Daily Archive: May 4, 2017

பசுக்கொலை- பொருளியலும் சட்டமும்
 [முதற்கட்டுரை]  மாட்டிறைச்சி அரசியலும் பண்பாடும்  ,பசுக்கொலை அன்புள்ள திரு ஜெயமோகன், பசுக்கொலை தடை பற்றிய கருத்துக்களை படித்த பின், வேறு ஒரு கோணத்தை நினைவு படுத்த எழுதுகிறேன். இந்த விவாதத்தை உணவுப்பழக்கங்கள், ஜாதி மத சம்பிரதாயங்கள் ஆகியவற்றோடு சம்பந்தப்படுத்த தேவையில்லை. கோமாதா வதை தடைக்கும் புலால் மறுத்தலுக்கும் தொடர்பு இல்லை. உண்மையில் உணவை வைத்து எந்த ஒரு label உம் போட முடியாது. ஒரிஸ்ஸாவுக்கு வடகிழக்கு முழுதும் முழு அசைவம். பிராமணர்கள் அன்னப்ராசன சடங்குக்கு மீன் தான் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98125

சுஜாதா விருதுகள் -கடிதங்கள்
  ஆசிரியருக்கு வணக்கம்,   நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதுகிறேன். சுஜாதா விருதுகள் பற்றிய உங்களின் பதிவை வாசித்தேன். விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பெற்ற படைப்புகள் பற்றி சொல்கையில் கிருபாவின் சம்மனசக்காடு ஒரு இலக்கியவெற்றி என்று சொல்லியுள்ளீர்கள். ஆச்சிரயமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.     நான் அவரின் மூன்று கவிதைத் தொகுப்புகள் மற்றும் ஒரு நாவலை இதற்கு முன் வாசித்துள்ளேன். இதுதான் அவரின் மிகச் சுமாரான தொகுப்பென்று நான் கருதிவந்தேன். சில கவிதைகளெல்லாம் வேறு யார் பெயரிட்டு வந்திருந்தாலும் கவிதையென்றே …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98195

கி.ரா- ஞானபீடம்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ., கி.ராவுக்கு ஞானபீடம் – இன்றைய தேவை கி.ரா. அவர்களின் தீவிர வாசகி என்ற முறையில் கி.ரா.வுக்கு ஞானபீடம் என்று தாங்கள் விடுத்த அறைகூவல் நிறைவாக இருந்தாலும், இதை கூட சொல்லி செயலாற்றவேண்டிய சூழலில் இருக்கிறோமே என்ற கசப்புணர்வும் சேர்ந்த படி தான் உள்ளது. ஒரு மாபெரும் எழுத்தாளரை கொண்டுசென்று சேர்க்கவேண்டிய நிலை என்பதே சற்று அருவருக்கத்தக்க செயலாக எனக்கு தோன்றுகிறது என்று முதலில் சொல்லிவிடுகிறேன் – தவறென்றால் மன்னிக்கவும். நாடெங்கிலும் இருந்து வாசிப்புப்பசியும் நுண்ணுணர்வும் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98089

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–93
93. முதல்மணம் திசை தெளிவானதுமே பீமன் இயல்பாக நடக்கத் தொடங்கினான். எச்சரிக்கையில் கூரடைந்த புலன்கள் தளர்வுற்றதும் பசி தெரியலாயிற்று. பசி உணவுக்கான புலன்களை எழுப்பியது. மூக்கும் விழிகளும் தேடல்கொள்ள சற்று தொலைவிலேயே அவன் கனிமரங்களை கண்டான். மரங்களுக்கு நடுவே வாழைமரத்தொகைகள் யானைக்கூட்டங்களின் கால்கள்போல நின்றிருக்க உள்ளே குட்டிகள் என சிறு கன்றுகள் செவியாட்டின. பெரிய காய்களுடன் வாழைக்குலைகள் மத்தகத்திலிருந்து துதிக்கை என வளைந்து நின்றன. அவன் வாழைகளை உதைத்துச் சரித்து கனிகளை உரித்துத் தின்றான். உண்ணும்தோறும் பசிபெருக …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98207