Daily Archive: April 17, 2017

அஞ்சலி மா.அரங்கநாதன்

தமிழ்ச்சிறுகதை ஆசிரியர்களில் முக்கியமானவரான மா.அரங்கநாதன் மறைந்தார். குமரிமாவட்டத்தில் திருப்பதிச்சாரம் என்னும் திருவெண்பரிசாரம் இலக்கியரீதியாக முக்கியமானது. இங்கே மையமாக திருவாழிமார்பனின் ஆலயம் உள்ளது. இச்சிற்றூரிலிருந்து பல எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். எம்.சிவசுப்ரமணியம் [எம்.எஸ்], குமரித்துறைவன், அச்சுதன் அடுக்கா என. கிருத்திகாவின் கணவர் பூதலிங்கம் இவ்வூர்க்காரர். இதுதான் வாசவேஸ்வரமாக கிருத்திகாவின் நாவலில் வெளிப்பட்டது. திருப்பதிச்சாரத்தில் எம்.சிவசுப்ரமணியத்தின் தம்பியாகப் பிறந்தவர் மா.அரங்கநாதன். பெரும்பாலும் திருப்பதிச்சாரத்தைச் சுற்றியே மா.அரங்கநாதனின் கதைகள் அமைந்தன. அவருடைய கதாபாத்திரங்களில் தன்னிலையில் பேசுபவை முத்துக்கருப்பன் என்ற மாறாப்பெயரில் விளங்கின. மெல்லியநகைச்சுவையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97488

கொல்வேல் அரசி

  நேற்றுமுன்தினம் [14-4-2017] என் மடிக்கணினிகளில் ஒன்றில் ஒரு சிக்கல் தொடங்கியது, அதில் எதை தட்டச்சு செய்தாலும் இரண்டுமூன்றுமுறை விழுந்தது. இன்னொரு மடிக்கணினி மென்பொருட்கள் இறுகி அசைவிழந்தது. அதை அழுத்தி மின்துண்டிப்பு செய்தேன். மீண்டும் தொடங்கியபோது ஒரு மங்கலான புன்னகையுடன் அப்படியே நின்றது எதுவுமே எழவில்லை. மறுநாளைக்கான வெண்முரசு கையிருப்பு இல்லை. ஒர் இலக்கம் தட்டச்சு செய்தே ஆகவேண்டும். ஒரு கணிப்பொறியைக் கொண்டுசென்று பழுதுநீக்குமிடத்தில் அளித்தேன். அங்கே புத்தாண்டும் துயர்வெள்ளியும் சேர்ந்தே வருவதனால் ஆளில்லை. ஒரு பையன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97411

ஏன் எல்லாவற்றையும்- ஒரு கடிதம்

  அன்பு ஜெ, நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை. உண்மை மட்டுமே. உண்மை தவிர வேறு ஒன்றும் இல்லை உங்கள் ராஜ்யம் இலக்கியம். அதனூடேயே தத்துவம், வரலாறு, காந்தி என அந்த ராஜ்யம் விரிகின்றது. இந்த பிரதேசத்திற்குள்  உங்கள் ஆளுமை மற்றும் விரிவு அளப்பரியது. அங்கே சமர் நின்று விவாதிக்க, பேச, மறுக்க ஆட்கள் குறைவு. எழுத்தாளன் என்று நின்று விடாமல், உயிர்ப்புடன் முன் செல்லும் விசை ஆனால் ஐயன்மீர், கிராமங்களில் குப்பை மலை பற்றியோ, பேருந்துப் பயணம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97356

காடு– ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு தங்களது ‘காடு’ நாவலை இரண்டாவது முறையாக, ரசித்து வாசித்து முடித்தேன். முதல் முறை படித்த போது காட்டிற்குள் வழி தவறி வெளியே வந்தால் போதும் என்றாகி விட்டது. மனதிற்குள் எப்பொழுதும் உங்களுடன் விவாதித்து கொண்டு தான் இருக்கிறேன். வாசகன் ஒரு எழுத்தாளருக்கு கடிதம் எழுதுவது போல் தர்மசங்கடம் ஏதும் இல்லை. கிரிதரன் நாவல் முழுதும் ஒரு இடத்தில் கூட, நான் உன்னை காதலிக்கிறேன் என்று நீலியிடம் சொல்லவில்லை. என்னுடைய மிகக்குறைந்த வாசிப்பனுபவத்தில் இந்தளவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97324

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–76

76. ஐம்பெருக்கு “ஐந்து துணையாறுகள் இணைந்து பெருகி ஓடும் இந்த நதி கடலை அணுகுகையில் ஐந்து கிளையாறுகளென்றாகிறது. எந்தத் துணையாறு எந்தக் கிளையாறாகிறதென்று எவர் சொல்ல முடியும்? நதியறிந்திருக்குமோ? நீர் அறிந்திருக்குமோ? ஊற்றுமுகங்கள் அறிந்தனவோ? ஒற்றைமேலாடை என புவிமகள் இடையும் தோளும் சுற்றிய ஆழிநீலம் அறிந்திருக்குமோ? அதிலெழும் அலைகள் அறிந்திருக்குமோ? அதிலாடும் காற்றும் அதில் ஒளிரும் வானும் அறிந்திருக்குமோ? முந்நீரும் முழுப்புவியும் ஒருதுளியென தன் கால்விரல் முனையில் சூடிய பிரம்மம்தான் அதை சொல்லலாகுமோ?” மாளவத்துக் கவிஞர் சாம்பவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97435