Monthly Archive: April 2017

குமரியின் சொல்நிலம்
23-4-2017 அன்று வம்சி புத்தகங்களின் வெளியீட்டுவிழாவில் வாசிப்பைப் பற்றிப் பேசினேன். அதில் ஒரு பகுதியாக நாங்கள் அருணாச்சலப்பிரதேசம் சென்றதைப் பற்றிச் சொன்னேன். திட்டமிட்ட ஈரோடு கிருஷ்ணன் அருணாச்சலப்பிரதேசத்துக்கு ஒதுக்கியது வெறும் இரண்டுநாட்கள். அங்கே சென்ற பின்னர்தான் தெரிந்தது அது தமிழகத்தைவிடப் பெரிய நிலம். சென்று கொண்டே இருந்தோம், திரும்பி வந்துகொண்டே இருந்தோம். அருணாச்சலப்பிரதேசம் நமக்கு முற்றிலும் தெரியாத நிலம். இந்தியாவில் அதிகமாக அறியப்பட்ட நிலங்கள் வங்கம், கேரளம், கர்நாடகம். அடுத்தபடியாக உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரம். ஏனென்றால் அவை இலக்கியமாக …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/97840

“ஊமைச்செந்நாய்”: தமிழில் ஒரு பின்-காலனியக் குரல்
  கதையின் மையக் கதாபாத்திரமான ஊமைச்செந்நாய் எனும் கதைசொல்லிக்கு வெள்ளையன் பற்றிய பிம்பம் உயர்வானதாகவே இருக்கிறது. தாழ்வுணர்ச்சியுள்ள கதாபாத்திரமாகவே பல இடங்களில் வாசகனுக்குத் தென்படுகிறான். அவனது தாழ்வுணர்ச்சி என்பது ஒருவிதத்தில் அன்றைய இந்தியாவின் தாழ்வுணர்ச்சியாக ஒரு வாசகன் கருதவும் இடமுண்டு. ஊமைச்செந்நாய் என அவனுக்கு வழங்கப்பட்ட அடையாளத்தைக்கூட அவன் எதிர்த்து நிற்பதில்லை.   ஜெயமோகனின் “ஊமைச்செந்நாய்”: தமிழில் ஒரு பின்-காலனியக் குரல்  
Permanent link to this article: https://www.jeyamohan.in/97490

அறம் – வாசிப்பின் படிகளில்…
  எழுத்தாளர் அவர்களுக்கு வணக்கம்.   எனக்கு 35 வயது ஆகிறது, தமிழ் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டென்றாலும் அது தொடர்ச்சியாக இருப்பதில்லை. நிறைய படித்தலும் ஆழ படித்தலும் குறைவே, மிக பெரும்பாலானவர்கள் போல சுயநல வாழ்வே வாழ்க்கை என்று இருக்கும் தமிழன்.அறம் படித்தபின் இனி நிறைய படிக்க வேண்டும் என்ற ஆவலை உண்டு செய்தது. அறம் சிறுகதை தொகுப்பு என்னுள் மிக பெரும் மனமாற்றத்தை ஏற்படுத்தியது.  இப்படியொரு படைப்பை தந்தமைக்கு என் நன்றிகள். அனைத்து கதைகளும் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/97689

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–89
89. வேர்விளையாடல் முண்டன் கதையை முடித்தபின்னரும் பீமன் காட்சிகளிலிருந்து விடுபடவில்லை. முண்டன் எழுந்துசென்று அருகே நின்றிருந்த அத்திமரத்தில் தொற்றி ஏறி கனிந்தவற்றை மட்டும் பறித்து கைகளால் உடைத்து மலரச்செய்து உள்ளே செறிந்திருந்த செம்மணித்தசையை பற்களாலேயே சுரண்டி உண்ணத்தொடங்கினான். அவன் கிளைதாவிய அசைவில் விழிப்புகொண்ட பீமன் முதற்கணம் அவனை குரங்கென்றே உணர்ந்தான். எழுந்து கொண்டு “கனிந்துள்ளனவா?” என்றான். “ஆம், பசிக்கிறது” என்றபின் அவன் தாவி நிலத்தில் விழுந்து அணுகி கையிலிருந்த கனிகளை அளித்தான். பீமன் அவற்றை வாங்கி உண்டபின் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/97928

கிணறு
பத்மநாபபுரத்தில் நான் தெற்குத்தெருவில் குடியிருந்தேன். 1997 முதல் 2000 வரை. அரண்மனையின் பெரிய உப்பரிகையில் நின்றால் தெற்குத்தெரு தெரியும். அகலமான கம்பீரமான தெரு அது. அதில் ஒரு ஓய்வுபெற்ற காவலதிகாரியின் பாரம்பரியமான வீடு. 1912 ல் அவரது அம்மாவன் கட்டியது. அவர் தென் திருவிதாங்கூர் நாயர் பிரிகேடில் ஒரு காவலராக இருந்தார். பழையான ஆனால் உறுதியான வீடு. அக்காலக் கணக்கில் பங்களா. அகலமான கூடம். உள்கூடம். சாப்பிடும் அறையும் கூடமே. சிறியதோர் பக்கவாட்டு அறையை நான் என் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/6119

கொற்றவை -கடிதம்
முதல் பகுதி நீர்: அறியமுடியாமையில் இருக்கிறாள் அன்னை.அறியமுடியாமையின் நிறம் நீலம்.நீலத்தை மக்கள் அஞ்சுகிறார்கள்.நீலத்தை தன்னுள் கொண்டவள் கன்னி அவளை வணங்குகிறார்கள்.நீலக்கடலின் ஆழத்தை குமரி என்றும்,தமிழ் என்றும் சொல்லால் சுட்டினர் ஆனால் பொருளோ ஆழத்தில் மௌனமாக கருமையின் குளிரில் உள்ளது.எனவே அறியயோன்னமையிடம் அடிபணிவோம். முதல் தெய்வம் குமரி அன்னை தோன்றுகிறாள்.அன்னை தோன்றினால் அழிதலும்,குடிபெயர்தலும் நிகழ்கிறது;மதுரையும்,சோழமும் உருவாகிறது.ஆக்கலை யும்,அழிவையும் அன்னை என்றே பெயரிடுகிறாற்கள். இரண்டாம் பகுதி காற்று: கண்ணையன்னை பிறக்கிறாள் கண்ணைகியாக,கொற்றவை பிறக்கிறாள் வேல் நெடுங்கண்ணியாக.அன்னையருக்கிடையே சிறு மகவாக கோவலன் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/97728

மலம் -கடிதங்கள்
  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   தங்களின் மலம் என்ற பெயரில் வந்த கண்டனத்தை படித்தேன். தங்கள் கருத்துக்களைப் படித்து வருபவன். ஆசாரம் குறித்து எழுதியவரின் கருத்துக்களையும் படித்து வருபவன். சாதி குலம் சார்ந்து அவர் கருத்துக்களுடன் ஒத்துப் போக வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை. என் புரிதலில் அவர் சாதி சார்ந்தோ சாதியத்திற்காகவோ அவ்வாறு எழுதவில்லை.   நீங்களே பல வசைகளுக்குச் சொல்லும் பதில் – உங்கள் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்றும் அத்தகைய …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/97809

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–88
88. விழிநீர்மகள் படுக்கையறை வாயிலில் பார்க்கவன் “ஓய்வெடுங்கள், அரசே!” என்றான். அவன் விழிகள் மாறிவிட்டிருப்பதை யயாதி கண்டான். வெறும் நோக்கிலேயே நோக்கப்படுபவன் இளைஞனா முதியவனா என்று தெரியுமா? “தேவையில்லை என்று எண்ணுகிறேன். களைப்பாக இல்லை” என்று யயாதி சொன்னான். “பொழுது வீணடிப்பதற்குரியதல்ல என்று தோன்றுகிறது. நாழிகைக் கலத்திலிருந்து இறங்கும் ஒவ்வொரு மணல்பருவும் இழப்பதற்கு அரிய காலத்துளி என நினைக்கிறேன்” என்றவன் புன்னகைத்து “இளமை எனும் இன்மது” என்றான். பார்க்கவனும் உடன் புன்னகைத்து “ஆம், மானுட உடலின் இளமை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/97895

மலேசியாவில் ஒரு சந்திப்பு
  மலேசியாவில் நண்பர் நவீன் ஒருங்கிணைக்கும் நவீன இலக்கியப் பயிற்சிப்பட்டறைக்காக வரும் மே மாதம் இறுதியில் கொலாலம்பூர் செல்கிறேன். மலேசியாவில் கூலிம் ஊரில் சுவாமி பிரம்மானந்தா அவர்கள் ஒருங்கிணைக்கும் இலக்கிய முகாம் ஜூன் மாதம் 2, 3, 4 தேதிகளில் நிகழவிருக்கிறது. இந்தியாவிலிருந்து ஒரு நண்பர்குழு செல்லவிருக்கிறது. பதினைந்துபேர் வரை இங்கிருந்து சென்று கலந்துகொள்ளலாம். வரவிரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம். ஜெயமோகன்  
Permanent link to this article: https://www.jeyamohan.in/97758

சுஜாதாவின் குரல்
மகாபலி சுஜாதாவின் இந்தக்கதையை ஓர் இணைப்பினூடாக மீண்டும் வாசித்தேன். சுஜாதா ஏன் முக்கியமானவர் என்றும் எங்கே தவறுகிறார் என்றும் மீண்டும் காட்டியது இந்தக்கதை.என் மதிப்பீடுகளில் ஏதேனும் மாற்றமுண்டா என்று பார்த்தேன். இல்லை. முதல் ஒரு பத்தியில் மகாபலிபுரத்தின் ஒரு ஒட்டுமொத்தச் சித்திரத்தைக் கொண்டுவந்துவிடுகிறார். மிகச்சுருக்கமான வர்ணனைகள். மெல்லியகேலி கொண்ட விவரணைகள். சட்டென்று ஒலிக்கும் உடலிலிக் குரல். அந்த ’கொலாஜ்’ மிகத்திறன் வாய்ந்த கலைஞனால் மட்டுமே உருவாக்கப்படக்கூடியது. பிரித்து நீவி நோக்கினால் அதிலுள்ள தேர்வும் முரண்பாடுகளின் ஒத்திசைவும் சுஜாதா …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/97801

Older posts «