Daily Archive: April 12, 2017

வன்முறை வளர்கிறதா?
இனிய சகோதரனுக்கு நேற்று அதிகாலையில் விழித்து மறுபடியும் தூக்கம் வராமல் டிவி பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு செய்தி சானலில் வரிசையாக மூன்று நிகழ்வுகள். 1. ஏதோ கட்சி சண்டை. ஒரு குழு இன்னொரு குழுவை அடித்து நொறுக்குகிறது. ரத்த விளாறாய் ஆன பின்னும் அடிப்பது தொடர்கிறது. 2. ஒரு ஆட்டோவும் இன்னொரு வண்டியும் மோதிக்கொண்டது. யார் மேல் தவறு என்று தெரியவில்லை. பேசிக் கொண்டிருக்கும்போதே ஒருவர் எதையோ எடுத்து ஓங்கி ஒரே அடி. ஆட்டோக்கார வாலிபன் இறந்து விட்டான். …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/97263

தனித்திருப்பவர்களின் கொண்டாட்டம்
  அன்பின் ஜெ, வணக்கம்.உங்கள் தளத்தில் பழைய பதிவுகளை வாசித்துக்கொண்டிருந்தேன்.யாதெனின் யாதெனின்‘ குறளுக்கு தங்கள் விளக்கமும் அதிலுள்ள உண்மையும் எனக்கு மிகவும் நெருக்கமாகத் தோன்றியது. என் சொந்த அனுபவங்கள் சிலவற்றை எண்ணி வருந்திய நிலையில் இப்பதிவு நல்ல திறப்பாக எனக்கு அமைந்தது.நான் பல வேளைகளில் அப்படித்தான் நடக்க எண்ணுகிறேன்.உலகியல் வாழ்க்கைத் தேவைகளில் இப்படி தேவைக்கு மேலானவற்றை உதறிவிடவே எண்ணி செயல்படுகிறேன்.ஆனால் அப்படி நான் விட்டுக் கொடுப்பதும்,வேண்டாம் என்று உதறுவதும் சில வேளைகளில் என்னை எளிதாக ஏமாளி என்று …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/97219

சோம்பல், எதிர்சோம்பல் -கடிதங்கள்
  அன்பு ஜெமோ, நலம் தானே? ஆணவமும் சோம்பலும் & எழுதலின் விதிகள் இரண்டுமே மனதுக்கு உற்சாகத்தை அளித்தன. நன்றி. நண்பரின் கேள்வியைப் பார்த்தபோது, இதற்கு ஏற்கனவே பதில் சொல்லியிருக்கிறீர்களே என்று தோன்றியது. ஒருநாளில் உங்கள் வேலைகள் என்னென்ன என்று விவரித்திருந்தீர்கள். ஒருநாள் / தினமும்/தினசரி வேலை/ஜெயமோகன் என்றெல்லாம் விதவிதமாக கூகுளாண்டவரிடம் ஜெபித்ததில், கருணையுடன் கீழே உள்ள லிங்க்கை கொடுத்தருளினார். அது, ஒவ்வொரு நாளும். http://www.jeyamohan.in/582#.WOp_ZWclHIU கேள்வி கேட்ட நண்பருக்கு இது உதவலாம். அன்புடன் செங்கோவி   …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/97224

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–71
71. காலமணிகள் அனைத்தும் எத்தனை விரைவில் திரும்பி மறுதிசைச்சுழற்சி கொள்ளத்தொடங்கின என்பதை சர்மிஷ்டை பெருவியப்புடன் எண்ணிக்கொண்டாள். ஒருநாள் இரவு இருண்டு மறுநாள் புலர்ந்ததும் சூழ்ந்திருந்த அனைத்துமே பிறிதொன்றென்றாயின. அத்தனை மானுடருமே பிறிதொரு முகம் கொண்டனர். சுவர்களும் தூண்களும்கூட உருமாறியிருப்பதாகத் தோன்றியது. எத்தனையோமுறை நூல்களில் ஒவ்வொரு காலையும் புவியில் புதிதாகத்தான் பிறந்தெழுகிறது என்பதை அவள் படித்திருந்தால்கூட அன்றுதான் அதை கண்முன் உண்மையென அறிந்தாள். அன்றிரவு தன்னால் துயிலமுடியுமென்று அவள் எண்ணியிருக்கவில்லை. ஆனால் விழிமூடி கண்களுக்குள் ஓடிய குமிழிகளை நோக்கிக்கொண்டிருந்த …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/97242