Daily Archive: June 3, 2017

குமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருது சபரிநாதனுக்கு
  2017 ஆம் வருடத்திற்கான குமரகுருபரன் –விஷ்ணுபுரம் இலக்கிய விருது கவிஞர் சபரிநாதனுக்கு வழங்கப்படுகிறது. இன்று கவனிக்கப்படும் இளங்கவிஞரான சபரிநாதன் ஏற்கனவே எழுதிய தேவதச்சன் கவிதைகளைக்குறித்த நீண்ட ஆய்வுக்கட்டுரை வாசகர்களின் கவனத்திற்கு வரவேண்டிய ஒன்று சபரிநாதன் கவிதைகளை குறித்த விவாதங்கள் இத்தளத்தில் தொடர்ந்து நிகழும். கவிதைகளும். அவரைக்குறித்து தமிழ்ச்சூழலில் ஒரு கவனம் உருவாகவேண்டுமென விரும்புகிறோம் வரும் ஜூன் 10 அன்று மாலை சென்னையில் விழா.     தேவதச்சன் –சபரிநாதன் உரை ‘தேவதச்சம்’ – சபரிநாதன் -2 …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98905

பட்டியல் போடுதல், இலக்கிய விமர்சனம்.
செவ்வியலும் இந்திய இலக்கியமும் கால்கள், பாதைகள் அன்புள்ள ஜெ., இந்த விவாத வரிசையில் மற்றுமொரு கேள்வி. எழுத்தை நோக்கி வரும் அனைவருமே ஏதோவகையில் லட்சிய உணர்வுகளும் அறவுணர்வுகளும் உள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்று நம்ப விழைகிறேன். சமகாலத்தின் லட்சிய அறத்தை ஒற்றை வரியில் சொல்லவேண்டும் என்றால், எளியோரை மிதியாதே என்று சொல்லலாம். சமூகத்தின் விசைகளால் புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களை சுட்டிக்காட்டி, “இவர்களும் மனிதர்கள், இவர்களும் நாமும் ஒன்று” என்றுரைக்கும் லட்சியவாதம் அது. மார்க்சியமும் தலித்தியமும் பெண்ணியமும் எல்ஜிபிடி உரிமைக்கோரலும் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98898

வெற்றி –கடிதம் 2
வணக்கம் ஜெயமோகன் ரொறொன்டோவிலிருந்து சுமதி. நலமாக இருக்கின்றீர்களா? உங்கள் ”வெற்றி” சிறுகதை வாசித்தேன், ஒரு காலகட்டத்தின் பதிவை அதாவது காஸ்மபொலிட்டன் கிளப் இன் ஆரம்பம், அங்கு வந்து செல்லும் ஆண்கள் எப்படியிருப்பார்கள், அங்கே என்ன நடக்கும், என்ன பேசிக்கொள்வார்கள் போன்றவற்றைப் பதிவு செய்து வாசிக்கும் போது மிகவும் சுவாரஸ்யமாகக் கதையை நகர்திக் கொண்டு சென்றிருக்கின்றீர்கள். நமச்சிவாயத்தின் மனைவியின் அறிமுகத்தின பின்னர் கதை இப்படித்தான் முடியப் போகின்றது என்று நான் எதிர்பார்த்தது போலவே முடித்தும் உள்ளீர்கள். என்ன ஒரு …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98923

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-10
 9. ஊசலின் தாளம் அரசவையில் புலவர்களுடன் அமர்ந்து நூலாய்கையில், அவைப்பணிகள் முடித்து நீராட்டறைக்குச் சென்று உடலை சேடியரிடம் அளித்துவிட்டு அமர்ந்திருக்கையில், அணிபுனைந்து மஞ்சத்தறைக்கு செல்லும்போது, அவ்வப்போது அவன் எண்ணமே வந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு கணத்தில் மீள மீள வரும் அவன் எண்ணம் அவளை சினம் கொள்ளச் செய்தது. திட்டமிட்டு ஓர் ஆண் தன்னை ஒரு பெண்ணுள்ளத்தில் செலுத்திவிடமுடியுமென்றால் பெண் உள்ளமென்பது வென்று கைகொள்ளத்தக்க வெறும் பொருள்தானா? அப்படி வலைவீச முடியுமென்று ஒருவன் தன்னைப்பற்றி எண்ணுவதே சிறுமையல்லவா? அம்முயற்சிக்கு …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98914

எனது இன்றைய காந்தி –கடிதம்
அன்பின் ஜெ அவர்களுக்கு, தங்களின் பதில் கடிதம் பேருவகை தந்தது..கூடவே நம்பிக்கையையும்.. தங்களை வாசிக்க ஆரம்பித்த ஓரிரு நாட்களில் என் அறிதலின் ஆகப் பெரிய தடையாக எனது முன் முடிவுகளும் (உங்கள் மொழியில் வெற்று நம்பிக்கைகள்)நானே அறியாமல் நான் கொண்டிருந்த போலியான முற்போக்கு பாவனைகளும் இருப்பதைக் கண்டு கொண்டேன். அதை உடைத்து மறுவார்ப்பு செய்தது தங்களின் எழுத்துக்களே, குறிப்பாக உங்கள் கட்டுரைகள்.. உங்களுடைய இன்றைய காந்தி நூலை வாசித்து வருகிறேன். பள்ளிக் கல்வி வாயிலாக நாங்கள் அறிந்திருந்த …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98894