Daily Archive: February 9, 2017

அசைவைக் கைப்பற்றுதல்
  புலம்பெயர்ந்த ஈழ எழுத்தாளரான பொ.கருணாகரமூர்த்தி எனக்கு மிகவும் பிடித்தமான படைப்பாளிகளில் ஒருவர். நகைச்சுவை உணர்ச்சியுடன் நுண்அவதானிப்புகளை நிகழ்த்தி மானுட இயல்புகளை சித்தரிப்பவர். அவரது ‘ஒரு கிண்டர்கார்ட்டன் குழந்தையின் கேள்விகள்’ என்ற கதையில் ஒரு சின்னப்பெண் கேள்விமேல் கேள்விகளாகக் கேட்கும். நான்கு கைகள் கொண்ட சாமிச் சிலையைப்பார்த்து ”சாமிக்குப்பின்னால் ஆரு நிக்கிறாங்க?”என்று ஐயப்படும். அது பெரும்பாலான குட்டிகள் கேட்கும் கேள்விதான். அந்த நூலுக்கு முன்னுரை எழுதிய ‘புரட்சிக்’ கவிஞர் இன்குலாப் அக்கதையை நகைச்சுவையாக பார்க்கவில்லை. ஒரு குழந்தை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/1535

நிழற்தாங்கல் – லக்ஷ்மி மணிவண்ணனின் புதிய முயற்சி
  நிழற்தாங்கல் என்ற பெயருக்கு குமரிமாவட்ட வரலாற்றில் ஒரு மேலதிகப்பொருள் உண்டு. இருநூறாண்டுகளுக்கு முன் அய்யா வைகுண்டர் தன் பக்தர்களிடம் ஊர்தோறும் நிழற்தாங்கல் அமைக்க ஆணையிட்டார். அவ்வாறு அமைந்த பலநூறு நிழற்தாங்கல்கள் இன்று ஆலயங்களாக அமைந்துள்ளன.   அந்நிழற்தாங்கல்கள் பழைய சமணத் தர்மசாலைகளுக்குச் சமானமானவை. பயணிகளுக்கு உணவும் தங்குமிடமும் அளிப்பவை அவை. சமணர்களின் அறங்களில் ஒன்றுதான் நிழற்தாங்கல். அதை பிறர் பின்னர் எடுத்துக்கொண்டனர். பழைய கிராமங்களில் அது ஒரு முதன்மையான அறக்கொடையாக அமைந்திருந்தது   அய்யா வைகுண்டர் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/95147

க.சீ.சிவக்குமார்- ஒரு கடிதம்
  அன்பு ஜெ , கா சீ சிவகுமார் மறைவு ஒரு அதிர்வு. நேரில் பார்த்ததில்லை என்பதால் மட்டும் அதிர்வு மெல்லிதா அல்லது வலியதா என்று தெரியவில்லை. குழந்தையின் முகத்தில் நீர் துளிகளை விசிறும் போது வரும் ஒரு சிரிப்பு, மகிழ்ச்சி, குறும்பு மிளிரும் தன்மையான எழுத்துக்கள் பெரும்பாலும். குசும்பு என்ற பேர் அந்த பக்கங்களில் சொல்வார்கள். அனைத்திலும் ஒரு மென்சிரிப்பு கொள்ளும்படியான வர்ணனை நிறைந்தவை அவரது சிறுகதைகள். மது அருந்திய பின் வரும் மிளிர் உலகை, …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/95078

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–9
9. சொற்சுழல் தன் அறையிலிருந்து நிலைகொள்ளா உடலுடன் வெளிவந்த தருமன் “அவன் இருக்குமிடமாவது தெரிந்தால் சொல்லுங்கள். நானே சென்று பார்க்கிறேன்” என்றார். குடிலின் முகக்கூடத்தில் நூலாய்ந்துகொண்டிருந்த சகதேவன் சுவடிகளை மூடிவிட்டு “இந்தக் காட்டில்தான் எங்கோ இருக்கிறார். எந்தக் குரங்கை தொடர்ந்து சென்றாலும் அவரை அடைந்துவிடமுடியும்” என்றான். “அவன் உளம் புண்பட்டிருக்கிறான். அன்று நாம் அவனை குற்றவாளியாக்கிவிட்டோம். முதன்மையாக நான்” என்றார். “ஒரு கணவனாக அவன் செய்தது சரிதான். நாம் அரசகுலத்தோராகவும் குடிமையறம் சூடியவர்களாகவும் மட்டுமே நம்மை உணர்ந்தோம்.” …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/95170