Monthly Archive: June 2017

பிராமணர்களின் சாதிவெறி
அன்புள்ள ஜெ உதயகுமாரின் பிராமண எதிர்ப்பு பற்றி வாசித்தேன். பிராமணர்களின் சாதிவெறியை நீங்கள் பார்ப்பதே இல்லையா? சமூகவலைத்தளங்களில் உலவுங்கள், தெரியும். முடைநாற்றமெடுக்கும் சாதிவெறியை, எந்த அடிப்படை அறமும் இல்லாத கீழ்மையை, கணிசமான பிராமணர்கள் நேரடியாகவே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி நீங்கள் பேசுவதுண்டா? செந்தில்   அன்புள்ள செந்தில், அந்தச் சாதிவெறியை நானும் நிறையவே சந்தித்திருக்கிறேன், சந்தித்துக்கொண்டும் இருக்கிறேன். மிகநெருக்கமானவர்களாக இருந்தவர்கள்கூட தருணம் கிடைக்கையில் சாதிய நச்சுப்பற்களுடன் எழுவதைக் காணும் அனுபவம் அடிக்கடி வந்துவிட்டது. அதன்பின் நட்பு, நேர்மை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99948

மழைப்பயணம் 2017
  நாகர்கோயிலிலும் மழைதான். இருந்தாலும் முறைப்படி செய்யவேண்டியதைச் செய்துவிடுவோம் என மழைப்பயணம் செல்ல முடிவெடுத்திருக்கிறோம். இன்று மாலை ரயிலில் நானும் ஜான் பிரதாப்சிங்கும் திண்டுக்கல் செல்கிறோம். அங்கே கிருஷ்ணன், சக்திகிருஷ்ணன் கும்பல் எங்களை எடுத்துக்கொள்கிறது. நேராக பீர்மேடு. அங்கிருந்து வாகமண். மேலும் சில புதிய புல்வெளிக்குன்றுகள். தென்னகத்தில் மேகாலயம் என்றால் வாகமண்தான். நூறு வெண்ணிறக் கால்களில் வானம் நின்றிருப்பதைப் பார்க்கலாம். புல்வெளி என்றால் நீரின் பிறிதொரு வண்ணம் என தோன்றும். செல்ல ஆரம்பித்து பன்னிரு ஆண்டுகளாகின்றன. இது …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99945

பொய்த்தேவு –நாலாம் தலைமுறை வாசகர் நோக்கில்
ஜெயமோகன் அவர்களின் வலைத்தளம் மூலமாக சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில் உள்ள நாவல்களை வாசிக்க தொடங்களாம் என்று க.நா.சுப்ரமண்யம் அவர்களின் “பொய்த் தேவு ” படிக்க ஆராம்பித்தேன். படிப்பதற்கு மிகவும் எளிய நடையில் தான் இருந்தது. நாவல் சோமு முதலியார் என்ற சாத்தனூர் மேட்டுத்தெரு வாசியை வைத்து நகர்கிறது, அவன் தேடலையும் அவன் அடைந்த உச்சத்தையும் பின் எல்லா வற்றையும் உதறி விட்டு அவன் அடையும் நிலையையும் காண்பிக்கிறது.  நான் காவேரி கரையில் இருக்கும் நிலத்தை சேர்ந்தவன் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99821

ஆரியர் வருகை -கடிதங்கள்
இனங்களும் மரபணுவும் பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு, வணக்கம். ஏற்கனவே திராவிட -ஆரிய இனம் பற்றிய சமீபத்திய கட்டுரையை “ஹிந்து ஆங்கில பதிப்பில்’கடந்த வாரம் படித்ததில் இருந்து அது பற்றிய தங்கள் கருத்தை கேட்கவேண்டும் என நினைத்திருந்தேன்.இன்று.வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்கு தங்களின் விரிவான இந்த – இனங்களும் மரபணுவும்-பதிலின் மூலம் தெளிவு பெற்றேன்.இருந்தபோதிலும் எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் அக்கட்டுரையில் கொடுத்திருந்த திரு.அரவிந்த நீலகண்டன் அவர்களின் எதிர்வினையில் மிகச் சரியாக குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல் – when writing on …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99879

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 37
36. புற்றமை நாகம் அணிச்சேடியர் இருவரும் சற்று விலகி தலைவணங்கி முடிந்துவிட்டதென்று அறிவிக்க சுதேஷ்ணை மீண்டும் ஒரு முறை ஆடியில் தன்னை பார்த்துவிட்டு எழுந்தாள். அவளுக்கு வலப்பக்கமாக நின்றிருந்த திரௌபதி “சற்று பொறுங்கள்!” என்று அவள் ஆடையின் மடிப்பொன்றை சீரமைக்கும்பொருட்டு சற்றே குனிந்து கையெடுத்தாள். “வேண்டாம்” என்று அவளை விலக்கிய சுதேஷ்ணை சுட்டுவிரலைக்காட்டி அணிச்சேடியிடம் அந்த மடிப்பை சீரமைக்க ஆணையிட்டாள். அவள் வந்து மண்டியிட்டு அந்தப் பனையோலைக்குருத்துபோன்ற மடிப்பை அடுக்கி அதில் சிறிய ஊசியொன்றை குத்தினாள். அணிச்சேடியர் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99798

உதயகுமாரின் பிராமண எதிர்ப்பு
ஜெ, எஸ்.பி.உதயகுமாரின் இக்கருத்துக்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? https://m.facebook.com/story.php?story_fbid=1422050687818637&id=100000411583309 ராம் *** அன்புள்ள ராம், ரத்தினச்சுருக்கமாகச் சொல்லப்போனால் அசட்டுத்தனம். அரசியல்ரீதியாகச் சொல்லப்போனால் முதிராநாஸிஸம். ஆனால் இங்கே இந்தமாதிரி எதிர்ப்பரசியல் பேசப்போகிறவர்கள் மிகப்பெரும்பாலானவர்கள் இந்த குட்டையில்தான் சென்று விழுகிறார்கள். இன்னொரு உதாரணம் மறைந்த நம்மாழ்வார்.சிறுவயதிலேயே மார்க்ஸியம் போன்றவற்றுக்குள் சென்றவர்களுக்கு இந்த மனச்சிக்கல் இருப்பதில்லை இது ஏன் என்பதை நானும் பலவாறாக யோசித்ததுண்டு. இவர்கள் அனைவருக்கும் குடும்பப்பின்னணியில் இருந்து பெரியாரியம் சார்ந்த வெறுப்பரசியல்தான் ஆரம்பத்தில் கிடைக்கிறது. அறிவியலோ சூழியலோ பின்னர் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99902

இந்த டீ சூடாறாதிருக்கட்டும்..
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு. நேற்று ஹம்பியில் உடைந்த கோபுரத்தை மழைமேகங்களின் பின்னனியில் புகைபடம் எடுக்க என் கேமராவில் நோக்கினேன். ஒரு கணம்தான் உடல் அதிர்ந்தது. ஒரு நிலைகுலைவு. அந்த அச்சம் ஏன் என தெரியவில்லை. கோபுரம் பின்னோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. அதற்குள் தர்க்க மனம் விழித்துகொண்டது. மழைமேகம் மெதுவாக வானில் ஊர்ந்துகொண்டிருந்தது. தானாக மனதில் தேவதேவன் அவர்களின் இக்கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன.   ”அசையும்போது தோணி அசையாதபோதே தீவு தோணிக்கும் தீவுக்குமிடையே மின்னற் பொழுதே தூரம்” இந்த …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99871

வெளி
மழையில் ஒரு காலைநடை சென்று வந்தேன். சற்றுத்தொலைவில் ஓர் உருவம் திடுக்கிடச்செய்தது. குமரகுருபரன். அதே நடை. புன்னகை வேறு. எப்படி விழாமலிருந்தேன் என்பதே ஆச்சரியம். அணுகிவந்தபோது இன்னொருவராக மாறினார். என்னிடம் “பார்வதிபுரத்துக்கு இப்டி போலாம்ல?’ புன்னகை வேறு. கண்கள் வேறு. குரலும் வேறு. முற்றிலும் வேறு ஆள்தான். ஆனால் குமரகுருபரன் நெல்லைக்காரர். இப்பகுதியில் பெரும்பாலும் எல்லாம் ஒரே குருதிக்குழுவினர்தான். என்னால் அவர் இரண்டாம் முறை கேட்டபின் தலையசைக்க மட்டுமே முடிந்தது அவர் நடந்து அகன்று செல்வதைக் கண்டேன். …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99927

கடிதங்கள்
அன்புள்ள ஜெ, நலமா!  நான் உங்களின் ஆரம்ப நிலை வாசகன் ,  நான் உங்களின் வாசகன் ஆவதற்கு மூல காரணம் தங்களின் தனிமனித அறமும் அது சார்ந்து இயங்கும் உங்கள் வாழ்வும் எழுத்தும், ஏனென்றால் கடந்த சில மாதங்களாகவே உங்கள் வலை பக்கத்தை தொடர்ந்து வசிக்கும் ஒரு மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்,காரணம் அணைத்து கட்டுரைகளிலும் வெளிப்படுவது அறம்சார்ந்த உணர்வும் , லட்சியவாத நோக்கும் போலித்தனமற்ற உண்மையும். குறிப்பாக உங்களின் அறம் சிறுகதையில் நீங்கள் முடிவாக வைக்க கூடிய அந்த …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99618

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 36
35. வேழமருப்பு சூதர்குழுவுடன் திரௌபதி விராடபுரியின் பெருங்கோட்டை வாயிலை அடைந்தபோது அந்தி கவியத் தொடங்கியிருந்தது. தொலைவிலேயே சூதர்குழுவின் தலைவர் விகிர்தர் “விரைந்து சென்றால் பெருவாயில் மூடுவதற்குள் நாம் நகருக்குள் நுழைந்துவிட முடியும். அந்திக்குப் பின் அயலவர்களை நகர்நுழைய ஒப்புவதில்லை. நாம் திறந்த வெளியில் தங்க வேண்டியிருக்கும்” என்றார். “நோக்குக, தென்மேற்கில் மின்னுகிறது. இப்பகுதிகளில் தென்மேற்கு முகிலூறினால் மழை உறுதி என்றே பொருள். திறந்த வெளியில் குழந்தைகளுடன் தங்குவதென்பது கடினம்.” திரௌபதி “கோட்டைமுகப்பில் தங்கும் இடங்கள் இல்லையா?” என்றாள். …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/99694

Older posts «