Daily Archive: March 1, 2017

என் பெயர் டைகர்
  சென்ற சில மாதங்களாகவே நான் நிறைய வாசிப்பது முத்து காமிக்ஸ் மற்றும் இணையத்தில் ஆஸ்ட்ரிக்ஸ் ஒபேலெக்ஸ் காமிக்ஸ்களை. என் எண்ணங்கள் இருந்துகொண்டிருப்பது மகாபாரதத்தில். அதிகம் வாசிப்பவை அதைச்சார்ந்த ஆய்வுநூல்கள். சொல்லப்போனால் நவீன ஆங்கிலமே ஏதோ அயல்மொழி போலத் தோன்றுமளவுக்கு எங்கோ இருக்கிறேன். நாளிதழ்களை, அன்றாட விஷயங்களை மிகமிகக்குறைவாகவே வாசிக்கிறேன். அவ்வப்போது சமகாலத்திற்கு வந்துவிட்டு மீண்டும் பின்வாங்கிச்செல்கிறேன். ஆகவே எழுத்தின், வாசிப்பின் இடைவெளிகளில் இளைப்பாறுவதற்கு வேறுவகைநூல்கள் தேவையாகின்றன. எப்போதுமே தனிவாழ்க்கையில், சிந்தனையில் ரொம்பவும் சீரியஸாக இருப்பது எனக்குக் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/95845

தேவதேவன் – கடிதம்
  இனிய ஜெயம், கவிதை. நீர்நடுவே தன்னை அழித்துக்கொண்டு; சுட்டும்விரல்போல் நிற்கும் ஒரு பட்டமரம். புரிந்துணர்வின் பொன்முத்தமாய் அதில் வந்து அமர்ந்திருக்கும் ஒரு புள். தேவதேவன். ஒரு கவிஞன் தன்னைக் குறித்தும் தன்னில் வந்தமரும் கவிதை கணத்தை குறித்தும் சொன்ன கவிதை. கவிதை ஒரு கவிஞனால் எழுதப்படுவது என்ற தேவதேவனின் சொல்லை இக் கவிதையுடன் இணைக்கையில் இக்கவிதை கொள்ளும் ஆழம், அது உணர்த்தும் தவிப்பு தாள இயலா நிலைக்கு தள்ளுகிறது. கவிஞன் அவன் தோப்பில் ஒரு மரம் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/95623

புதியவாசகர் சந்திப்பு 2017, தஞ்சை
  நண்பர்களே, இவ்வாண்டு ஈரோட்டில் நடத்திய புதிய வாசகர் சந்திப்பு தீவிரமும் உற்சாகமுமாக கழிந்தது. இலக்கியம், வரலாறு, தத்துவம், குறியீடுகள், சிந்தனை முறைகள் என பல தலைப்புகளில் விசை குன்றாமல் இயல்பாக உரையாடல் நடைபெற்றது. புதியவர்களின் சில சிறுகதைகளும் கட்டுரையும் விவாதிக்கப்பட்டது. ஈரோடு சந்திப்புக்கு விண்ணப்பித்த அனைவரையும் அழைத்துக்கொள்ள இயலவில்லை, எனவே அந்த சந்திப்பின் தொடர்ச்சியாக வரும் மார்ச் 18,19 ஆகிய தேதிகளில் தஞ்சை, வல்லத்தில் உள்ள சுவாமி விவேகானந்தா கலை & அறிவியல் கல்லூரியில் அடுத்த …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/95814

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–29

tiger
29. பிறிதொருமலர் வண்ணக் கம்பளத்தை தைத்துச்செல்லும் ஊசிநூல் என காட்டுக்குள் சென்ற சிறுபாதையில் நடந்துகொண்டிருந்தனர். ஊர்வசி ஆலயம் அமைந்த சோலைவிட்டு கிளம்பும்போது பீமன் மூச்சைக்குவித்து இழுத்து தொலைவில் எழுந்த மெல்லிய நறுமணத்தை முகர்ந்து அத்திசை நோக்கி ஓநாய்போல மூக்கு கூர்ந்தபடி நடந்தான். அந்த மணம் மிக அருகே என ஒருகணம் வீசியது, மிக அப்பாலென மறுகணம் தோன்றியது. அது வெறும் உளமயக்கே என அடிக்கடி மாயம் காட்டியது. அந்த ஊசலில் ஆடிச் சலித்து அதை முழுமையாக விலக்கியபடி …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/95806