Daily Archive: February 13, 2017

சு.வேணுகோபால்- தீமையின் அழகியல் : பிரபு
[ 1 ] சு.வேணுகோபால் சிறுகதைகள் பற்றிய எனது முந்தைய கட்டுரை ஒன்றை தொடர்ந்து (https://padhaakai.com/2015/09/07/london-prabhu-on-su-venugopal/) ஜெயமோகன் பின்வரும் கேள்விகளை கேட்டிருந்தார் – ஏன் எழுத்தாளர்கள் தீமையை எழுதுகிறார்கள்? ஏன் அதில் எதாவது ஒளி தென்படாதா என்று ஏங்கி துழாவுகிறார்கள்? எழுத்தாளர்கள் இருவகையில் மானுட கீழ்மையை எழுதுகிறார்கள். மானுடத்தீமை என்பது மனிதனின் அகம் இயல்பாக வெளிப்படும் ஓர் உச்சம் என்று எண்ணும் படைப்பாளிகள் உண்டு. மானுட அறத்துக்கான தேடலில் மானுடக் கீழ்மையை கண்டு சீற்றம் கொண்டு எழுதுபவர்கள் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/95233

பின் தொடரும் நிழலின் குரல்- கடிதம்
      நான் வாசித்த ஜெயமோகனின் பெரு நாவல்களில் பின் தொடரும் நிழலின் குரல்முதல் நாவல்.பல ஆண்டுகளுக்கு முன் நான் வாசிப்பு முதிர்ச்சியற்றிருந்த காலத்தில்வாசித்த ரப்பர் என்னுள் எந்த அதிர்வுகளையும் ஏற்படுத்தவில்லை.புரியவில்லை என்றஒரு சொல் தான் நினைவில் உள்ளது. இரண்டு ஆண்டுகளாகத்தான் நான் ஜெயமோகனை இணையம் மூலமாகநெருங்கியிருந்தேன்     விஷ்ணுபுரமோ கொற்றவையோ வாசிக்க எனக்குத் துணிவில்லை.பின் தொடரும் நிழலின் குரல் எளிமையாக இருக்கும் என்று நினைத்தேன்.இள வயதில் சுஜாதா பற்றி “சுஜாதாவுக்கு எதையும் சுவாரஸ்யமில்லாமல் சொல்லவே தெரியாது.லாண்டரிக்குப்போட்ட …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/95251

கொலையிற்கொடியார்
அன்புள்ள ஜெ, இந்த செய்தியை படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். இது நடந்தது எங்கள் பகுதியில்தான். இந்தக் குழந்தைக்கு நடந்துள்ள கொடுமையைப் நினைக்க நினைக்க மனம் வெறுக்கிறது. http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/tamilnadu/112/79499/the-brutal-murder-of-7-year-old-girl-..-id-employee-arrested அதே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சந்தேகிக்க முடியாத ஒரு கொடூரனால் இந்தக் கொடுமை நடந்துள்ளது. அவன் முகத்தை பார்க்க பார்க்க இன்னும் பயமாக இருக்கிறது. கண்டிப்பாக சந்தேகம் கொள்ளமுடியாத வாலிபன். ஆனால் மனதில் இவ்வளவு பெரிய கொடுரம் மறைந்துள்ளது. ஆண் என்ற கொடூரம். அந்தப் பகுதி காவல்துறை அலுவலர்கள் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/95215

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–13
13. எண்கற்களம் “தோல் என்று ஒன்றைப் படைத்த பிரம்மன் மானுடரின் உள்ளுறுப்புகளை பிறர் பார்க்கலாகாதென்று எண்ணினான் என்பது தெளிவு. பாண்டவரே, மொழியென்று ஒன்றை படைத்த கலைமகள் மானுடரின் உள்ளத்தை பிறர் காணலாகாதென்று எண்ணினாள் என்றே கொள்க!” என்றான் முண்டன். உச்சிப்பொழுது எட்டியதும் அவர்கள் கோமதி வளைவுதிரும்பும் முனை ஒன்றை அடைந்து அங்கிருந்த அன்னசாலையில் உணவுண்டபின் அருகிருந்த ஆலமரத்தடியில் படுத்திருந்தனர். மரத்திற்குமேல் பறவைகள் ஓசையிட்டுக்கொண்டிருந்தன. அவ்வப்போது ஓர் எண்ணத்துளி என இலையொன்று சுழன்றிறங்கியது. “முற்றிலும் அறியப்படாமலிருக்கவும் மானுடரால் இயல்வதில்லை. …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/95273