Monthly Archive: February 2017

ஜக்கி -இறுதியாக…
ஜக்கி – அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 1 ஜக்கி -அவதூறுகள், வசைகள்,ஐயங்கள் -2 ஜக்கி விவாதத்தை முடித்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். இந்த வகையான விவாதங்கள் நான் அடிப்படையான சிலவற்றை சொல்வதற்குரிய தருணங்கள் மட்டுமே. இறுதியாக மின்னஞ்சலில் வந்த சில வினாக்கள். இந்து மதத்திற்கு அமைப்பு தேவையில்லை, அதுவே அதன் வல்லமை என்றீர்கள். இப்போது அமைப்பு வேண்டும் என்கிறீர்களா? நம் சூழலில் ஒவ்வொரு விஷயத்தையும் ஒன்பதுமுறை சொல்லவேண்டியிருக்கிறது. ஆகவே மீண்டும். இந்துமதத்திற்குள் அமைப்புகள் என்றும் இருந்தன. நம் மடங்கள் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/95868

ஜக்கி கடிதங்கள் 8
  அன்புள்ள ஜெ நம்மாழ்வாரின் தோற்றத்தை வேடம் போடுகிறார் என்று சொன்ன ஜெயமோகன் ஜக்கியின் தோற்றம் குறியீடு என்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டு உங்கள்மேல். இது புதிது மகேஷ் * அன்புள்ள மகேஷ், நான் சொல்லும் விளக்கங்களை எதிர்கொள்ளமுடியாத தவிப்பு. இதற்கும் ஏராளமான முட்டாள்கள் கிளம்பி வருவார்கள் என்னும் நம்பிக்கை –வேறென்ன? நம்மாழ்வார் எங்கள் வழிகாட்டி. இந்த தளத்தில் இலக்கிய நிகழ்வுகளைத் தவிர்த்தால் இன்றும் அவர் மரபு சார்ந்த இயற்கை வேளாண்மை சார்ந்த நிகழ்ச்சிகளின் அறிவுப்பு மட்டுமே …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/95830

கல்வியழித்தல்
அன்புமிக்க திரு. ஜெயமோகன் வாசிப்பு பற்றி குமார் முல்லக்கல் அவர்களின் கேள்விக்கு மிக விரிவாகப் பதிலளித்திருக்கிறீர்கள். “கற்றாரை யான் வேண்டேன் ; கற்பனவும் இனியமையும்” என்னும் மாணிக்க வாசகரை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்றறிய ஆவல் மரபின் மைந்தன் முத்தையா *** Dear J, ஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து… . ”ராமகிருஷ்ண பரமஹம்சர் இதை இப்படிச் சொல்கிறார். காலில் முள் குத்தினால் இன்னொரு முள்ளைக் கொண்டு அதை எடுக்கிறோம், இரண்டையும் வீசிவிட்டு முன்னால் செல்கிறோம். அறியாமை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/2553

ஜக்கி கடிதங்கள் 7-பொய்யின் ஊற்றுமுகம்
ஜெ, ஜக்கி மீதான வன்மமும் இணைய வசையும் எங்கிருந்து துவங்கியது என நீங்கள் அறியத்தான் வேண்டும் இணைய எழுத்தாளர் அதிஷா என்பவரின் வேலை அது, பிப் 20 அன்று அவர் எழுதிய பொய்யும் அவதூறும் மட்டுமே நிறைந்த கட்டுரைதான் இணைய புரளிகளின் துவக்கம், விகடனில் கட்டுரைகள் வரவைத்து புரளிகளை பொதுவுக்கு கொண்டுசென்றதும் அவர்தான். கோவையை சேர்ந்தவரும், பலமுறை ஈஷா சென்றவரும் ஆன அந்த இதழாளர் மர்மமான காரணங்களால் தன்னெஞ்சறிந்தே பொய் சொன்ன கட்டுரை இது. http://www.athishaonline.com/2017/02/blog-post_20.html?m=1 உங்கள் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/95812

ஜக்கி கடிதங்கள் -6
ஜக்கி அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 1 ஜக்கி அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 2   ஆத்மநமஸ்காரம். இன்று தங்களின் வலைதளத்தில் சித்தாஸ்ரமம் பற்றி “கேரளத்திலுள்ள சித்தாஸ்ரமம் என்னும் தொன்மையான அமைப்பு கட்டற்ற பாலுறவை தன் உறுப்பினர்களுக்கு அமைத்துள்ளது. அன்னைக்கும் மகனுக்கும் இடையேகூட உறவு அனுமதிக்கப்பட்டுள்ளது அங்கு.” என்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுக்கு மேலதிகமாக சித்தாஸ்ரமம் பற்றி என்னென்ன விஷயங்கள் தெரியும் என்பதைக் குறித்த ஐயத்தாலேயே இந்தக் கடிதம். நம்முடைய பிதா உலக சாந்தியின் பொருட்டு நமக்களித்த வாழ்க்கை முறையே …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/95772

ஜக்கி -கடிதங்கள் 5
ஜக்கி அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 1 ஜக்கி அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 2   இனிய ஜெயம், அவர் அளிக்கும் ஞானத்தை குறைசொல்ல உங்களுக்கு என்ன தகுதி? உங்கள் ஆணவத்தைக் களைந்து யோசித்துப்பார்க்கவும் நேற்றைய இடுகையில் சீனிவாசன் என்பவரது பதிலில் இருந்த இதே வரிகளை கொஞ்சமும் பிசகாது அதற்க்கு முந்தையநாள் ராதாகிருஷ்ணனுடன் விவாதிக்கும்போது ராதாகிருஷ்ணன் என்னை கேட்டார். வரலாற்று, பண்பாட்டு பின்புலத்தில் வைத்து ஜக்கியின் பங்களிப்பை மதிப்பிடுகையில் அதை வாட்ஸப்பில் பரப்பி உய்யும் பக்தாள், அவரது ஆளுமையை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/95798

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–28
28. மலர்திரிதல் “புரூரவஸ் பன்னிரண்டு ஆண்டுகாலம் குரங்குகளுடன் அந்தக்காட்டில் இருந்தான் என்கின்றன கதைகள்” என்று முண்டன் சொன்னான். “காட்டில் அவன் பிறிதொரு குரங்கென்றே ஆனான். அறத்தின்பொருட்டு காமத்தையும் பொருளையும் விட்டவன் பின்னர் அவையிரண்டின்பொருட்டு அறத்தை விட்டான். பின்னர் மூன்றையும் விட்டு விடுதலை ஆகி விலங்கென்று மகிழ்ந்திருந்தான். சூரியன் சமைத்ததை உண்டான். மரங்கள் நெய்ததை உடுத்தான். பாறைகள் கட்டியதற்குள் துயின்றான்.  இருகாலமும் இல்லாமல் இருந்தான். நினைவுகளோ கனவுகளோ இல்லாமல் திளைத்தான்.” “முதற்கதிரை நெஞ்சில் அறைந்து ஒலி எழுப்பி எதிர்கொண்டான். …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/95774

ஜக்கி கடிதங்கள் 4
  ஜெ,   நான் ஈஷா யோக மையத்திலும் அருகே ஆதியோகி சிலை நிறுவப்பட்ட இடத்திலும் சென்று தேடுதேடென்று தேடினேன். அருகே எங்குமே காடு என ஏதும் இல்லை. காட்டை அழித்து சிலை நிறுவப்பட்டது என விகடன் செய்தி சொல்லி ஒரு படம் காட்டுகிறது சுற்றிலும் நெடுந்தொலைவுக்கு சோளக்காடு. சோளக்காடு எப்படி காடாக ஆகும்? அந்தப்பக்கம்கூட சோளக்காடுதான்.அது எப்படி ரிசர்வ் ஃபாரஸ்ட் ஆகும்? அப்படியென்றால் காட்டை அழித்து ஆக்ரமித்து சோளம்போட்டவர்கள் யார்? அவர்களெல்லாம் தண்டிக்கப்பட்டாயிற்றா?   ஆதியோகி …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/95802

ஜக்கி கடிதங்கள் – பதில் 3
ஜக்கி அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 1 ஜக்கி அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 2     அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   வெண்கடல், விசும்பு படித்து விட்டு செறிவான சொற்கள் கொண்ட நீலம் வாசித்தேன்.  உங்களுக்கு முன்பு சில கடிதங்கள் எழுதி இருக்கிறேன், ஒன்று உங்கள் இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டது – நல்லவேளையாக மற்றவை வெளியிடப்படவில்லை.  இனி உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுமுன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது “நீலம்”  தெரியாமல் எதையும் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/95788

வெறுப்புடன் உரையாடுதல்
  அன்புள்ள ஜெயமோகன் சார், நலமா. நானும் தங்களைபோல் அஹிம்சையில், காந்தியத்தில் நம்பிக்கை உள்ளவன். இந்த எனது நம்பிக்கை எனது குடும்ப வழி வந்ததாக கூட இருக்கலாம். என் பாட்டனார் விடுதலை போராட்ட வீரர். கள்ளுக்கடை மறியல், வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களில் பங்கெடுத்து சிறை சென்றவர். என் நினைவு தெரிந்த நாள் முதல் நாங்கள் இந்திய தேசியம் ஒன்றையே போற்றி வருகிறோம். தினமணி இணையத்தளத்தில் சமிபத்திய இலங்கை நிகழ்வுகள் குறித்த செய்திகள் பிரசுரிக்கப்பட்டது தாங்கள் அறிந்ததே. …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/2760

Older posts «