Daily Archive: May 2, 2017

ஊட்டி சந்திப்பு -நன்றிகள்
ஊட்டி குருநித்யா காவிய அரங்கு சென்ற ஏப்ரல் 28, 29 மற்றும் 30 ஆம் தேதி நடந்துமுடிந்தது. இம்முறை முக்கால்வாசிப்பேர் புதியவர்கள். சென்ற புதியவாசகர் சந்திப்புகளில் கலந்துகொண்டவர்கள். வழக்கமான நண்பர்கள் அனைவரும் உண்டு. இம்முறை 80 பேர் கலந்துகொண்டார்கள். ஊட்டி குருகுல நூலக அறையில் போதிய இடமிருக்குமா என நிர்மால்யா சந்தேகப்பட்டார். நூலக அடுக்குகளை இடம் மாற்றியபோது இடம் மீந்தது. நாளுக்கு 15000 ரூ வாடகையில் அருகே ஒரு பங்களாவை பார்த்தோம். அங்கே இருபத்தைந்துபேர் தங்கினார்கள். ஆகவே …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98108

ஷண்முகவேல் -ஒரு திருட்டு
அன்புள்ள ஜெ ராகவ் அனுப்பிய மெயில் பார்த்தீர்களா? ஷண்முகவேல் பிரயாகைக்கு வரைந்த திரௌபது படத்தை அப்படியே ஒரு ஆங்கில நாவலில் பயன்படுத்தியுள்ளார்கள். அதுவும் அந்த எழுத்தாளரின் தளத்திலேயே வந்துள்ளது. http://www.madhavimahadevan.com/ https://www.facebook.com/MadhaviSMahadevan/ (இணைப்பு: மாதவி மகாதேவன் புத்தகத்தில் கையெழுத்திடுகிறார்) இதை ஷண்முகவேலே வரைந்தாரா என்று தெரியாதவரையில் இதை திருட்டு என்றே கொள்ளவேண்டும். இந்த நிறுவனத்தின் பெயர் வெஸ்ட்லேண்ட் புக்ஸ். இவர்களை அமேசான் நிறுவனமே வாங்கியுள்ளதாக செய்தி. (ஆச்சரியம் என்னவென்றால் வெஸ்ட்லேண்டின் லோகோவும் அப்படியே இன்னொரு பெருநிறுவனமாக வால்கிரீன்ஸின் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98075

ஊட்டி 2017 –கவிதைபற்றி…
அன்புள்ள ஜெ சென்ற ஊட்டி கூட்டம் முடிந்ததும் எழுதிய கடிதங்களை மீண்டும் படித்துப்பார்த்தேன். இந்த கடிதத்தில் (http://www.jeyamohan.in/75476 ) எனது வாசிப்பு எத்தகையது என்பது பற்றிய ஒரு புரிதல் கிட்டியிருக்கிறது. இம்முறை கடலூர் சீனு வின் உரையாடல் பகுதி அந்த திசை நோக்கி மீண்டும் யோசிக்கவைத்திருகிறது. எப்படி உரைநடை /சிறுகதை/ நாவல் என நாஞ்சில் சார் வழிகட்டியிருக்கிறாரோ அவ்வாறே கவிதைகளை அணுகுதல் குறித்தும் அவரே ஒரு கைகாட்டியாக இருந்து என்னை வழிநடத்தியிருக்கிறார். இதற்கு முன் “ஒரு புத்தரே …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98082

ஊட்டி 2017, கடிதம்
  வணக்கம் ஊட்டி காவிய முகாம் முடிந்து நேற்று இரவு ஒரு மணிக்கு வீடு வந்தோம். உண்மையிலேயே கனவுலகம் ஒன்றிலிருந்து திரும்பி வந்ததது போல் இருக்கிறது. வெண்முரசு வாசகர் வட்ட கூடுகைகளிலிருந்து இது மிக வேறு பட்டதாகவும்  நிறைய நிறைய கற்றுக்கொள்ளும் படியாகவும் இருந்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல நாடுகளில் இருந்தும் உங்களின் பிரியத்திற்குரிய வாசகர்கள் பலர் வந்திருந்ததும், மிக கட்டுக்கோப்புடன் முறையாக முகாம் நடந்ததும் ஆச்சர்யமாக இருந்தது. நேரத்திற்கு நல்ல  குளிருக்கேற்ற சூடான …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98085

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–91
91. இருமுகத்தாள் தேவயானி தங்கியிருந்த ஜலசாயை என்னும் சோலையை நெருங்கியபோது புரு பதற்றத்தில் இருகைகளையும் சேர்த்துக் கூப்பி அதில் முகம் பதித்து கண்களை மூடி உடலுக்குள் குருதியோடும் ஒலியை கேட்டுக்கொண்டு குழிக்குள் பதுங்கிய வேட்டையாடப்படும் முயல் என அமர்ந்திருந்தான். தேரின் சகடங்கள் கல்லிலும் குழியிலும் விழும் ஓசை ஒவ்வொன்றும் அவன் தலைமேல் உருளைக்கற்கள்போல விழுந்தன. பற்கள் கிட்டித்திருப்பதை செவிகளில் எழுந்த உரசல் ஓசை வழியாக அறிந்ததும் தலையை அசைத்து தன்னை விடுவித்துக்கொண்டான். மூச்சை இழுத்து இழுத்து விட்டு …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/98027