Daily Archive: April 1, 2017

இரு கடிதங்கள்
அன்புள்ள ஜெ   ரியாஸ் உங்களுக்கு எழுதிய கடிதத்தை அப்படியே தனக்கும் எழுதியதாக சொல்லி மனுஷ்யபுத்திரன் தன் முகநூலில் நக்கலடித்திருக்கிறார் .உங்கள் வாசிப்புக்காக   ஜெம்ஸ் ராஜசேகர்   அன்புள்ள ராஜசேகர்,   நலம்தானே? அவர் நுணுக்கமாக கிண்டலடிக்கிறாராமாம். அதாவது ரியாஸ் என எவரும் இல்லை, அது பொய்யான கடிதம், அதைச் சுட்டிக்காட்டுகிறாராமாம். என்னத்தைச் சொல்ல   இது தொடர்ந்து நிகழ்கிறது, இணையத்தின் அரைவேக்காடுகள் என் தளத்தில் வரும் கடிதங்களை வைத்துக்கிண்டல்செய்வது. இது ஒருபெரிய அறிவார்ந்த வட்டம் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/96989

புதிய ஆகாசம் புதிய பூமி
1962 ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி மலையாளத்தில் ’புதிய ஆகாசம் புதிய பூமி’ என்னும் படம் வெளியாகியது. எம்.எஸ்.மணி இயக்கியது. தோப்பில் பாஸி கதைவசனம். சத்யன் ராகினி நடித்தது. நட்டாலம் காளிவளாகத்துவீட்டில் பத்மாவதியம்மா விசாலாட்சியம்மா அப்போது முழுகருவடைந்திருந்தாள். முதல்மகனுக்கு ஒருவயது. பிரசவத்துக்காக நட்டாலம் வந்திருந்தாள். இரண்டாவது அண்ணனின் மனைவியின் தங்கைக்குத் திருமணம். ‘நல்வாதி’ ஆகையால் அனைவரும் சென்றாகவேண்டும். திருவனந்தபுரம் செல்வதென்பது அன்று ஒரு பெரும் கொண்டாட்டம். வீடே களிமயக்கில் இருந்தது. பூர்ணகர்ப்பிணியை பஸ்ஸில் கூட்டிக்கொண்டு போவது …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/96911

இணையதளம் வருவாய்
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, தினமும் மாமலர் படிப்பதால் அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கு ஆவலுடன் காத்திருப்பது எனக்கு வாடிக்கையாகி விட்டது. கடந்த பிப் 16 – வியாழன் அன்று தங்கள் இணையதளம் அப்டேட் ஆக தாமதம் ஆனது. பிறகு நேற்று இரவு. இதன் பொருட்செலவு பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். சந்தாவாக கட்டணம் நிர்ணயிக்கப்படுமாயின் மகிழ்வேன். தஞ்சை சந்திப்பின் போதும் குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கபட்டிருக்கலாம் என்று தோன்றியது. மாமலர் நூலாக வரும் முன்னரே அதை முழுவதுமாக படித்து முடித்திருப்பேன். இது உங்கள் உழைப்பு. …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/96908

கல்வி, தன்னிலை -கடிதம்
டியர் சார், கல்வி- தன்னிலையும் பணிவும் வாசித்தேன். மிக நுட்பமான கட்டுரை. தன் ஆளுமையைச் சிறிதளவும் சீண்டிப்பார்க்க விரும்பாத மாணவர்களை அதிகம் என் வகுப்பில் பார்த்திருக்கிறேன். பாடத்தைத் தாண்டி பேசப்படும் எதையும் அவர்கள் வறண்ட நகைச்சுவையின் மூலமே எதிர்கொள்ள விரும்புகிறார்கள். பாடமல்லாது பேசப்படும் எதிலும் காந்தியை துணைக்கு அழைத்துக்கொள்வது வழக்கம். ஆனால் ‘அவரு வெள்ளக்காரியோட டான்ஸ் ஆடறமாதிரி பேஸ்புக்ல இருக்கே சார்’ போன்ற எதிர்வினைதான் பெரும்பாலும் வரும். காந்தி முதல் மோடி வரை அவர்களிடம் அசைக்கவேமுடியாத ஒரு …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/96812

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–60
60. கனவுக்களப் பகடை அன்றும் தேவயானி பின்காலையில் படுத்து உச்சிப்பொழுதுக்குப் பிறகுதான் துயின்றெழுந்தாள். முந்தைய நாள் துயின்ற பொழுதை உடல் நினைவில் பதித்திருக்க வேண்டும். அந்த நேரம் வந்ததுமே இனியதோர் சோர்வு உடலில் படர்ந்தது. முந்தையநாள் துயின்றபோதிருந்த இனிமை நினைவில் எழுந்தது. வெளியே ஒளியென, காட்சிகளென, அசைவுகளென வண்ணங்களெனப் பரந்திருந்த புற உலகை முற்றிலும் வெளித்தள்ளி அனைத்து வாயில்களையும் அடைத்துக்கொண்டு தன் உள்ளே இருக்கும் மிக நுண்மையான ஒன்றை வருடியபடி தனித்திருக்க வேண்டுமென்று தோன்றியது. அது ஒரு …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/96927