Daily Archive: June 6, 2017

ஒளிகொள்சிறகு – சபரிநாதன்கவிதைகள் -ஏ.வி.மணிகண்டன்
பகுதி 1 பொதுவாக தமிழ் இலக்கிய சூழலில், கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும், தத்துவம் மற்றும் கோட்பாடுகளின் மீது ஒரு விதமான விலக்கம் இருக்கிறது. நாம் அதை  விட்டு விலகி போனாலும் கூட எங்கோ நிகழும் அந்த விவாதங்கள் நாம் புழங்கும் மொழியை, சூழலை பாதித்து நம் மொழி வெளிப்பாட்டை பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படி உருவாகும் ஒரு விவாதம் பத்து வருடங்கள் கழித்து இங்கே அலையாக வருவதன் பாதிப்பைதான் சில வருடங்கள் கழித்து நம்மையறியாமலேயே நாம் மொழியில் தொழிற்படுத்துகிறோம். தவிர்க்கவே …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98993

சபரிநாதன் கவிதைகள் 3
இளங்கவிஞர்களுக்கான குமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருதைப்பெறும் சபரிநாதனின் கவிதைகள். அவருடைய வால் என்னும் தொகுதியில் இருந்து. விருது விழா ஜூன் 10 அன்று சென்னையில் நிகழவிருக்கிறது.   விழிப்படைந்த கத்தி நாளிதழில் பொதித்து எடுத்துச் செல்லப்பட்ட கத்தி தவறி விழுந்த போது சுயநினைவிற்குத் திரும்பியது இப்போது அது ஒரு பசித்த புலி,யாராலும் தொடமுடியாது. இனி அதற்கு எதுவும் தேவை இல்லை தனக்கு வேண்டிய பழங்களை தானே நறுக்கிக்கொள்ளும் குளிர்பருவத்தில் உறையுள் குனிந்து சென்று உறங்கும் சட்டென உற்ற விழிப்பு,திடுமென …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98997

வெற்றி -கடிதங்கள் 5
அன்பு ஜெமோ, வெற்றி சிறுகதை- எல்லா பக்கமும் சுவரிடிந்து விழும் உணர்வு. முதலில் நடை கொஞ்சம் இடறினாலும், மைய முடிச்சு வந்தவுடன் முழுதாக உள்ளிழுத்துக்கொண்டது. ஒவ்வொருவரின் சொல்லிலும் செயலிலும் உள்ள நெருடல்களே கதையின் ஆழம். ரங்கப்பர் போன்ற ஒருவருக்கு பணம் ஒரு பொருட்டல்ல. வெளியில் அவரைப்பற்றி பொதுவாக என்ன நினைக்கிறார்கள் என்பதும் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை என்றே தோன்றுகிறது. அவர் அதைத்தாண்டி பற்றிக்கொள்ள ஏதுமுள்ளதா என்று தேடுபவராகவே தெரிகிறார். அப்படி ஒன்றை லதாவிடம் கண்டுகொண்டதனால் இரண்டையும் இழக்கத் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99010

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 13
12. சகடத்திருமை அந்திப்பொழுதில்தான் அவர்கள் குண்டினபுரியை சென்றடைந்தனர். அதன் புறக்கோட்டை வாயில் இரண்டு ஆள் உயரமே இருந்தது. அடித்தளம் மட்டுமே கற்களால் கட்டப்பட்டு அதன்மேல் மண்ணாலான சுவர் அமைந்திருந்தது. பசுவின் வயிறென வளைந்து நீண்டு சென்ற அச்சுவர் சில இடங்களில் தாவிக் கடக்குமளவே உயரமிருந்தது. அதன்மேல் மழைக்காலத்தில் வளர்ந்த புல் வெயிலில் காய்ந்து இளமஞ்சள் நிறத்தில் காற்றிலாடியது. கோட்டை வாயிலின்மேல் அமைந்த காவல்மாடம் ஈச்சை ஓலையால் கூரையிடப்பட்டிருந்தது. கோட்டைக்குள்ளிருந்த மரத்தாலான மூன்றடுக்குக் காவல்மாடத்தின் உச்சியில் நடுவே வடுவுடன் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99008