Daily Archive: April 2, 2017

அமிர்தாஞ்சன் கீரை மிக்சர்
  அப்படித்தான் அந்தக்காலத்து குமுதத்தில் வந்த விளம்பரத்தை நான் படித்தேன். ஒருமுறை அப்படிப் படித்தபின் அதே தடம் மூளைக்குப் பதிந்து வேறு சொல் உள்ளே செல்லவில்லை. வாய் வழியாக அது ஊரில் பரவியது. ”அமேரிக்கக் கீரையக் கடஞ்சு செய்த சரக்குல்லா?” என்று நாகலிங்கம் மூத்தாசாரி சொன்னார். அவருக்கு காலை எழுந்ததும் ஒரு கட்டங் காப்பிக்கு மேலே அமிர்தாஞ்சன் போட்டாகவேண்டும். எங்கள் வீட்டில் எப்படியும் தினம் இருபது பேர் அமிர்தாஞ்சன் போட்டுவிடவோ செம்பருத்தி இலையில் வழித்து மடக்கிக் கொண்டுபோகவோ …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/228

பெருநோட்டு அகற்ற நடவடிக்கையின் நிகர்மதிப்பு
பெரும்பாலான தருணங்களில் நாம் சமூகவலைத்தளவிவாதங்களில் பேசப்பட்டவற்றைத் திரும்பச்சென்று பார்ப்பதே இல்லை. எதையும் மிதமிஞ்சி சொல்லி, உக்கிரமாக வாதாடி, அப்படியே விட்டுவிட்டு மீண்டு வந்திருப்போம். மோடியின் பெருநோட்டு அகற்ற நடவடிக்கை வந்தபோது அது அறிவிக்கப்பட்ட பத்து நிமிடத்திலேயே நம்மூர் மோடி வெறுப்பாளர்கள் பொருளியல்மேதைகளாக வேடமிட்டுக்கொண்டு அது மொத்த தேசத்தையும் பேரழிவுக்குக் கொண்டு செல்லும் என அறிவித்தனர். அந்நடவடிக்கையின் நோக்கமேகூட இந்தியப்பொருளியலை அழிப்பதுதான் என ஆரூடம் சொன்னார்கள். பாரதியஜனதாவின் தற்கொலை என சிலர் மகிழ்ந்தார்கள். அத்தனை வகைகளிலும் அவநம்பிக்கையை கசப்பைப் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/96969

என் கந்தர்வன் — பாலா
  அன்பின் ஜெ. தலைவர்களும், தலைமைப் பண்புகளும் என்னும் தலைப்பு மிகப் பிடித்தமான ஒன்று. அது பற்றிய வரையறைகள் காலந்தோறும் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. அந்த மாறுதல்களைப் படிப்பது மிக சுவாரஸ்யம்,ஒவ்வொரு பெரும் நிறுவனமும், தன்னுள்ளே தலைவர்களை உருவாக்க, அதற்கான சூழலை உருவாக்க பெரும் முயற்சிகளை எடுக்க முயல்கின்றன. கூகுள் அதில் ஒரு முயற்சியாக – டாக்ஸ் அட் கூகுள் என்னும் வரிசையில் பெரும் கலை ஆளுமைகளை அழைத்து உரையாடுகிறார்கள்.தகவல் தொழில்நுட்பத்தின் உச்சமும் கலையும் சந்திக்கும் இடத்தில் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/96809

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–61
61. தென்முனைக்கன்னி அன்று இரவு முழுக்க அவள் இனித்துக்கொண்டே இருந்தாள். உடலே தேனில் நாவென திளைத்தது. மாலையில் சிவந்து உருகி முறுகி இருண்ட ஒளி, மயங்கி எரிந்து அணைந்த மரங்கள், அந்தியின் இளநீராவிக்காற்று, எழுந்து வலுத்து அடங்கிய புள்ளோசை, அதன்பின் எழுந்த இரவுக்குளிர், சீவிடுகளின் இசை என அனைத்தும் இனித்தன. முற்றிலும் இனித்து இப்படி ஒருத்தி இருக்கமுடியுமா? இத்தனை இன்பத்தை மானுடருக்கு அளிக்குமா தெய்வங்கள்? பொறுக்கா என்றால் வஞ்சம் கொண்டு கருக்கட்டும் அவை. எழுந்து தங்கள் படைக்கலங்கள் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/96952