Daily Archive: April 28, 2017

மலேசியாவில் ஒரு சந்திப்பு




  மலேசியாவில் நண்பர் நவீன் ஒருங்கிணைக்கும் நவீன இலக்கியப் பயிற்சிப்பட்டறைக்காக வரும் மே மாதம் இறுதியில் கொலாலம்பூர் செல்கிறேன். மலேசியாவில் கூலிம் ஊரில் சுவாமி பிரம்மானந்தா அவர்கள் ஒருங்கிணைக்கும் இலக்கிய முகாம் ஜூன் மாதம் 2, 3, 4 தேதிகளில் நிகழவிருக்கிறது. இந்தியாவிலிருந்து ஒரு நண்பர்குழு செல்லவிருக்கிறது. பதினைந்துபேர் வரை இங்கிருந்து சென்று கலந்துகொள்ளலாம். வரவிரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம். ஜெயமோகன்  




Permanent link to this article: https://www.jeyamohan.in/97758

சுஜாதாவின் குரல்




மகாபலி சுஜாதாவின் இந்தக்கதையை ஓர் இணைப்பினூடாக மீண்டும் வாசித்தேன். சுஜாதா ஏன் முக்கியமானவர் என்றும் எங்கே தவறுகிறார் என்றும் மீண்டும் காட்டியது இந்தக்கதை.என் மதிப்பீடுகளில் ஏதேனும் மாற்றமுண்டா என்று பார்த்தேன். இல்லை. முதல் ஒரு பத்தியில் மகாபலிபுரத்தின் ஒரு ஒட்டுமொத்தச் சித்திரத்தைக் கொண்டுவந்துவிடுகிறார். மிகச்சுருக்கமான வர்ணனைகள். மெல்லியகேலி கொண்ட விவரணைகள். சட்டென்று ஒலிக்கும் உடலிலிக் குரல். அந்த ’கொலாஜ்’ மிகத்திறன் வாய்ந்த கலைஞனால் மட்டுமே உருவாக்கப்படக்கூடியது. பிரித்து நீவி நோக்கினால் அதிலுள்ள தேர்வும் முரண்பாடுகளின் ஒத்திசைவும் சுஜாதா …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/97801

இருவெற்றிகள்




அன்புள்ள ஜெயமோகன், என் முனைவர் பட்ட ஆய்வு சென்ற வாரத்தோடு நிறைவடைந்தது. ஆய்வேடும் சமர்ப்பிக்கப்பட்டது. ஆய்வேட்டின் முன்னட்டை இம்மடலுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆய்வு ஆடல் கோட்பாடு சார்ந்தது என்பது தாங்கள் அறிந்ததே. ஆய்வின்போது ஆய்வாளர் குழுமங்களில் மட்டுமல்லாமல் வேறுபல பொறியியல் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கூட ஆடல் கோட்பாடு குறித்து அறிமுகம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. நம் சொல்புதிது குழுமம் அதில் முக்கியமானது. அந்தவகையில் இக்கோட்பாடுகளுக்கு ஒரு வாசகப்பரப்பு உருவாகி வந்ததில் மகிழ்ச்சி. நேற்று (திங்கட்கிழமை) முதல் 1 நிறுவனத்தில் …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/97739

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–87




87. நீர்க்கொடை யயாதி தன் அகம்படியினருடன் குருநகரிக்கு சென்றுசேர பதினெட்டுநாட்களாகியது. அவன் உடல்கொண்ட களைப்பால் வழியில் ஒருநாளுக்கு நான்கு இடங்களில் தங்கி ஓய்வெடுக்க நேர்ந்தது. தேரிலும் பெரும்பாலான நேரம் துயின்றுகொண்டும் அரைவிழிப்பு நிலையில் எண்ணங்களின் பெருக்காகவுமே அவன் இருந்தான். அவன் கண்ட ஒவ்வொரு இடமும் உருமாறியிருந்தன. அண்மையில் உள்ளவை உருவழிந்து கலங்கித் தெரிந்தன. சேய்மையிலிருந்தவை ஒளிப்பெருக்கெனத் தெரிந்த தொடுவான் வட்டத்தில் கரைந்தவைபோல மிதந்தன. கலவிளிம்பில் ததும்பிச் சொட்டுவதுபோல அங்கிருந்து ஒவ்வொரு பொருளும் எழுந்து உருக்கொண்டு அணுகி அவன் …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/97851