Daily Archive: April 6, 2017

சதுரங்க ஆட்டத்தில்
  ”டே நீ சி.வியை வாசிச்சிருக்கியா?”என்றார் பாலசந்திரன் சுள்ளிக்காடு. ”ஆமாம்” என்றேன். ”என்ன வாசிச்சே?” நான் யோசித்து ”எல்லாம் ஹிஸ்டாரிகல் ரொமான்ஸ். அதெல்லாம் லிட்டரேச்சர் இல்லை” என்றேன். அப்போது நான் சுந்தர ரமசாமியின் ஞானப்பிடியில் அடங்கி இருந்த காலம். யோசித்து யோசித்து, பூடகமாக எழுதப்படும் நவீனத்துவ யதார்த்த எழுத்து அல்லாமல் எதுவுமே இலக்கியமல்ல என்ற நம்பிக்கை என்னுள் நடப்பட்டு ஓயாமல் நீரூற்றப்பட்டுக்கொண்டிருந்தது. ”போடா மயிரே…நீ கண்டே பெரிசா…” என்றார் பாலசந்திரன். சி.வி.ராமன்பிள்ளையின் தர்மராஜா என்ற நாவலில் இருந்து …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/1081

ஊமைச்செந்நாய் -வாசகர் கடிதம்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு, நலம் தானே. உங்களுக்கு ஒரு வாசக கடிதம் எழுதச்சொல்லி என்னை பல முறை வற்புறுத்தியவர் வானவன் மாதேவி அக்கா, எனக்கு தான் உங்களிடம் எழுதுவதில் ஒரு தயக்கம் அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இந்த வாசக கடிதத்தை எழுதுகிறேன். இனி நான் எழுத இருப்பதில் ஏதேனும் இலக்கண, இலக்கிய பிழை இருப்பின் என்னை மன்னித்து விடுங்கள். “ஊமைச்செந்நாய்” உங்கள் கதைகளின் தலைப்பே என்னை எப்போதும் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/96102

சீனுவுக்கு இரு கடிதங்கள்
அன்பின் சீனு! எனக்கும் யோகிக்கும் இடையே நீங்கள் ‘’புக் மார்க்’’ போல எனக் கூறியதை மிகவும் ரசித்தேன். நாம் செத்தவரை சென்று வந்த இரண்டாம் நாள் மயிலாடுதுறை நண்பர் ஒருவருடன் மீண்டும் அங்கே சென்றேன். இம்முறை உள்ளூர் விவசாயி ஒருவர் வழிகாட்டினார். நாம் ஏறிச் சென்ற பாதைக்கு இணையான ஒரு பாதை இருந்தது. விவசாயி இலகுவாக ஏறினார். பாறைகளில் முட்டி போட்டு தவழ்ந்து மெல்ல மேலேறினோம். எங்களுக்கு வியர்த்துக் கொட்டி மூச்சு வாங்கியது. இரண்டு இடங்களில் பத்து …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/97086

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–65
65. பறந்தெழுதல் தேவயானியின் வருகையால் சர்மிஷ்டை அகம்குலைந்தது அவள் முகத்தில் சொற்களில் நடையில் அனைத்திலும் வெளிப்பட்டது.  “சுழல்காற்று கலைத்த தாமரைபோல” என்று விறலி ஒருத்தி அகத்தளத்தில் அமர்ந்து அவளை நகையாடினாள். அப்போது அவள் அங்கே வர அவள் அதே சொல்லொழுக்கில் பேச்சை மாற்றி “நீரலைகள் காற்று சென்றதுமே மீள்கின்றன. தாமரையோ மீள்வதே இல்லை” என்றாள். சர்மிஷ்டை வந்து அமர்ந்து “என்ன?” என்றாள். “ஒரு பாடல்” என்றாள் விறலி. “பிரிவுக்குப்பின் அனைத்தும் மீண்டுவிடுகின்றன. தலைவன் வளர்த்த காளையும், அவன் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/97091