Daily Archive: May 3, 2017

சுஜாதா விருதுகள்
  இம்முறை சுஜாதா விருதுகள் சரியான எழுத்தாளர்களின் சரியான படைப்புகளுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன என நினைக்கிறேன். சம்பிரதாயமான வாழ்த்தாக இருக்கவேண்டாம் என்பதனால் சம்பந்தப்பட்ட நூல்களையும் வாசித்துப்பார்த்தேன். என் சுருக்கமான மதிப்பீடுகள் இவை   இவ்விருதுப்பட்டியலில் முக்கியமான நூல்கள் சோ.தருமனின் சூல், பிரான்ஸிஸ் கிருபாவின் சம்மனசுக்காடு இரண்டும்தான். இரு இலக்கியவெற்றிகள் இப்படைப்புகள். சூல் விகடன் விருது உட்பட தொடர்ந்து விருதுகள் பெற்றுவருவது முக்கியமான ஒரு நிகழ்வு என நினைக்கிறேன்   வெயிலின் ‘கொஞ்சம் மனதுவையுங்கள் தோழர் ஃப்ராய்ட்’ சமீபத்திய கவிதைத் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98187

காற்று
டீ போட்டுவிட்டு கோப்பைகளைத் தேடினால் ஒன்றுகூட கைக்குச் சிக்கவில்லை. அருண்மொழி ஊரில் இல்லை. ஊட்டிக்கு என்னுடன் வந்துவிட்டு அவளும் அஜிதனும் திருவாரூருல் அவள் அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள். தனியாக இருக்கவேண்டும் சிலநாள். இந்த வீட்டில் அருண்மொழி எப்போதுமே இருந்துகொண்டிருக்கிறாள், அலுவலகம் சென்றுவிட்ட பின்னரும் – என உணர்கிறேன். ஆகவே அவள் ஊருக்குச் சென்றுவிட்டபின் பெரும்பாலும் இதற்குள் தனியாக இருக்கும் என்னால். அப்படிஇருக்கமுடியவில்லை. இந்த வீடு ஒருபக்கம் சுழல நான் எதிர்த்திசையில் சுழல்வதுபோல எப்போதும் எதன்மீதாவது உரசிக்கொண்டும் முட்டிக்கொண்டும் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98135

வீட்டை விட்டு ஓடும் ஜீவிதம்- எம்.ரிஷான் ஷெரீப்
கிளம்புதலும் திரும்புதலும் -கடலூர் சீனு’ மற்றும் ‘கிளம்புதல் -ஒரு கடிதம் ஆகிய கடிதங்களை வாசித்தேன். ‘வீட்டை விட்டுப் போய்விடுதல்’ அல்லது ‘விட்டுப் போய் விடுதல்’ என்பது எவ்வளவு சுதந்திரத்தை அளிக்கிறதோ அந்தளவு துயரத்தையும் அகத்தே கொண்டிருக்கிறது என்பதைத்தான் மறைவாகக் குறிப்பிடுகின்றன அவை. ‘கிளம்புதல்’ கடிதம் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள சில கணங்களாயிற்று. தனது பட்டமளிப்பு விழாவுக்கு அப்பாவை வர வேண்டாமெனச் சொல்லி சண்டை போட்ட மகனின் சூழ்நிலை தெரியவில்லை. ஆனால் அந்தத் தடை அப்பாவின் மனதை எவ்வளவு …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/97969

தேவதச்சன் –சபரிநாதன் உரை
  மணி இதை அனுப்பி இருந்தார், இது ஒரு சிறந்த உரை. நவீன கவிதை உலகு மிக காத்திரமாகத் தான் இயங்குகிறது, உள்ளீடுள்ள கவிஞனின்  குரல் இதில் ஒலிக்கிறது. இனிதான் நான் சபரி நாதனை படிக்கவேண்டும்.     கிருஷ்ணன்   அன்புள்ள கிருஷ்ணன்   ஆம், நல்ல உரைதான். கவிதையை பாவனைகள் ஏதுமில்லாமல் கவிதை வழியாகவே அணுகுகிறார். ஜெ ‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1 ‘தேவதச்சம்’ – சபரிநாதன் -2  
Permanent link to this article: https://www.jeyamohan.in/98173

ஊட்டி 2017-அ.முத்துலிங்கம்
நண்பர்களுக்கு வணக்கம், சிறுகதை அமர்வில் நான் தேர்ந்தெடுத்திருந்த சிறுகதைக்கான குறிப்பும் மற்றும் அது சார்ந்த உரையாடல்களின் சிறுகுறிப்பும்.. புளிக்கவைத்த அப்பம் ( சிறுகதை ) – அ.முத்துலிங்கம் http://amuttu.net/viewArticle/getArticle/233 இந்த சிறுகதையை உரையாடலுக்காக தேர்ந்தெடுத்ததற்கு முதல் காரணமாக அமைந்தது மூன்று காரணங்கள். 1) சிறுகதையின் உள்ளடக்கம் 2) எழுத்து நடை 3) கதைசொல்லியின் இடம் ஆனால் இரண்டாம் முறை படிக்கையிலேயே அ.முத்துலிங்கம் அவர்களின் இந்த திறமையான கதை சொல்லும் முறை ஒரு ஈர்ப்பை அளித்தது. ஆகவே, காரணங்களை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98118

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–92
92. கெடுமணச்சோலை “எத்துணை அரிதானதென்றாலும் எவ்வளவு அணுக்கமானதென்றாலும் நம்மால் எளிதில் கைவிட்டு விலகமுடிகிறதே, ஏன்?” என்றபடி முண்டன் பின்னால் வந்தான். “எங்கிருந்தானாலும் விலகிச்செல்கையில் நாம் அடையும் உள்ளுறை உவகையின் பொருள்தான் என்ன?” பீமன் அவனை நோக்கி “நான் உவகை அடையவில்லை. சோர்வு கொண்டிருக்கிறேன்” என்றான். “ஆம், அது உள்ளத்தில். ஆனால் உங்கள் நடையிலெழும் விரைவு பிறிதொன்றின் உவகையை காட்டுகிறது” என்றான் முண்டன். பீமன் ஒன்றும் சொல்லாமல் முன்னால் நடக்க முண்டன் “அமர்ந்திருக்கும் பறவை முந்தைய கணத்திலோ அடுத்த …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98178