Daily Archive: June 2, 2017

அப்துல் ரகுமான்: அஞ்சலி
கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களை நான் 1988 வாக்கில் சுந்தர ராமசாமியின் இல்லத்தில் சந்தித்தேன். அதன்பின்னர் இருமுறை சந்திக்கும் வாய்ப்பு வந்தது. சுவாரசியமான உரையாடல்காரர். உருது, அரபு கவிதைகளில் மிகப்பெரிய ஈடுபாடு உடையவர். ஃபெய்ஸ் அகமது ஃபெய்ஸ் குறித்தும் மிரஸா காலிப் குறித்தும் அவரிடம் விரிவாக உரையாடியிருக்கிறேன். கவிதை பற்றிய அவருடைய கொள்கை நான் எண்ணுவதற்கு முற்றிலும் மாறுபட்டது. கவிதையை அவர் சொல்வீச்சாக, மேடை நிகழ்வாகவே பார்த்தார். அவை மௌனவாசிப்பில் மிகையாகவே எஞ்சின தமிழ் வானம்பாடி மரபின் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98934

குமரகுருபரன் கவிதைவிருது
மறைந்த குமரகுருபரனுக்கும் எனக்குமான உறவு விந்தையானது. என் நல்ல வாசகர். என்னை ஒரு மூத்தவனாக எண்ணியவர். ஆனால் இரண்டே முறைதான் சந்தித்திருக்கிறோம். அதுவும் மிகச்சம்பிரதாயமான சிலநிமிடச் சந்திப்பு.நான்குமுறை மட்டுமே தொலைபேசியில் பேசியிருக்கிறோம். எப்போதும் ஒரு மானசீக உறவு இருந்துகொண்டிருந்தது குமரகுருபரன் அறியமுடியாத எவற்றினாலோ அலைக்கழிக்கப்பட்ட ஆத்மா. என்ன என்று எனக்கும் தெரிந்திருக்கவில்லை. இரவு 12 மணிக்குமேல் எனக்கும் அர்த்தமில்லாத மின்னன்சல்கள் வரும். அவை அதிகாலையில் இன்னொரு மின்னஞ்சலால் ரத்துசெய்யப்பட்டிருக்கும். அவர் விரைவில் விடைபெற்றபோது எனக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98901

சொல்வளர்காடு செம்பதிப்பு -கடிதங்கள்
அன்புள்ள ஜெ, ஒரு வார வெளியூர்ப் பயணம் முடிந்து நேற்று (27-May) இரவு வீடு திரும்பினேன். சற்று நேரம் பயண விவரங்களைப் பேசிய பின் மனைவியும் பிள்ளைகளும் “நீங்க ஆர்டர் செய்த புத்தகம் வந்து விட்டது. ஜெயமோகன். உள்ளே புத்தக அலமாரியில் உள்ளது” என்றனர். புத்தகம் கட்டு பிரிக்கப்பட்டுத் தனியே எடுத்து வைக்கப்பட்டு இருந்தது. கட்டைப்பிரித்து அதைக் கண்டடையும் பரவசம் இழப்பு. பரவாயில்லை, புதுப் புத்தக வாசமும், வழவழப்பான அட்டையும் தாள்களும் அதை நிகர் செய்தன. புத்தகம் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98838

வெற்றி ஒரு கட்டுரை
  டியர் ஜெயமோகன், நலம் தானே? உங்களின் வெற்றி சிறுகதையை வாசித்தேன். பிடித்திருந்தது. அது பற்றிய என் பார்வை இங்கே: http://www.writercsk.com/2017/05/blog-post_31.html
Permanent link to this article: https://www.jeyamohan.in/98921

வெற்றி -ஒரு கடிதம்
அன்புள்ள ஜெ வெற்றி வாசித்தேன். அதைப்பற்றிய என் கருத்துக்களை பின்னர் எழுதுகிறேன். நான் வியப்பது ஒரு விஷயம் பற்றி. நான் அக்கதையை வாசிக்கச்சொன்ன அத்தனைபேரும் ‘முடிவ ஊகிச்சுட்டேன்ங்க’ என்றார்கள். சும்மா ராஜேஷ்குமார் வாசகர்கள் பாதிப்பேர். அவர்கள்தான் மேதைகளா , இல்லை நான்தான் மொக்கையா? ராஜேந்திரன் *** அன்புள்ள ராஜேந்திரன், இதைப்பற்றி நான் குழும விவாதங்களில் பலமுறை எழுதியிருக்கிறேன். ஓர் இலக்கியவாசகன் ஒருபோதும் இதைச் சொல்லமாட்டான். சொல்பவர்கள் ‘கதை’ படிக்கும் வாசகர்கள். இவர்கள் பெரும்பாலான புனைவுகளைப்பற்றி இதைத்தான் சொல்வார்கள். …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98919

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-9
8. அன்னங்கள் தமயந்தியின் இயல்புகளை நளனிடம் நாளுக்கொரு செய்தி என சொல்லிக்கொண்டிருந்தனர் ஒற்றர். எளிதில் சினப்பவள், சினந்தமையாலேயே கனிபவள். மாற்றுச்சொல் பொறுக்காதவள். நிகர் வைக்க ஒப்பாதவள். மகளிர்மன்றுகளை வெறுப்பவள். சேடியரன்றி பிற பெண்டிர் அவளுடன் சொல்லாடவே இயல்வதில்லை. பின்னர் நுண்செய்திகள் வரலாயின. தன் உடலில் கால்நகங்களையே அவள் முதன்மையாக நோக்கினாள். ஒவ்வொருநாளும் அதை சமையப்பெண்டுகள் நீவியும் சீவியும் வண்ணமிட்டனர். அவை புலியின் விழிகள்போல் வெண்ணிற ஒளி மிளிரவேண்டுமென அவள் விழைந்தாள். ஆடைகளில் அவள் தோள்சரியும் பீதர்நாட்டு மென்பட்டாடையை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98891