Daily Archive: March 16, 2017

கருணை நதிக்கரை -3
இரவில் மணிமுத்தாறு அணை அருகே உள்ள பேரூராட்சிக்குச் சொந்தமான தங்கும் விடுதிக்குச் சென்றோம். 2008-ல் நானும் கிருஷ்ணனும், சென்னை செந்திலும், சிவாவும் ,பாபுவும் ஒரு மலைப்பயணமாக இங்கு வந்திருக்கிறோம். இதே தங்கும் விடுதியில் தங்கியிருக்கிறோம். இதைப்போல பேரூராட்சியால் கட்டப்பட்ட விடுதிகள் வேறெங்குமில்லை என நினைக்கிறேன். தனித்தனி கட்டிடங்களாக சுமார் பதினைந்து அறைகள் உள்ளன. நவீனக் கழிப்பறை, குளிர்சாதன வசதிகளுடன் கூடியவை. அமைப்பு ஒரு நட்சத்திர விடுதியளவுக்கு வசதியாக இருந்தாலும் அந்தளவுக்கு தூய்மையாகப் பேணப்படவில்லை என்று சொல்லலாம். ஆயினும் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/96387

சகரியாவின் ‘இதுதான் என்பெயர்’
நாதுராம் கோட்சே, வரலாற்றின் அழியா பக்கங்களிலெல்லாம் கரும் புள்ளிகளில் விழிக்கும் பெயர். காந்தியும் கோட்சேயும் ஒன்றுக்கொன்று நிரம்பும் ஆடி பிம்பமா என்ற கேள்வி தோன்றியது. வெறுப்பின் சொட்டு கசப்பை நாக்கில் தீட்டி நாலா பக்கமும் பரப்பி மொத்தமும் கசந்த எச்சிலை இறக்குவதைப் போல காந்தியை மெல்ல தொண்டைக்குழியில் இறக்கி வைத்திருந்தேன். காந்தியை சுட்டுத் தள்ளத்தான் வேண்டுமா? சந்திரசேகரனின் வெறி வந்து தொற்றிக் கொண்டது. ஒரு முஸ்லமான் மட்டும் காந்தியைக் கொன்றிருந்தால் என்னவாயிருக்கும். அகிம்சாவாதிகளால் அடிக்கப்படும் கோட்சேயின் உடல், …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/96166

கருணைநதி -கடிதங்கள்
தங்களின் கருணை நதி கரை கட்டுரை படித்தேன், எனது சொந்த ஊர் ஆழ்வார்குறிச்சி. ஆழ்வார்குறிச்சி, கீழாம்பூர், சுற்றுவட்டார கிராமங்களுக்கு சிவசைலபதியும் பரமகல்யாணியும் அப்பன் அம்மையை போன்றவர்கள் அவ்வளவு எங்கள் கிராம மக்கள் இறைவனிடித்தல் பாசமுள்ளவர்கள். நான் எனது தாத்தா அத்ரி தீர்த்தம் சென்று வந்ததை சொல்ல கேட்டிருக்கிறேன் இதுவரை சென்றதில்லை தாங்கள் சென்று வந்த கட்டுரை மிகுந்த மனநிறைவு அளிக்கின்றது. கட்டுரையில் ஒரு சிறு திருத்தம் சிவசைலம் கோயில் ஒட்டியுள்ள நதி கடனா (கருணை) ஆறாகும். இந்த …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/96406

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–44
44. வில்லுறு விசை நகுஷேந்திரனின் ஆணைப்படி கந்தர்வனாகிய வஜ்ராக்‌ஷன் தன் துணைவர் எழுவருடன் சென்று இந்திராணி தவம் செய்துகொண்டிருந்த மகிழமரச் சோலையை அடைந்தான். தன் சொல்லால் அதற்கு அனல்வேலியிட்டிருந்தாள் இந்திராணி. அவர்களின் காலடியோசையிலேயே சாய்கதிர் பட்ட முகிலென சிவந்து எரியலாயிற்று அது. எல்லைக்கு வெளியே நின்று பெருங்குரலெடுத்து அவளை அழைத்தான். இந்திரனின் நலம்திகழும்பொருட்டு ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை பிரம்மனுக்கு பூசெய்கை ஆற்றிவந்த இந்திராணி சோலைக்குள் மலர் கொய்துகொண்டிருந்தாள். பலமுறை எழுந்த அக்குரலைக் கேட்டு அவள் அங்கிருந்து …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/96382