Daily Archive: April 25, 2017

தனிப்பயணியின் தடம்

அனீஷ் கிருஷ்ணன் நாயர் எழுதிய எஸ்.எல்.பைரப்பா பற்றிய இக்குறிப்பு மிக முக்கியமானது. பைரப்பாவின் வாழ்க்கை வரலாற்றைப்பற்றிய மதிப்புரையே ஒரு வாழ்க்கைச்சுருக்கக் கட்டுரை போல் உள்ளது இச்சுருக்கம் காட்டும் சித்திரம் நமக்கு அறிமுகமானதே. ஃபைரப்பாவின் அம்மா, அப்பா உட்பட அனைவருமே அவருடைய கிருகபங்கா [ஒரு குடும்பம் சிதைகிறது – தமிழில்] ஏறத்தாழ இப்படியே சித்தரிக்கப்பட்டுள்ளனர் ஃபைரப்பாவை தேடித்தேடி வாசித்திருக்கிறேன், தமிழிலும் மலையாளத்திலும். அவரைப்பற்றி தமிழில் முதலில் எழுதியதும், தொடர்ந்து எழுதுவதும் நான்தான். இந்திய இலக்கியமேதைகளில் ஒருவர் என ஐயத்திற்கிடமில்லாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97636

தியடோர் பாஸ்கரன் – ஒரு கடிதம்

  அன்புள்ள ஜெயமோகன், தியடோர் பாஸ்கரன் அவர்களின் கல் மேல் நடந்த காலம் புத்தகத்தை படித்து உள்ளேன் உங்களின் இணையத்திலும் அதன் விமர்சனத்தை படிக்கநேர்ந்தது. அவரின் சுற்றுச்சூழல் எழுத்துகளை மட்டும் தனித்து எழுதி உள்ளேன் அவற்றை  உங்கள் பார்வைக்கு இணைத்து உள்ளேன். அவரும் இதை தன் முக நூல் பக்கத்தில் இணைப்பை தந்தது  மிகிழ்ச்சியை அளித்தது. http://birdsshadow.blogspot.in/2016/01/blog-post.html அன்புடன் செழியன் கல்மேல் நடந்த காலம் -கடலூர் சீனு தியடோர் பாஸ்கரன்:கடிதங்கள் மீசை பறக்கும் புல்லாங்குழல் தியடோர் பாஸ்கரன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97773

கிளம்புதல் -ஒரு கடிதம்

அன்புடன் ஆசிரியருக்கு எழுந்து அமர்ந்திருக்கிறேன். இன்னும் அண்ணனோ அம்மாவோ அப்பாவோ எழுந்திருக்கவில்லை. கிருட்டிகள் (சீவிடுகள்?) இன்னும் உயரழுத்த மின் கம்பியின் ஒலியை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. ஒரேயொரு நார்த்தங்குருவி தொடர்ந்து தனியே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறது. சீனு அண்ணனின் கிளம்புதலும் திரும்புதலும் பதிவினைப் படித்த கொந்தளிப்பு அடங்கவே இல்லை. எல்லா அம்மாவும் இப்படித்தானா? நான்காண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த என் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு அப்பாவை கட்டாயம் வரக்கூடாது எனச் சொல்லி சண்டை போட்டேன். ஆயிரம் பேருக்கு நடுவே எந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97643

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–84

84. பிறிதொரு சோலை தேவயானி தன்னை உணர்ந்தபோது ஒரு கணம் சோலையில் இருந்தாள். ஹிரண்யபுரியா என வியந்து இடமுணர்ந்து எழுந்தமர்ந்தாள். பறவையொலிகள் மாறுபட்டிருந்ததை கேட்டாள். உடல் மிக களைத்திருந்தது. வாய் உலர்ந்து கண்கள் எரிந்தன. சாளரத்தினூடாகத் தெரிந்த வானம் கரியதகடு போலிருந்தது. சாளரத்திரையை விலக்கி தொலைவை நோக்கியபோது விடிவெள்ளியை கண்டாள். எண்ணியிராத இனிய சொல் போன்று அது அவளை உளம்மலரச் செய்தது. விழியசைக்காது அதையே நோக்கிக்கொண்டிருந்தாள். ஒரு முத்து. ஓர் ஊசித் துளை. ஒரு விழி. ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97798