Daily Archive: June 8, 2017

பச்சைப்பாம்பும் சிவப்புக்கண்ணும்
மலேசியாவில் சுவாமி பிரம்மானந்தா அனைவராலும் முதன்மையான ஆளுமையாகக் கருதப்படுபவர். அவருடைய குருமரபு நீண்ட வரலாறுள்ளது. ராமகிருஷ்ண பரமஹம்சர், சிவானந்தர், சின்மயானந்தர், தயானந்த சரஸ்வதி என அவருடைய தொடர்ச்சியைச் சொல்லமுடியும் கெடா மாநிலத்திலுள்ள கூலிம் ஊரில் அவருடைய குருகுலம் ஆன்மிகப்பணியும் சமூகப்பணியும் செய்துவருகிறது. [உடனே இந்துத்துவா என ஆரம்பிப்பவர்களுக்கு, சுவாமி அவர்களை அ.மார்க்ஸே பாராட்டியிருக்கிறார்] கூலிம் அருகே சுவாமி கட்டியிருக்கும் புதிய குருகுலத்தில் ஓர் இலக்கிய முகாமை நடத்தலாமென அவர் கருதினார். ஆகவே கொலாலம்பூரில் இருந்து நான் நாஞ்சில்நாடனுடன் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99096

சபரிநாதன் கவிதைகள்- கடலூர் சீனு
இனிய ஜெயம், நமது கவிதை விவாதக் கூடுகைகளில் தொடர்ந்து பங்கு கொண்டும் தினமும் ஏதேனும் ஒரு கவிதையுடன், அது குறித்த கட்டுரை உடன், உறவாடிக்கொண்டிருந்ததன் பயன், கவிஞர் தேவதச்சன் அவர்களுடன் உரையாடுகையில் முழுமை கொண்டது என்பேன். அவருடனான உரையாடல் கவிதைகள் வாசிப்பு மீதான ”பிடி கிட்டிய ” தருணம். உள்ளே ஆணி அடித்து இறங்கிய முதல் பாடம் சும்மா ஓரிரு முறை ஒரு கவிதையை வாசித்து விட்டு புரியல என்று உதட்டை பிதுக்குவதோ புரிஞ்சது என்று கடந்து …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99056

வெற்றியின் நிகழ்தகவுகள்
அன்புநிறை ஜெ, கண்களின் வலியும் செம்மையும் குறைந்திருக்கிறதா. மூன்று நாள் வெண்முரசை எட்டிப்படித்துக் கொண்டிருக்கிறேன். ‘வெற்றி’ தொடங்கி வைத்த விவாதம் நீர்க்கோலத்திலும் தொடர்ந்தது போல உணர்ந்தேன் – //திட்டமிட்டு ஓர் ஆண் தன்னை ஒரு பெண்ணுள்ளத்தில் செலுத்திவிடமுடியுமென்றால் பெண் உள்ளமென்பது வென்று கைகொள்ளத்தக்க வெறும் பொருள்தானா – தமயந்தியின் எண்ண ஓட்டம்// நேற்று பினாங் சென்று சேரும் வரை சரணும் கணேஷும் நானும் இக்கதையை (வெற்றி) விவாதித்துக் கொண்டிருந்தோம். இக்கதைக்குள் வேறு சில கதைகள் நிகழ்தகவுகளாக (probabilities) …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99014

சினிவா ஆச்சிபி

chi
  வணக்கம் நைஜீரீய எழத்தாளர் ச்சினுவா அச்சேபே யின் இரண்டு கதைகளை மொழியாக்கம் செய்துள்ளேன். ஒரு கதை சொல்வனத்தில் வெளியாகியுள்ளது. இரண்டாவதை என் தளத்தில் வெளியுட்டுள்ளேன் உங்கள் பார்வைக்கு வாக்காளர் இறந்தவனின் பாதை சதீஷ் கணேசன் *** அன்புள்ள சதீஷ் நேர்த்தியான வாசிப்பனுபவம் அளித்த மொழியாக்கம். தொடர்ந்து மொழியாக்கங்கள் செய்ய வாழ்த்துக்கள். சினுவா ஆச்சிபியின்  Things Fall Apart, தமிழில் என்.கே.மகாலிங்கம் [கனடா] மொழியாக்கத்தில் காலச்சுவடு வெளியீடாக ‘சிதைவுகள்’ என்னும் தலைப்பில் வெளியாகியிருக்கிறது ஜெ  
Permanent link to this article: https://www.jeyamohan.in/99037

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 15
14. அணிசூடுதல் “நெடுங்காலம் காத்திருந்து அடையப்பட்ட மணவுறவுகள் பெரும்பாலும் நிலைப்பதில்லை” என்று பிங்கலன் சொன்னான். “ஏனென்றால் மானுடர் அறியும் காலமென்பது இழப்புகளின் அறுபடா தொடர். உலகியலில் இழப்புகளைக் கொண்டுதான் பெறுபவை அளவிடப்படுகின்றன. இங்கு ஒருவன் பெறுவது எதுவாக இருப்பினும் அது இழந்தவற்றுக்கு ஈடல்ல. ஏனென்றால் இழந்தவை வளர்கின்றன. பெறுபவை சுருங்குகின்றன.” தருமன் “தவம் என்பது காத்திருப்பது அல்லவா?” என்றார். “ஆம், தவமிருந்து பெறவேண்டியது இவ்வுலகு சாராததாகவே இருக்கவேண்டும். பெருநிலை, மெய்யறிவு, மீட்பு. இங்கு எய்துவனவற்றை தவமிருந்து அடைந்தவன் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99084