினான். அவள் மீண்டும் கேட்டாள். “என்ன?” என்றான். அவள் அவன் முகத்தைப் பிடித்து விலக்கி “நம் அரசில் சுங்கம் எப்படி கணக்கிடப்படுகிறது?” என்றாள். “நெடுங்காலமாக இங்கே …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99137