Daily Archive: March 7, 2017

மார்ச் 6 -2017

இன்று காலை எழுந்து வழக்கம்போல நேராகவே வெண்முரசில் புகுந்து அடுத்தநாளுக்கான அத்தியாயத்தை எழுதி முடித்து கீழே வந்தபோது ஒரு குறுஞ்செய்தி. அஜிதனிடமிருந்து. ‘அப்பா, இன்றைக்கு அம்மாவுக்கு பிறந்தநாள்’ ஒருகணம் கண்கலங்குமளவுக்கு நெகிழ்ந்துவிட்டேன். அந்த ஒற்றைவரி அவனுக்கு அவன் அம்மாவை நன்குதெரியும் என்றும் அதைவிட என்னை தெரியும் என்றும் காட்டியது. காலையில் அருண்மொழியிடம் பேசினேன். அவள் அலுவலகம் கிளம்பிச்சென்றபோதும் முகத்தில் எதுவும் தெரியவில்லை. எனக்கு என் பிறந்தநாளே நினைவில் இருப்பதில்லை. சிங்கப்பூரில் பலமுறை என் பிறந்த மாதம் ஆறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96066

யோகமும் மோசடியும்

அன்புள்ள ஜெமோ நான் மணி மும்பையிலிருந்து. நித்தியை எதிர்த்த நீங்கள் ஏன் ஜக்கியை ஆதரிக்கிறீர்கள்? உங்கள் பதில் இது நித்யானந்தா செய்வது நோய்குணப்படுத்துதல். டிஜிஎஸ் தினகரன், சாது அப்பாத்துரை, மோகன் சி லாசரஸ் செய்வதுபோல. நோய் குணப்படுத்துதல் ஹீலிங் முறை என்று சொல்கிறோம். அதை டிஜீஎஸ் தினகரனோடு சம்பந்தப்படுத்துவது அநியாயமானது. குண்டலினி சக்தியால் விழிப்புறும் சக்தி மையங்களும், யோகியின் தொடலால் வரும் மின் அதிர்வுகளும் (பீட்டா நிலையும்) நிறைய உடலியல், உளவியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது அடிப்படை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96043

இலக்கியப்பெண் -ஜன்னல் தொடர்-கடிதம்

இனிய ஜெயம், பாரதி நவீனத்தமிழ் இலக்கியத்தின் தோற்றுவாய் எனினும் வாவேசு ஐயரின் குளத்தங்கரை அரசமரம் கதையை பெண் தொடரின் முதல் அத்யாயத்திலேயே நீங்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும் என எண்ணுகிறேன். பாரதியைக் காட்டிலும் சிறுகதை எனும் வகைமை மீது ”பிடி கிட்டி” யது ஐயருக்கே என விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள். மேலும் குளத்தங்கரை அரசமரம் முன்வைக்கும் அன்றைய பெண்ணின் யதார்த்தம் [ கைம்பெண் நாயகி  வாழ வகையின்றி தற்கொலை செய்து கொள்கிறாள்] முன், சமகாலத்தில் பெண் குறித்த பாரதியின் விருப்பக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/95983

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–35

35. சிம்மத்தின் பாதை நகுஷன் காட்டிலிருந்து குருநகரிக்கு கிளம்பியபோது வசிட்டர் அவனுடன் ஒரு அந்தணனை வழித்துணையாக அனுப்பினார். தன்னைப் புரந்த குரங்குகளிடமும் நண்பர்களிடமும் விடைபெற்று காட்டைக் கடந்து அருகிலிருந்த சந்தைக்குள் நுழைந்தான். அந்தண இளைஞன் அங்கே தங்கிவிட்டு மறுநாள் குருநகரிக்குச் செல்லலாம் என்றான். அந்தணர் தங்குவதற்குரிய விடுதியில் அவனை நன்மொழி சொல்லி வரவேற்றனர். வாயிற்காவலன் “காட்டாளர்கள் இத்திசைக்கு வரக்கூடாது. அங்கே உன் குலத்தோர் எவரேனும் இருப்பார்கள் என்றால் சென்று பார்!” என்றான். நகுஷன் ஒன்றும் சொல்லாமல் திரும்பி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96004