Daily Archive: January 22, 2017

ஜல்லிக்கட்டு இரு கருத்துக்கள்

  ஜெ,     நண்பர் Rajkumar Rathinavelu ஜல்லிக்கட்டு மற்றும் அது சார்ந்த அறிவியல்,வணிக,சமூக மற்றும் கலாச்சார பரிமாணங்களை ஆய்ந்து ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். எளிமையாகவும் தெளிவாகவும் பலவிஷயங்களை அக்கட்டுரை விளக்குகிறது.  (Tamil translation by Mathi)   A1 மற்றும் A2 , அவற்றின் விளைவுகள் :   இன்று மிகப்பரவலாக பேசப்படும் , பசுவின் பாலிலுள்ள A1 மற்றும் A2 வகை புரதங்களின் அறிவியலை சற்று அறிந்து கொள்வோம்.அவை அடிப்படையில் , …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94795

’வெண்முரசு’ – நூல் பதிமூன்று- ‘மாமலர்’

வெண்முரசு நாவல்தொடரின் பதிமூன்றாவது நாவல் பெப்ருவரி ஒன்றாம் தேதி தொடங்கும். இன்னமும் எழுத ஆரம்பிக்கவில்லை. எழுதலாமென ஓர் எண்ணம் வந்துவிட்டது. ஒரு தோராயமான வடிவமும் உள்ளத்தில் எழுந்துவிட்டது. இதற்கான மொழிநடையை நான் அடைந்ததும் தொடங்கவேண்டியதுதான். நாலைந்து பொய்த்தொடக்கங்கள் நிகழ்ந்தன. சரியாக வரவில்லை. வழக்கம்போல சரியாக நாவல் வராதபோது உருவாகும் நம்பிக்கையின்மை, சலிப்பு, இனம்புரியாத சினம். தனிமை. வரும் 26 ஆம் தேதி நண்பர்கள் சிலருடன் ஷிமோகா வழியாக கொல்லூர் மூகாம்பிகை ஆலயம் செல்கிறேன். குடஜாத்ரி மலை ஏறிச்செல்லலாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94747

நைஜீரியா என்னும் அறிவிப்பு

  நைஜீரியா : டிரம்புக்கு ஆதரவாக பழங்குடியினர் மேற்கொண்ட பேரணியில் வன்முறை போகிறபோக்கில் தமிழ் ஹிந்து நாளிதழில் இச்செய்தியை வாசித்தேன். இச்செய்திக்கு எந்த வகையான முக்கியத்துவமும் ஒரு பொதுவாசகனின் உள்ளத்தில் தோன்றமுடியாது. ஆனால் இதன் பின்னணி சற்று புரிந்தால் இது அளிக்கும் திறப்புகள் பல. பையாஃப்ரா குடியரசு என்பது என்ன? நைஜீரியாவும் இந்தியாவும் சமானமான வரலாறு கொண்டவை. நம்மைப்போலவே அவர்களும் பிரிட்டிஷாருக்கு அடிமைப்பட்டிருந்தனர். நாம் 1947ல் சுதந்திரம் அடைந்தோம். நைஜீரியா 1960ல்தான் சுதந்திரம் அடைந்தது. பிரிட்டிஷார் செல்வதற்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94754

மிருகவதை – கடிதம்

    அன்பின் நண்பருக்கு, ‘மிருக வதை எனும் போலித்தனம்’ எனும் தலைப்பில் இன்று உங்கள் தளத்தில் வெளிவந்துள்ள கார்த்திக்கின் கட்டுரை பல நினைவுகளைத் தூண்டி விட்டது. நல்லதொரு பதிவு. அவரது பட்டியலில் இன்னும் சிலவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். கனடா, அமெரிக்கா, நமீபியா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, ரஷ்யா, ஃபின்லாந்து, ஸ்வீடன் ஆகிய ஒன்பது நாடுகளில் பிரசித்தமான கடல்வாழ் உயிரினங்களான சீல் பிராணிகளின் வேட்டை (Seal hunting) பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருவதும், விலங்குகளின் மீது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94580

குறளுரை கடிதங்கள் -4

  அன்புள்ள ஜெ வணக்கம். குறளினிது உரைக்கு நன்றி. ஜுலை 7 2014ல் வெண்முரசு விவாதம் கடிதத்தில் உங்களிடம் திருக்குறள் உரை எழுதவேண்டும் என்று ஒரு விண்ணப்பம் வைத்து இருந்தேன். இன்று உங்கள் குறள் இனிது உரையை கேட்டுக்கொண்டு இருக்கிறேன். யதார்த்தமாக கீழ்கண்ட இணைப்பை திறந்தேன் அதில் திருக்குறளுக்கு உரைவேண்டிய விண்ணப்பம் உள்ளது. அது எழுத்தாக உள்ளது என்பதே மறந்துவிட்டது. கேள்வி கேட்டது ஒரு இனிய தருணம். உரைமுழுவதும் கேட்டு கடிதம் எழுதவேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94711

ஜல்லிக்கட்டு -கடிதம்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்..ஜல்லிக்கட்டு பற்றிய பதிவுகளை படித்தேன்..பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னால் சூடு பிடிக்க ஆரம்பித்த போது என் முதல் எண்ணம் ” மாட்டுப்பொங்கல்வரை அனைத்து அரசியல் கட்சிகளும் கொதிப்பார்கள், அதன் பின் அடுத்த பொங்களுக்கு 4 நாட்கள் முன் மீண்டும் குரல் கொடுக்க ஆரம்பிப்பார்கள்..இடைபட்ட நாட்களில் இதற்க்காக கடந்த வருடம் முழுவதும் உழைத்துக்கொண்டிருந்த சிறு எண்ணிக்கையில் உள்ள அமைப்பினர் உழைத்துக்கொண்டிருப்பார்கள்” என்று தான் இருந்தது.. ஆனால் கடந்த ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94780