Daily Archive: April 23, 2017

பிறந்தநாள்

இன்று காலையிலிருந்தே மின்னஞ்சல்கள், அழைப்புக்கள். இம்முறை வாழ்த்துச் சொன்னவர்களில் எனக்கு முற்றிலும் அறிமுகமற்றவர்களே அதிகம். ஆச்சரியமென்னவென்றால் தேவதேவன் கூப்பிட்டு வாழ்த்து சொன்னார். ‘ஜெயமோகன், மனுசங்க பிறந்ததை எல்லாம் கொண்டாடுறாங்க தெரியுமா?’ என நினைக்கும் உலகைச்சேர்ந்த ஆத்மா. ஆச்சரியம்தான். நானே தேவதச்சனைக் கூப்பிட்டு நாளை நிகழவிருக்கும் அவருடைய படைப்புக்கள் பற்றிய கருத்தரங்குக்கு வாழ்த்துக்களைச் சொல்லி எனக்கு வாழ்த்துக்களைக் கோரிப் பெற்றுக் கொண்டேன். பிறந்தநாளுக்கு பெரிதாகக் கொண்டாட்டமெல்லாம் இல்லை. இம்முறை நான் வீட்டிலிருந்தமையால் அருண்மொழி சர்க்கரைப் பொங்கல் செய்திருந்தாள். காலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97782

மலமறுத்தல்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு, வணக்கம். ‘மலம்’ படித்தேன்.சற்று அளவுக்கு அதிகமாகவே ‘பொங்கிவிட்டீர்கள்’ என நினைக்கிறேன்!.உண்மையான சுத்தம் சார்ந்த ஆச்சாரத்தை பேணுவதில் தவறில்லையென்றே கருதுகிறேன்.(அதை முடிந்தவரை கடைபிடிப்பவர்களையும் அறிவேன்),அதே நேரத்தில் உங்களின் பெரும்பாலான வைணவ ஆலயங்களின் மடப்பள்ளிகளை பற்றிய அவதானிப்பு நூற்றுக்கு நூறு சரி. அன்புடன், அ.சேஷகிரி. அன்புள்ள சேஷகிரி, தவறான கருத்து வேறு ஆபத்தான கருத்து வேறு. ஆபத்தான கருத்து என்பது அடிப்படையில் மானுடவளர்ச்சிக்கே எதிரானது. ஒட்டுமொத்த மானுடச்சிந்தனையை எதிர்ப்பது. இன்று ஒருவர் தீண்டாமையை ஆதரித்து எழுதினார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97610

தேவதேவனும் நானும்

  தேவதேவனும் நானும் தேவதேவனின் கவிதையுலகம் தேவதேவனின் கவித்தரிசனம் தேவதேவன் கடிதம் கவிதையின் அரசியல் தேவதேவன் தேவதேவனின் பரிணாமம் தேவதேவனின் படிமங்கள் தேவதேவனின் வீடு:ஒரு குறிப்பு தேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி தேவதேவனின் பித்து ஒளி வாழ்த்து! கவிதையின் அரசியல்– தேவதேவன் விரல்நுனி வண்ணத்துப்பூச்சி நிழலில்லாத மனிதன் மாசு பருந்து பாலையின் மலர்மரம் மார்கழியில் தேவதேவன் உதிர்சருகின் முழுமை தேவதேவன் மகள் திருமணம் உறவுகளின் ஆடல் தேவதேவனின் கவியுலகம் தேவதேவனின் கவித்தரிசனம் http://www.jeyamohan.in/?p=32529 தேவதேவன் கருத்தரங்கம் தேவதேவனின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97770

மலம்- கடிதம்

அன்புள்ள ஜெ.. மலம் கட்டுரையில் நீங்கள் கொடுத்த இணைப்பை படித்தேன்..[.‘மலம்’ ] எனக்கு அது சாதியக் கட்டுரையாகத் தோன்றவில்லை.. சுஜாதா போல , மாற்றுப்பார்வையை அவரது நடையில் சொல்லிப்பார்க்கும் அசட்டு எழுத்தாகவே தோன்றியது   சுஜாதாவை ரசிக்கும் பலர் , அவரது பாணி என அவர்களாகவே நினைத்துக்கொண்டு , அவரைப்போல எழுத முயல்கிறார்கள்.. செய்யலாமா என கேட்டால் , லாமே என பதில் அளிப்பது , போன் டயலினேன் , அவனுக்கு மெயிலினேன் , வாட்ஸ்ப்பினான் , …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97619

காலடியோசை -கடிதங்கள்

  அன்புள்ள ஜெ., காலடி ஓசையிலே வாசித்தேன் சிறுவயதில் இந்தப்பாடல் ‘உன் காலடி ஓசையிலே ஒரு காவியம் நான் படைப்பேன்’ என்றே மனதில் நின்றிருந்தது.. கல்லூரிப் பருவத்தில் முதன்முதலாக ‘உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்’ என்று கவனித்துக்கேட்டபோது ஒருமுறை அதிர்ந்தது இதயம்.. கவிதை உணர்வு எனக்குக் குறைவுதான்.. ஆனால் சிலவரிகள் பொருளைத்தாண்டி சட்டென்று ஏதோ ஒரு நரம்பைத் தீண்டிவிடுகின்றன.. என்னாலும் மறக்கமுடியாத ஒருவரி இது.. நன்றி, ரத்தன்   அன்பின் ஜெ   நானும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97734

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–82

82. மலைநிலம் அசோகவனியிலிருந்து ஹிரண்யபுரிக்குச் சென்று சுக்ரரைப் பார்த்து வருவதாகத்தான் தேவயானியின் முதல் திட்டம் அமைந்திருந்தது. அது மாற்றப்பட்டுவிட்டதை சாயை கிளம்புவதற்கு முந்தையநாள் கிருபரின் நாவிலிருந்துதான் அறிந்தாள். பயணத்துக்கான தேர்கள் ஒருங்கிவிட்டனவா என்று பார்ப்பதற்காக கொட்டிலுக்குச் சென்றிருந்த அவள் மலைப்பாதைகளில் ஊர்வதற்குரிய அகன்ற பட்டைகொண்ட ஆறு பெரிய சகடங்களில் அமைந்த தேர் அரசிக்கென ஒருக்கப்பட்டிருப்பதை கண்டாள். இரண்டு புரவிகளுடன் விரைவிலாது செல்லும் அது நெடும்பயணத்திற்கு உகந்ததல்ல. சினத்துடன் திரும்பி தன்னருகே நின்றிருந்த கிருபரிடம் “இத்தேரை ஒருக்கும்படி ஆணையிட்டது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97817