Daily Archive: March 21, 2017

‘பொய்பித்தல்வாதம் Vs பேய்சியன் வாதம்’ – 1 – இளையராஜா
  அறிதலின் பேரிடர்   ‘நாளை சூரியன் உதயமாகும்.’ மிகவும் எளிமையான கூற்று. இந்தக் கூற்று ஒரு அன்றாட உண்மையை முன்வைக்கிறது. ஐந்து வயது குழந்தை அறியும். ஆனால் இந்தக் கூற்றில் மனித குலமே இதுவரை களைய முடியாத பெரும் தத்துவ சிக்கல் ஒன்று ஒளிந்துள்ளது. இந்தக் கூற்றை நாம் உண்மையில் தர்க்க ரீதியாக சரியென நிறுவ முடியுமா? ஏனெனில் நேற்று நமக்கு நிகழ்ந்தது நம் அனுபவம். இந்த நொடி அனுபவத்தின் வழியே சென்றுகொண்டிருக்கிறோம். ஆனால் நாளை? …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/96439

குருநித்யா காவியமுகாம் , ஊட்டி 2017
  குருநித்யா காவியமுகாம் , ஊட்டி 2017 க்கான விண்ணப்பங்கள் நிறைவடைந்தன. ஓரிருநாட்களில் விரிவான மின்னஞ்சல் அனுப்பப் படும். ஊட்டியில் சந்திப்போம் ஜெ
Permanent link to this article: https://www.jeyamohan.in/96544

பொய்பித்தல்வாதம் ,பேய்சியன் வாதம், அறிவியல்
இயற்கைஎரிவாயு, அணுவுலை போன்றவை சார்ந்த போராட்டங்களை ஒட்டி இணையத்தில் சமீபமாக அறிவியலைப்பற்றிய விவாதங்கள் நிகழ்ந்தன.அவ்விவாதங்கள் அனைத்திலும் நான் பொதுவாகக் கண்டது அறிவியலைப்பற்றி கருத்து சொன்ன எழுத்தாளர்களுக்கு பொதுவாக அறிவியல்தத்துவம் பற்றி ஒன்றுமே தெரியாது என்பதும், மிகப்பொதுப்படையான புரிதலைக்கொண்டே அவர்கள் அறிவியலாளர்களை எதிர்கொள்கிறார்கள் என்பதும்தான். மறுபக்கம் அறிவியலைப்பற்றிப் பேசுபவர்கள் அறிவியல் என்பது மாறாத புறவய முறைமைகொண்ட ஒரு மதம் என்னும் கோணத்திலேயே பேசிக்கொண்டிருந்தனர். எண்பதுகளில் அறிவியலை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் பின் நவீனத்துவப் பேச்சுக்கள் இங்கே ஓங்கி ஒலித்தன. பின் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/96458

முழுதுறக்காணுதல் – கடலூர் சீனு
இனிய ஜெயம், சிலநாட்கள் விடுமுறையில் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த காரைக்குடி பிரபு எங்கேனும் ஒரு இந்தியப் பயணம் போகலாமா, என்றார். மனமெல்லாம் அப்போது கிராதத்தின் அர்ஜுனன் பயணத்திலேயே உழன்றுகொண்டு இருந்தது. கேதார்நாத் போகலாம் என்றேன். அங்கே இப்போது மைனஸ் பத்து சீதோஷ்ணத்தில் உறைபனி மேல் வெண்பனி மழை பொழிந்துகொண்டிருக்கிறது. பிரபு அங்கே உறைபனியில் ஊர் சுற்றி அனுபவம் கண்டவர். போகலாம் என்றார். சிவாத்மா தொடர்வண்டி பதிவு செய்தார். இணையத்தில் அங்குள்ள தட்பவெப்பம் சரி பார்த்தார். பேஸ்தடித்த முகத்துடன் ”அங்க …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/96495

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–49
49. விதையின் வழி தன் மனைவி தாரை சந்திரனின் மைந்தனாக புதனைப் பெற்று அவன் அன்னையென்றே தன்னை உணர்ந்து உடன் சென்றபின் தேவகுருவான பிரஹஸ்பதி நெடுநாள் தனியனாக இருந்தார். தன் உள்ளத்தை இறுக்கி இறுக்கி கல்லென்றாக்கிக் கொண்டார். மைந்தர் எவரையும் விழியெடுத்தும் நோக்காதவராக ஆனார். தன் மாணவர்களிலேயே இளமையும் எழிலும் கொண்டவர்களிடம் மேலும் மேலும் சினமும் கடுமையும் காட்டினார். அவர்களுக்கு உடல்வற்றி ஒடுங்கும் கடுநோன்புகளை ஆணையிட்டார். முன்னரே உடல் ஒடுங்கி அழகிலாத் தோற்றம்கொண்டிருந்த சுக்ரரையே தன் முதல்மாணாக்கராக …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/96552