Daily Archive: March 6, 2017

சில கேள்விகள்
  இக்கேள்விகளை நக்கல் கிண்டல்களுடன் பலர் எழுதியிருந்தனர். ஆகவே சுருக்கமாக நானே விளக்கம் சொல்லிவிடுகிறேன். எனக்கு இப்போது கொஞ்சம் நேரமிருப்பதனால். என் பயணம் ஒன்று ரத்தாகிவிட்டது அ நீங்கள் அறிவியல் பற்றிய கட்டுரையில் சதிக்கொள்கைகளைத் தேடவேண்டியதில்லை என்கிறீர்கள். ஆனால் இந்தியாவுக்கு எதிரான பிளவுபடுத்தும் சதிகளைப்பற்றி நீங்கள்தான் பேசுகிறீர்கள் அறிவியல் கொள்கைகள், கண்டுபிடிப்புக்கள் போன்றவற்றை வெறும்சதிகளாகப் பார்க்கையில் அறிவியல்விவாதங்களுக்கும் அதுசார்ந்த முடிவுகளைநோக்கி செல்வதற்கும் வாய்ப்பில்லாமலாகிறது என்பது நான் சொன்னது ஆகவே அரசியல் உட்பட எங்கும் சதிகளே இல்லை என்றா …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/96058

யோகம்

Dog in yoga pose. French bulldog pup on a white background
[நகைச்சுவை] யோகம் என்றால் சும்மா இருப்பது. பெரும்பாலும் நம் சும்மாதான் இருக்கிறோம், ஆனால் யோகம் என்பது சும்மா இருக்கிறோம் என்று நமக்கே தெரியும் நிலை.Permanent link to this article: https://www.jeyamohan.in/7064

விசா, உலகம் யாவையும்…
காரி டேவிஸ்   அன்புள்ள ஜெயமோகன், அ.முத்துலிங்கம் அவர்களின் ‘விசா’ சிறுகதையை படித்தேன். படித்து முடித்ததிலிருந்து மனதில் ஓடிக்கொண்டிருக்கும் கதை. ‘விசா’ மெல்லிய அங்கதம் கூடிய நடையுடன் துவங்குகிறது. கோணேஸ்வரன் என்ற முதிய கணித ஆசிரியர் ஒரு இயற்கை உபாசகர். குறிப்பாக ஒரு வண்ணத்துப்பூச்சி ஆர்வலர். எட்டு வயதில் வண்ணத்துப்பூச்சியை வலையில் பிடிக்க கற்றுக்கொண்டு, இருபது வயதில் ஆயிரம் வகைகளை சேகரித்தவர். கல்யாணம் முடிந்து முதலிரவில் மனைவி யாமினியின் சேலை வண்ணங்களை பார்த்து பூச்சிவகை ஞாபகத்தில் எழ …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/95975

அறிவியல் -கடிதம்
  அன்பின் ஜெ, ரூபெல்லா தடுப்பூசி பற்றிய கடிதத்துக்கான பதிலில், இரண்டு முக்கியமான வாக்கியங்களை எழுதியிருந்தீர்கள்: 1.தமிழ்ச் சமூகம் அடிப்படை அறிவியலையே அறியாதது. அறிவியல் மனநிலை என்பது இங்கே அறிவியல் கல்வி கற்றவர்களிடம் கூட இல்லை 2.இன்னமும் நாட்டுமருத்துவம் போலிமருத்துவம் இங்கே ஓங்கியிருக்கிறது. நான் மருத்துவத்துறை சார்ந்தவன் இல்லை. அதனால், இது பற்றிக் கொஞ்சம் விக்கியில்தான் தேடினேன். கீழ்க்கண்ட ஒரு விக்கி பக்கம் கிடைத்தது. https://en.wikipedia.org/wiki/Indian_states_ranking_by_vaccination_coverage Indian states ranking by vaccination coverage – Wikipedia …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/96008

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–34
34. கைகள் அறிவது கைகளில் மைந்தனை ஏந்தியபடி அகத்தளத்திற்குச் சென்ற விபுலையும் வித்யுதையும் உடல் நடுங்கிக்கொண்டிருந்தனர். உயிரற்றவைபோல ஆகிவிட்டிருந்த தன் கைகளில் இருந்து மைந்தன் நழுவி விழுந்துவிடுவான் என்று வித்யுதை அஞ்சினாள். தங்கள் அறைக்குச் சென்று வாயிலை மூடியதுமே கையிலிருந்த குழவியை மெத்தைமேல் வீசினாள் வித்யுதை.  அருவருத்ததுபோல் கைகளை உதறியபடி சுவரோடு சாய்ந்து நின்று மூச்சிரைத்தாள். திகைப்புடன் அதை நோக்கியபடி ஏதோ சொல்ல நாவெடுத்து அவளே எண்ணியிராத சொற்களை சொன்னாள் “இது ஏன் இத்தனை எடை கொண்டிருக்கிறது?” …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/95935