Monthly Archive: May 2017

குரங்குத்தொடுகையும் மின்மினி ஒளியும்

  கொலாலம்பூரில் நல்ல மழை என நான் விமானத்திலிருந்தே ஊகித்தேன். நகரினூடாக ஓடும் க்ளாங் ஆறு செம்பெருக்காக கலங்கிச் சென்றுகொண்டிருந்தது. அதன் செம்மையில் கடலே கரையோரமாகக் கலங்கித்தெரிந்தது. நான் பலமுறை கொலாலம்பூரை வானிலிருந்து பார்த்திருக்கிறேன். இம்முறைதான் இத்தனை தெளிவாக கண்டேன். மழைபெய்து ஓய்ந்திருந்தமையால் வானில் தூசி இல்லை. முகில் இருந்தமையால் அளவான வெளிச்சம். மரங்களைக்கூட மிக அருகே என பார்க்கமுடிந்தது. கொலாலம்பூர் ஒரு மாபெரும் எண்ணைப்பனைத்தோட்டத்தால் சூழப்பட்டுள்ளது என்று தோன்றியது. நகரைச்சூழ்ந்து சதுப்பு போல ஆறுகள், கிளையாறுகள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/98857

அறத்தால் கண்காணிக்கப்படுதல்

அன்புடன் ஆசிரியருக்கு “ஆனால் ஏனோ விலக்க முடியாத ஒரு நம்பிக்கை உணர்வை நான் அடைகிறேன். இது ஒரு வகையான கடைசித் துடிப்பு என்ற எண்ணம் தான் எனக்கு ஏற்படுகிறது. உருவாகி வந்து கொண்டிருக்கும் புத்தம்புது உலகம் ஒன்றை எதிர்கொள்ளும் போது அந்தக் கடைசித் தருணத்தில் உருவாகும் ஒரு திமிறல் மட்டும் தான் இது.” எப்படி சொல்வதெனத் தெரியவில்லை. என்னுள் இருக்கும் ஒரு பைத்தியக்காரன் அல்லது optimist எப்போதும் எக்களித்துக் கூவும் இவ்வார்த்தைகளை உங்களிடமிருந்து கேட்பதில் ஏற்பட்டும் மகிழ்ச்சியும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/98800

இருகுரல்கள்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு, உங்கள் பதில் கண்டதில் பெரு மகிழ்ச்சி. நண்பர்களிடம் சிலாகித்து மாய்ந்துப் போனேன். தமிழ் தட்டச்சு மின்பொறியினைத் தேடிப்பொருத்தி, அடுத்த மின்னஞ்சல் தமிழில் தான் எழுத வேண்டும் என்று ஒரு வாரம் ஓடிற்று. நீங்கள் வாசிப்பு பற்றியும் மொழி பற்றியும் சொன்னது உண்மையே. பிடிப்பின்றி ஒரு ஊரிலுருந்து இன்னொரு ஊருக்கு மாற்றலாகியே, எங்கள் வாழ்க்கை கழிகிறது. தமிழர்கள் எங்கு சென்று குடியேரினாலும், அந்த நிலத்தின் வாழ்வியலின் மீது பற்றற்றே இருக்கின்றனர் என்று ஒரு புத்தக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/98692

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-7

6. முதல்மலர் நிஷத நாட்டு இளவரசனாகிய நளன் தன் பதின்மூன்றாவது வயதில் கோதாவரிக் கரையில் தாழைப்புதருக்குள் ஆடையின்றி நீராடிக்கொண்டிருந்த பெண் உடலொன்றின் காட்சியால் தன்னை ஆண் என உணர்ந்தான். அன்றுவரை அவன் அன்னையர் சூழ்ந்த அகத்தளத்தில் முதிரா மைந்தனாக விளையாடி வந்தான். அன்று தன் உடலை அச்சத்துடனும் அருவருப்புடனும் அறிந்து அங்கிருந்து விலகி ஓடி அப்பாலிருந்த நாணல் புதர்களுக்குள் ஒளிந்துகொண்டான். அந்த இழிச்சுமையிலிருந்து தன்னுள் உறையும் ஆத்மாவை பிரித்தெடுத்துவிடவேண்டும் என்று விழைந்தவன்போல அங்கு தவித்து எண்ணங்களில் உழன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/98855

வெற்றி [சிறுகதை]

  “அந்தக்காலத்தில் இந்த காஸ்மாபாலிட்டன் கிளப் என்பது புராணங்களில் சொல்லப்படும் மேருமலை மாதிரி. தேவர்கள் வந்திறங்கி பாதாளத்திலிருந்து ஏறி வரும் அசுரர்களை இங்குதான் சந்திப்பார்கள். நடுவே எங்களைப்போன்ற மனிதர்கள் ஒன்றும் தெரியாமல் சுற்றிக் கொண்டிருப்பார்கள். அவர்களை உங்களால் பார்க்க முடியும். என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது புரியாது. இருவருடைய தயவும் எங்களுக்குத் தேவை. ஆகவே பணிவே உருவாக இருப்போம்” என்றார் எஸ். ஆர். நமச்சிவாயம். நாங்கள் ’ப்ளாக் லேபிள்’ விஸ்கியின் இறுதிச் சுற்றில் இருந்தோம். அவருடைய ‘பிராண்ட்’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93083

பெருவெள்ளம்- எதிர்வினை

பெருவெள்ளம் அன்பின் ஜெ.மோ. அவர்களுக்கு, தங்களிடமிருந்து பதில் வந்ததே எனக்குள் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ‘நான்(ம்) x அவன்(ர்கள்) என்கிற வகைமை என்றைக்குமே நான் பொருட்படுத்தியதில்லை. கடந்த வாரம் சமஸ் தமிழ் தி இந்து நாளேட்டின் நடுப்பக்க கட்டுரையில் காந்தி தொடர்ந்து ஆங்கிலேய தரப்புடன் உரையாடி வந்தவர் என்பதை இன்று வலது / இடது என்று எழுதியிருந்தார். அது அப்படியே ‘தூய்மைவாதம்’ என்கிற பின்னோக்கிய பாய்ச்சலுக்கு ஏழாம் நூற்றாண்டு அரேபிய பாலைவெளிக்குள் வரலாற்றை பின்னகர்த்த நடக்கும் முயற்சிகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/98673

படங்கள்

வணக்கம், என்னுடைய கடிதம் உங்கள் தளத்தில் பிரசுரமானது மகிழ்ச்சி. இன்னும் ஆழமாய் எழுதியிருக்கலாமே என்று தோன்றியது. ஏனெனில், டச் ஸ்கிரீன் கவிதை பற்றி நீங்கள் சொன்னதை, என்னால் எங்கும் எப்பொழுதும் வரிவிடாமல் சொல்ல முடியும். அவ்வளவு அழுத்தமாய் சொன்னீர்கள். நானும் மனதின் ஆழத்தில் அப்படியான தருணங்களை தேடினேன். “ மெல்லத் தொட வேண்டிய இடங்களில் எல்லாம் அழுந்தி தொட்டதை நினைத்து வருந்தினேன், வெட்கினேன்.” குறளினிது கோவை உரை மொத்தம் 6 மணிநேரம் வரும். அதை குறைந்தது 5 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/98701

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-6

5. கரியெழில் விதர்ப்பத்தை நோக்கி செல்லும் பாதையில் நடக்கையில் தருமன் சொன்னார் “நாங்கள் இன்பத்துறப்பு நோன்பு கொண்டவர்கள், சூதரே. இன்னுணவு உண்பதில்லை. மலர்சூடுவதில்லை. எனவே செவ்வழியே செல்வதும் எங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. செல்வர் முகம் காண்பதும் நெறிப்பிழைவு என்றே கொள்ளப்படும்.” பிங்கலன் புன்னகைத்தபடி “நல்ல நோன்பு, முனிவரே. ஆனால் செல்வர் முகம் காண மறுப்பது துன்பத்துறப்பு அல்லவா?” என்றான். தருமன் புன்னகைத்து “கதையை தொடர்க!” என்றார். அவர்கள் பெரும்பாதையிலிருந்து கிளைபிரிந்து குறுங்காடு வழியாகச் சென்ற ஒற்றையடிப்பாதையில் நடந்தனர். ஒருவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/98843

சாகித்ய அக்காதமியும் நானும்

  சென்ற பிப்ரவரி 23 அன்று டெல்லி சாகித்ய அக்காதமி நடத்திய யுவசாகிதி என்னும் நிகழ்ச்சியின் ஓர் அரங்கை தொடக்கிவைத்து உரையாற்றும்படி என்னை அழைத்திருந்தார்கள். பயண ஏற்பாடுகளை நானே செய்யும்படி சாகித்ய அக்காதமி சொன்னது. பயணச்செலவுகளை அவர்கள் அங்கே அளிப்பார்கள் என்று சொன்னார்கள். நான் வழக்கமாக இவ்விதச் செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை.அன்று ஒரு சிறிய பயணம் தேவைப்பட்டது. ஆகவே பயணச்சீட்டு முன்பதிவு செய்து டெல்லி சென்றேன்   இண்டியா இண்டர்நேஷனல் விடுதியில் தங்கினேன். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அறைக்கு வந்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/98833

முதலாளித்துவப் பொருளியல் -எதிர்வினைகள்

தொழில்முனைவோர்- ஒர் எதிர்வினை நேரு முதல் மல்லையா வரை.. அன்பு ஜெயமோகன், வணக்கம். நலமா? திரு பாலா அவர்களின் நீண்ட கட்டுரையைப் படித்தேன். இவ்வளவு தீர்க்கமாகவும் ஆழமாகவும் எழுதப் பட்ட இது போன்ற கட்டுரை சமீபத்தில் வந்ததில்லை. எழுதிய பாலாவுக்கும் வெளியிட்ட உங்களுக்கும் பாராட்டுகள். நீங்கள் எழுதியதற்கும் அவரின் எதிர் வினைக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாய்த் தோன்றவில்லை. பொதுமயமாக்கப் பட்ட வங்கியிலும் தற்போது வெளி நாட்டு வங்கியிலும் பணியாற்றியவன் என்கிற முறையில் சொல்கிறேன். நம் தாழ்வு மனப்பான்மையினாலே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/98670

Older posts «