Daily Archive: June 1, 2017

பாபநாசம் ,கமல் பேட்டி
  ஜெ,   பாபநாசம் படத்தைப்பற்றி கமல் பேசும் இந்த இடம் உங்கள் பார்வைக்கு. அவர் அக்கதாபாத்திரத்தைப்பற்றிப் பேசுவதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? அவரது புரிதல் சரிதானா?   சத்யன்   அன்புள்ள சத்யன் அந்த கதாபாத்திரம் பேசி அமைக்கப்பட்டது. அதை நானே விரிவாக முன்னரும் எழுதியிருக்கிறேன். அதாவது ஜார்ஜ் குட்டி ஒரு கேரள கிறித்தவர். அவர்கள் மலையோர விவசாயிகள். அந்த மனநிலை வேறு. அவர்கள் கொஞ்சம் கடினமானவர்கள். போராளிகள்.   சுயம்புலிங்கம் ஒரு நாடார். வணிகர். ஆகவே …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98840

டோரா
அண்ணன் வீட்டில் ஒரு அன்பின் ஜீவன் டோரா!!! முரட்டுத்தனமான முகமும், மிரட்டலான உறுமலுமாகத்தான் முதலில் அறிமுகமாவாள்… அண்ணன் ஜெயமோகன் வீட்டு அன்பு ஜீவன் டோரா. அண்ணன் நமக்கு அவளை அறிமுகப்படுத்திவைத்து, அவளுக்கு நம்மை பிடித்துவிட்டது என்றால் பிறகு நாக்கினாலும், தனது கைகளெனும் கால்களாலும் நம்மை பிரியப்படுத்திவிடுவாள். குதிப்பும், அன்பிழையோடும் இளைப்பும், நுகர்வெனும் உரிமையென நம்மைத் தனி உடல்மொழியால் உற்சாகப்படுத்திவிடுவாள். மிருக ஸ்பரிசமெனும் அச்சநிலை கடக்கும் டோராவினுடனான தருணங்கள் மிகவும் இனிமையானவை. அண்ணன் வீட்டின் முதல் கேட்டிற்கும் – …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98788

உச்சவழு ஒரு கடிதம்
உச்சவழு [சிறுகதை] கனவுகளை காலத்துடன் தொடர்புறுத்த முடிவதில்லை. காலங்கள் அறுந்தவுடன் வான் வெளியில் மிதக்கும் உருவெளிப் பார்வையில் வீச்சமடைவதைப் போலத்தான் கனவுகளை நினைக்கிறேன். நிச்சயமாகத் திட்டவட்டமான எந்த உருவமும் உருவும் அதில் எனக்கு இருப்பதில்லை. அவைகள் எதையோ சுட்டுகின்றன. எங்கோ வெட்டும் மின்னல் வெளிச்சத்தில் கண நேரத் தீற்றல்களில் தோன்றி மறைகின்றன.வெட்டி வெட்டி காட்சிகள் மேலும் கீழுமாய் நகர்ந்து மோதி பெரிதளவில் நினைவிலும் நிற்காமல் கரைந்து மறக்கின்றன. ஆனால் எல்லாக் கனவுகளிலும் இப்படித்தானா? என் இறந்து போன …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98707

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-8
7. அலையன்னம் ஒவ்வொரு நாளும் ஒரு முகமேனும் நளனின் கண்முன் வந்துகொண்டிருந்தது. அறியாது வந்து விழிமுட்டி பதைத்து விலகிக்கொள்பவை. மறைவிலிருந்து மெல்லிய அசைவென வெளிப்பட்டு நோக்குரசி இமை தாழ்த்தி முகம் சிவக்க அகல்பவை. உரக்க பேசி கண் திருப்பி உள்ளம் அளித்து மீள்பவை. ஒன்றுமறியாப் பேதையென முன் வந்து நின்று குதலைச் சொல்லெடுப்பவை. இதற்கெல்லாம் அப்பால் நான் என்று நடித்து ஏதேனும் உரைத்து ஒசிந்து செல்பவை. ஓவியத்தில் எழுதப்படுபவை. சூதர் சொற்களால் தீட்டப்படுபவை. ஒவ்வொரு முகத்தையும் இதுவா …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98882