Daily Archive: April 5, 2017

பறக்கையில் ஒரு தோற்பாவை நிழல்கூத்து
நேற்று முன்தினம் [2-4-2017] மாலை அ.கா.பெருமாள் அவருடைய இளம்நண்பர் ராம் அழைத்துவர வீட்டுக்கு வந்திருந்தார். அவருடைய தோல்பாவை நிழல்கூத்து நூல் காவியா வெளியீடாக முழுமையான தொகுப்பாக வெளிவந்துள்ளது. பல்வேறு தருணங்களில் அ.கா.பெருமாள் எழுதிய தோல்பாவைநிழற்கூத்து குறித்த அனைத்துச்செய்திகளும் அடங்கிய ஆய்வுநூல் இது அ.கா.பெருமாள் அவர்களைப்பார்த்து சிலகாலம் ஆகிறது. சென்னையிலும் நாகர்கோயிலிலுமாக மாறிமாறி இருக்கிறர். சற்று களைத்திருக்கிறார். பல்லாயிரம் கிலோமீட்டர்கள் குமரிமாவட்டத்திற்குள்ளேயே சுற்றிச்சுற்றிச் செய்திசேகரித்தவர். இன்று சொந்தமாக வண்டி ஓட்டுவதில்லை. ஆய்வுப்பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றார். மறைந்த தமிழறிஞர்களைப்பற்றி அவர் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/97078

நோட்டு,செல்பேசி, வாடகைவீடு- கடிதங்கள்
பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு, பெருநோட்டு அகற்ற நடவடிக்கையினால் “இந்தியப் பொருளியலே அழியும் என எத்தனை ‘ஆய்வாளர்கள்’ எழுதியிருக்கிறர்கள் என்று திரும்பிப்பார்த்தேன், ஆச்சரியமாக இருந்தது. அவர்களெல்லாம் அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்தவற்றுக்குச் சென்றுவிட்டார்கள்.” என்று அங்கலாய்த்திருக்கிறீர்கள். மற்றவர்களை விடுங்கள்.மாபெரும் பொருளாதார மேதை என்று போற்றப்படும் அமர்த்தியாசென்னோ பொருளாதார நிபுணரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங்கோ, அல்லது ப.சி.மோ என்னவெல்லாம் பேசினார்கள்? இந்த நடவடிக்கை நாட்டிற்கு ஒரு பேரழிவைக்  கொண்டுவரும் என்றும்  மோதி யாரையும் கலந்தாலோசிக்காமல் (தனது நிதியமைச்சரைக்கூட) முட்டாள்தனமான …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/97030

முதன்மை எழுத்தாளர் -கடிதம்
ஜெமோ, முதன்மையான எழுத்தாளர்களை அவர்களின் புத்தக விற்பனையை மட்டுமே கணக்கில்கொண்டு முடிவு செய்யும் பேதமையை என்னவென்று சொல்வது.? இவர்களுக்கு என்ன வருத்தம்? உங்களின் புத்தகங்கள் அதிக பக்கம் என்பதா? இல்லை நீங்கள் எழுதுவதை புரிந்து கொள்ள முடியவில்லை என்பதா? இல்லை உங்களுடைய விமர்சனங்கள் கடுமையாக (அதாவது நேர்மையாக) உள்ளது என்பதாலா? இதுவரை உங்களுடைய படைப்புகளை முழுமையாகப் படித்து நேர்மையாக விமரிசித்த எந்த இணைய எழுத்தாளரும் என் கண்ணுக்கு அகப்படவில்லை. உங்களுக்காவது தெரிந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். மேலும், நீங்கள் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/97037

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–64
64. நிழல்வேங்கை முறைமைச் சடங்குகள் முடிந்ததும் தேவயானியை தனியறைக்குச் சென்று ஆடைமாற்றி ஓய்வெடுக்கும்படி முதுசேடி சொன்னாள். அரசியரும் சர்மிஷ்டையும் குடிமூத்தபெண்டிரும் விடைபெற்று கிளம்பினர். தேவயானி  எழுந்ததுமே ஓர் இளம்சேடி குனிந்து அவள் ஆடைகளை மடித்து சீரமைத்தாள். அவள் எதிர்பாராதபடி குனிந்தது தேவயானியை திடுக்கிட்டு பின்னடையச் செய்தது. “ஆடை…, தேவி” என்றாள் இளம்சேடி. தேவயானி புன்னகையுடன் “சொல்லிவிட்டு செய்!” என்றாள். “அரசியர் பல மடிப்புகள் கொண்ட ஆடையணிந்திருப்பார்கள். அவற்றை சேடியர் சீரமைப்பது ஒரு வழக்கம்” என்றாள் இளம்சேடி. அவள் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/97061