Daily Archive: May 1, 2017

கன்யாகுமரி
  பகடாலு நரசிம்மலு நாயிடு நூறாண்டுகளுக்கு முன்பு எழுதிய தென்னாட்டு யாத்திரைதான் தமிழில் முதலாவதாக பயணக்கட்டுரை என நினைக்கிறேன். அதில் அவர் கன்யாகுமரிக்குச் சென்றதை எழுதுகிறார். நாகர்கோயிலில் இருந்து வண்டிகட்டிக்கொண்டு செல்லவேண்டும். அங்கே மணல்மேடுகளுக்கு நடுவே கன்யாகுமரி அம்மனின் ஆலயம். அருகே திருவிதாங்கூர் மகாராஜா கட்டிய படித்துறையும் பலிமண்டபமும். அர்ச்சகர் இல்லத்தில் தங்கிக்கொள்ளலாம். அவர்களிடமே பாத்திரங்கள் வாங்கிச் சமைத்து உண்ணலாம். நிலவில் மணல்மேல் அமர்ந்திருப்பது பிரம்மத்தை நேரில்பார்ப்பது போல என்கிறார். காந்தி கன்யாகுமரிக்கு 1925 ல் வந்தார். …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/97834

சரஸ்வதி -ஒரு கடிதம்
  அன்புடன் ஆசிரியருக்கு சரஸ்வதி ஒரு நதியின் மறைவு குறித்த விவாதங்கள் ஏதுமில்லை என சீனு அண்ணன் வருந்தியவன்று அதன் இறுதி அத்தியாயங்களை வாசித்துக் கொண்டிருந்தேன். உண்மைதான். அந்நூல் அதிகமாக விவாதிக்கப்பட வேண்டியதே இங்கு தான். அந்நூல் குறித்த என் பார்வை. http://sureshezhuthu.blogspot.in/2017/04/blog-post_70.html?m=1 அன்புடன் சுரேஷ் பிரதீப் இந்தியச் சிந்தனையில்காலனியத் தாக்கங்கள் -2 -மிஷேல் டானினோ 2 இந்தியச் சிந்தனையில்காலனியத் தாக்கங்கள் -மிஷேல் டானினோ 1 வரலாற்று ஊகங்களை அணுகுதல்  
Permanent link to this article: https://www.jeyamohan.in/97831

கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, தங்கள் உறுதி தங்கள் மீதான மரியாதையும் அன்பையும் மேலும் உறுதிசெய்து வளர்க்கிறது. படைப்பாற்றலின் கரங்களுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தவராக உடல்-மனச் சோர்வுகளைத் தள்ளி கலையில் ஒருமை கொள்ளும் தங்கள் பால் ஈர்க்கப்படும் ஏராளமான இளைஞர்களும் தங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய உறுதி இது – ஊழையும் உப்பக்கம் காணும் உலைவின்மை. மாமலருடன் முதற்கனலையும் நாளுக்கு அய்ந்து அத்தியாயம் என்ற கணக்கில் -அத்துடன் திரு. அசோகமித்ரன் அவர்களின் சிறுகதைகள்-குறுநாவல்கள், திரு. பிரபஞ்சன் அவர்களின் “நாவல் பழ …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/97621

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–90
90. துலாநடனம் புரு அரசகோலத்தில் வெளியே வந்தபோது சுபகன் வணங்கியபடி அணுகி “அனைவரும் சித்தமாக இருக்கிறார்கள், அரசே” என்றான். அவன் கைகூப்பியபடி வெளியே சென்றான். சுகிர்தரின் மைந்தரும் பேரமைச்சருமான பிரபாகரரும் பட்டத்தரசியும் மைந்தர்களும் அங்கே காத்து நின்றிருந்தனர். அவன் வருகையை நிமித்திகன் வெள்ளிக்கோல் தூக்கி அறிவித்ததும் பெருமுரசுகள் முழங்கத் தொடங்கின. அவனைக் கண்டதும் மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் எழுந்தன. அவன் சென்று பிரபாகரரின் கால்களை பணிந்தான். “வெற்றியும் புகழும் பெருஞ்செல்வமும் குடிநிறைவும் அமைக!” என அவர் வாழ்த்தினார். …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/97940