Daily Archive: May 5, 2017

பாகுபலியின் வெற்றி
சைதன்யா வீட்டுக்கு வந்திருக்கிறாள். அஜிதனும் வீட்டில் இருக்கிறான். குடும்பமாக பாகுபலி-2 பார்க்கவேண்டும். அதற்கு முன் பாகுபலி- 1 பார்க்கவேண்டும். அதற்கு டிவிடி பிளேயர் பழுதுபட்டதை மாற்றவேண்டும். நேற்று எல்லாவற்றையும் முடித்து நேற்றுத்தான் முதல்முறையாக   பாகுபலி- 1 ஐ பார்த்தேன்.   சினிமாவில் இருப்பவன், சில vfx படங்களுடன் தொடர்புகொண்டவன் என்றவகையில் இந்திய சினிமா சினிமாவரைகலையில் முதிர்ச்சி அடைந்துவிட்டது என்பதற்கான உதாரணம் இப்படம்என நினைக்கிறேன்.. இதுவரை வந்த எந்த இந்தியப் படமும் இந்தத் தரத்தை அடையவில்லை.   …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98251

இஸ்லாம் அச்சம்
  ஜெ இஸ்லாமியர்களுக்கு வீடு என்னும் கட்டுரையில் இஸ்லாமியர் குறித்த அச்சம் உங்களுக்கு உண்டு என எழுதியிருந்தீர்கள். அது என்னை மிகவும் புண்படுத்தியது. உங்கள் வாசகன் என்றமுறையில் இதை எழுதுகிறேன். எம்.ஹஸன் *** அன்புள்ள ஹஸன் அந்தக்கட்டுரையிலேயே நீங்கள் ஒன்றைப் பார்க்கலாம். நான் எப்போதும் மரபார்ந்த இஸ்லாமியருக்கு மிக அணுக்கமாகவே இருந்துவருகிறேன். குமரிமாவட்டத்தில் அப்படித்தான் வாழவும் முடியும். என் தந்தையின் தோழர் உம்ரா சென்றால் வீட்டுக்குச் சென்று வாழ்த்தி வணங்கி ஆசிபெறாமல் இருக்கமுடியாது இங்கே. இங்கே உள்ள …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98140

அப்துல் சமத் சமதானி
  அன்புள்ள ஜெ,   நலம். நலம் தானே.   ஜான் பால் மாஷ் ஸஃபாரி என்கிற மலையாள சேனலில் (இந்த சேனல் ஒரு அற்புதம். தமிழில் இது போல் எப்போதாவது வருமா ) வந்து 70களின், 80 களின் மலையாள திரைப்பட வரலாற்றை அழகான சொல்லாட்சியுடன், தேர்ந்த கதை சொல்லியின் லாவகத்துடன் சரளமாக விவரித்துப் போவது கலை வரலாறும்  கலையாகும் தருணம்.     கந்தர்வக்ஷேத்ரம் திரைப்படத்தில் பரதன் போட்ட முதல் செட் கதையை நீங்கள் குவைத்தில் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98203

அனல்காற்று விமர்சனம் .
மிக அருமையான நாவல், சந்தர்ப்பவாதம் அதன் விளைவுகள் மற்றும் உறவுகளின் நெருடல்கள் என உளவியல் குவியல் இப்புத்தகம்; இந்நாவலை பாலு மகேந்திர படமாக இயக்கவிருந்தார் மேலும் விஜய் சேதுபதி கதை நாயகனாக தேர்வு செய்தார்கள் ஆனால் கைகூடவில்லை. நீங்கள் திரை துறையில் முயற்சிப்பீர்களானால் கட்டாயம் இந்த நாவலை வாசிக்க வேண்டும், உறுதியாக திரைக்கதை யுக்த்தியை கற்றுக் கொடுக்கும்.
Permanent link to this article: https://www.jeyamohan.in/98151

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–94
94. இறுதிமலர் பீமன் தன் எண்ணங்களை ஒருங்கமைக்க முயன்றான். எண்ணங்களை நினைவுகள் ஊடறுத்தன. கலையக் கலைய தன்னை திரட்டிக்கொண்டு முன்சென்ற எண்ணங்கள் மேல் நினைவுகள் தொற்றிக்கொண்டன. அச்செயலை அறிந்தபோது அவற்றை அறியும் ஒரு சித்தம் பிரிந்து நின்றது. வெறும்நினைவுகள் என எவையேனும் உண்டா? வெறும் எண்ண ஓட்டமென்பது எவருக்கேனும் நிகழ்வதுண்டா? முகங்களின் குரல்களின் பெருக்கென சென்றுகொண்டே இருந்தது சித்தம். இதைக் கொண்டா கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்? இதனூடாகவா உறுதியான முடிவுகளை சென்றடைகிறார்கள்? அறுத்து வெளிவந்தபோது அவன் உடல் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98229